(Reading time: 17 - 33 minutes)
Vata malli
Vata malli

  

சூட்கேஸை சுமந்துட்டு காலேஜுக்கு போகிற கையில தூக்குப் பையும் அதுவுமா... சே!”

  

மருமகளை அத்திப்பூப் போல் பாசமாய்ப் பார்த்த மாமியார் வெள்ளையம்மா, அவள் தலைக்கு மேலே உள்ள ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அதே வைக்கப்படப்பு பக்கத்தில் கொழுந்தன் பெண்டாட்டியின் நடமாட்டம்.

  

பூனக்கண்ணி... பார்க்கிற பார்வையைப் பாரு... முதல் தடவ. நான் பெத்த பிள்ளை காலேஜுக்குப் போகும் போதும், வேணுமுன்னே குறுக்கே வந்தாள். எல்லாம் வெளங்காம போயிட்டு... சுயம்பு. கொஞ்சம் தண்ணிரை குடிச்சுட்டுப் போ!”

  

சுயம்புவுக்கு, அண்ணன் மகன் தண்ணிர் கொண்டு வந்தான். அதைக் குடித்துவிட்டு, அவன் புறப்படப் போனபோது, பூவம்மா மயினி, மார்பைத் தட்டி, சுயம்புவுக்குத் தைரியம் சொல்வது போல் எல்லோருக்கும் சொன்னாள்.

  

திரும்பிப் பாராம போயிட்டு, திரும்பிப் பாராம வரணும் என் மருமவனே. மாரியாத்தா இப்ப என்கிட்ட இருந்து ஒங்கிட்ட வாராள். சீதாலட்சுமியும் நீங்க கொடுக்கிறத வாங்கிக்கிட அங்க தயாரா இருக்காள், ஏடா கூடம் செய்ய மாட்டியளே...”

  

சுயம்பு, பலமாகத் தலையாட்டிவிட்டு, வாசலைத் தாண்டினான். அவர்கள் சொல்லிக் கொடுத்ததுபோல் ஊர் வழியாகப் போகாமல், இரண்டு பக்கமும் வரிசை வரிசையாய் நீளவாக்கில் உள்ள குடிசை வீடுகளின் இடுக்கு வழியாய் நடந்தான். அநத்க் காலத்து வழக்கப்படி, ‘மூணே முக்கால் பிடி’ இடைவெளியோடு கட்டப்பட்ட மண் சுவர்கள். அந்த இடுக்கு வழியாய்ச் சென்றவன், ‘வண்ணாக்குடி’ வழியாய்ப் பருத்திக் காட்டைத் தாண்டி, கருவேல மரக்காட்டிற்குக் கிழக்குப் பக்கம் போய் விட்டான். அங்கேதான், சீதாலட்சுமியக்கா சமாதி இருக்குது. “தம்பி தம்பி” என்று அவனையே வளைய வந்தவள் பட்டறைச் சட்டம்போல் பரந்த உடம்பும், விரிந்த முகமும் கொண்டவள். திடீரென்று இறந்துவிட்டாள்.

  

ஐந்தாண்டு காலம், குழந்தைப் பேறு இல்லாமல் கிடந்தவள் இந்த சீதாலட்சுமி, முதலாண்டு முடிந்தவுடனேயே, மாமியார்க்காரி, அவளைச் சொல்லுக்குச் சொல், “மலடி... மலடி...” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.