(Reading time: 32 - 64 minutes)

குன்னூர்

ரவு வெகுநேரமாகியும் உறக்கம் வராமல் துஷ்யந்த் புரண்டு புரண்டு படுத்தான்.. இங்கு வந்த இத்தனை நாட்களில் கங்கா அவனை பலதடவை அலைபேசியில் அழைத்திருந்தாள்.. ஆனால் அவளது அழைப்பு எதையும் அவன் ஏற்கவில்லை… அவள் அதற்காக வருத்தப்படுவாள் என்று தெரிந்தும், அவன் அவளிடம் பேசாமல் இருந்தான்…

அவளோடு பேசுவதை தவிர்க்க வேண்டும்… எத்தனை முறை அவள் இவனை அப்படி ஒதுக்கியிருப்பாள்..  அதேபோல தானும் செய்ய வேண்டுமென்றெல்லாம் அவன் நினைக்கவில்லை… இன்னும் சொல்லப் போனால் இத்தனை வருடங்கங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் அவளோடு பேசாமல் அவனால் இருக்க முடியாது… இந்த முறை தான் ஒருவாரத்திற்கு மேலாக அவளோடு பேசாமல் இருக்கிறான்…  அதை நினைத்து அவனுக்கே ஆச்சரியம் தான்… அதற்கு காரணம்.. அன்று தூக்கத்தில் கூட இவனுடைய பெயரை கங்கா உச்சரித்தது தான்… அந்த சந்தோஷம் தான் அவளோடு பேசாமல் இருந்தாலும், அவனுக்கு  உற்சாகத்தை கொடுத்தது.. இருந்தும் அவளோடு பேச ஏக்கமாகவும் இருந்தது..

ஆனாலும் அவன் கங்காவிடம் பேசாமல் இருக்க காரணம், எங்கே அவள் மீண்டும் பழைய பல்லவியையே பாடுவாளோ என்று தான்… இவன் கல்யாணத்தை நிறுத்தியதற்கு கோபப்படுவாளோ.. நான் உங்களை விட்டு விலகினா தான் நீங்க உங்க வாழ்க்கையை பத்தி யோசிப்பீங்க.. என்று கோபத்தில் ஏதாவது முட்டாள்தனமாக செய்வாளோ என்று பயந்து, அவனே கங்காவை விட்டு கொஞ்ச நாள் விலகியிருக்க முடிவு செய்தான்…

கண்களை மூடி உறங்க முயற்சித்தும் உறக்கம் வராமல் இருக்கவே, எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவனுக்கு, இதேபோல் ஆறு வருடத்திற்கு முன்பு இதே அறையில் இதுபோன்று உறங்காமல் இருந்த நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது..  வந்தது என்று சொல்வதை விட, அவனே ஞாபகப்படுத்திக் கொண்டான் என்று சொல்லலாம்… அதுவும் குறிப்பாக அந்த ஒரு இரவு..

அப்போதெல்லாம் இரவு நேரங்களில் அவனுக்கு சரியாக உறக்கம் வராது… முன்பானால் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் விளைவால் உறங்கி விடுவான்.. பின் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை நிறுத்தியப்பின், கங்காவின் அருகாமையே அவனுக்கு உறக்கத்தை வரவைக்கும்… ஆனால் அதன்பின் நிறைய விஷயங்களை மனதில் போட்டு குழப்பி, யோசித்து அதனால் உறக்கத்தை தொலைத்தான்…

அன்று இரவும் அப்படித்தான் உறக்கம் வராமல் படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்… அருகில் கங்கா, இவன் நெடுநேரம் இம்சித்ததினால் உண்டான உடல் அயற்சியால் உறங்கிக் கொண்டிருந்தாள்.. எங்கே புரண்டு புரண்டு படுத்தால், அதனால் அவளின் உறக்கம் கலையுமோ.. என்று நினைத்தவன்,  சிறிது நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வரலாமா..?? என்று சிந்தித்தப்படி கட்டிலில் இருந்து அவன் இறங்கிய போது, அந்த அசைவில் கண்விழித்த கங்கா..

“என்னப்பா என்ன இன்னும் நீங்க தூங்கலையா..??” என்று சேலையை சரி செய்தப்படியே எழுந்து உட்கார்ந்தாள்.

அவள் எழுந்து உட்கார்ந்ததும், திரும்ப கட்டிலில் உட்கார்ந்தவன், “இல்ல எனக்கு தூக்கம் வரல..” என்றுக் கூறினான்.

“என்ன ஏதாச்சும் உடம்பு சரியில்லையா..?? என்று அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தவள், தலை வலிக்குதா..??” என்றுக் கேட்டாள். அவன் இல்லையென்று தலை அசைத்ததும்,

“பசிக்குதா..?? சாப்பிட ஏதாச்சும் எடுத்து வரட்டுமா..??” என்றுக் கேட்டாள்.

“இல்லை எனக்கு எதுவும் வேணாம்… நான் கொஞ்ச நேரம் வெளியில வாக்கிங் போயிட்டு வரேன்.. நீ தூங்கு” என்று அவன் எழ முயற்சித்த் போது,

“இல்லை வேண்டாம்.. இந்த நேரம் வெளியில ஓவர் பனிப்பெய்யும்.. அப்புறம் உடம்புக்கு ஏதாவது வந்துடப்போகுது.. ஆமாம் சாயந்திரம் கொஞ்ச நேரம் தியானம் செஞ்சீங்களா??” என்றுக் கேட்டாள்.. அவன் செய்ததாக தலை அசைத்ததும்,

அவனை தன் மடியில் படுக்க வைத்தவள், “நான் தலையில மெதுவா மசாஸ் பண்ணி விட்றேன்.. நீங்க அப்படியே கண்ணை மூடுங்க.. உங்களுக்கு தூக்கம் வரும்..” என்றாள்.

அவனோ, “ இல்லை மசாஜ்ல்லாம் செய்ய வேண்டாம்.. நீ பாட்டு பாடு நான் அப்படியே தூங்கறேன்..” என்றான்.

“பாட்டா… எனக்கு தாலாட்டு பாட்டெல்லாம் தெரியாது… சினிமால வர மெலடி பாட்டு வேணும்னா பாட்றேன்… நீங்க தூங்குங்க..” என்றவள், தனக்கு தெரிந்த மெலடிப் பாட்டுக்களை ஒவ்வொன்றாக அவன் தலையைக் கோதியப்படியே பாட, அவள் மடியில் படுத்தப்படி இமைக்காமல் அவளையே பார்த்திருந்தவனுக்கு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை… அவள் மடியில் படுத்தப்படியே உறங்கிப் போனான்… இப்போதும் அந்த நினைவுகள் தந்த சுகத்தில் அப்படியே படுத்தவன் உறங்கிவிட்டான்.

ப்ரண்ட்ஸ் இந்த சின்ன சின்னதா வர கங்கா, துஷ்யந்தோட fb உங்களை நல்லா குழப்புதுன்னு புரியுது.. இன்னும் 3 எபிசோட்க்கு பிறகு, அவங்களுக்குள்ள என்ன உறவு.. எதனால இப்போ இப்படி இருக்காங்கன்னு கொஞ்சம் தெளிவுப் படுத்துறேன்அதுக்குள்ள நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு உங்க கெஸ் பத்தியும் எனக்கு சொல்லுங்க.. வர வர கமெண்ட்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருதுநான் ரொம்ப மெதுவா கதையை நகர்த்துறேனோஇருந்தாலும் அடுத்த அத்தியாயத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா சஸ்பென்ஸை உடைக்கப் போறேன்நீங்களும் உங்க கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துக்கோங்க.. நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.