Sollamal thottu sellum thendral... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty eighth novel in Chillzee.
வணக்கம் நட்பூஸ்,
இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இது சில வருடங்களுக்கு முன்பே நான் எழுத யோசித்த கதை. கதையில் ஹீரோ ஹீரோயினுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் நான்ட்ஸ் - எஸ்.கே'வே சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஸோ, இதுவும் ஒரு நான்ட்ஸ் & எஸ்.கே கதை :-)
ஒரு விபத்தில் பழைய நினைவுகள் இழந்து விடுகிறான் எஸ்.கே. அவனுக்கு நினைவு இருப்பது ஒன்றே ஒன்று - அது 'நந்தினி'!
யார் நந்தினி என்று புரியாமல் தவிப்பவன் ஒரு கிராமத்தில் டாக்டராக இருக்கும் நந்தினியை சந்திக்கிறான். அவள் யார் என்று நினைவில்லை என்றாலும் அவள் மீது காதல் வசப் படுகிறான்.
எஸ்.கே'விற்கு பழைய வாழ்க்கை நினைவில் இல்லை என்பது தெரியாமலே, நந்தினியும் அவனை விரும்புகிறாள். எங்கே உண்மையை சொன்னால் நந்தினி அவனை நோயாளியாக பார்க்க தொடங்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் முதலில் உண்மையை மறைத்த எஸ்.கே, நந்தினி காதலை சொன்ன பிறகு எப்படி அவளிடம் உண்மையை சொல்வது என்று புரியாது தயங்குகிறான்.
நந்தினிக்கு உண்மை தெரிய வந்ததா? எஸ்.கே'விற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? நந்தினி - எஸ்.கே காதல் வெற்றிப் பெற்றதா???
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.