(Reading time: 149 - 298 minutes)

 “மது,  நீ நினைப்பதுபோல் அல்ல. நான் என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். உறவையும் நட்பையும் உன்னைப் போலவே மதிப்பவன் நான். ஆனால், இந்த உலகத்தை உன்னைப்போல முழுமையாக  நம்ப மாட்டேன். உறவுகள் சேர்ந்து இருப்பதுதான் அவற்றை மதிக்கும் விதம் என்று நீ நினைக்கின்றாய், ஆனால், உறவின் நன்மைக்காக தேவைப்பட்டால் பிரிந்து நின்றும்கூட உறவினை காப்பாற்றலாம். அப்பாவிற்கும் சீதாம்மாவிற்கும் இடையில் என்னை முன்னிட்டு பிரிவுவந்துவிடக் கூடாது என்றுதான் நானே விரும்பி தாத்தாவுடன் சென்றேன்.” என்றான்.

“சரி, அதற்காக இப்படி வீட்டை எட்டிக் கூட பார்க்காமல் இயந்திரம் போல் உழைத்து என்ன லாபம் அடைந்தீர்கள்?. ஜட்ஜ் அங்கிள், உங்களைபற்றி ரொம்பவும் கவலையாக சொல்வார். எப்போதுமே பிஸியாக இருக்கிறான். ஓய்வு என்பதே இல்லாமல் உழைக்கிறான் என்பார். ”.

”உண்மைதான், மது. தொடர்ந்து  ஆறு வருடங்கள் ஓய்வு என்பதே இல்லாமல் ஒரு இயந்திரம்போல் கடுமையாக உழைத்து தொழிலில் உயரிய நிலையினை அடைந்துள்ளேன். ஒருவேளை நான் மிக சாதாரண  நிலையில் இருந்திருந்திருந்தால் அப்பாவோ சீதாம்மாவோ குற்ற உணர்வில் தவித்துபோகக் கூடும் என்று நினைத்தேன். என்னைபற்றி அவர்கள் கவலைபடக் கூடாது என்று விரும்பினேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றியும் அவர்களை எப்படி மகிழ்விக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன்.”

“ஓ… புரிகிறது. உங்களின் எண்ணம் உயர்வானது.  ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது   நேசிப்பது என்பது, அது காதல், பாசம், நட்பு எதுவாக இருந்தாலும்  நாம் எந்த நிலையில் இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும்  நம்மை கையினைபற்றி எழுப்பி நிமிர்ந்து வாழவைக்கும் என்பது உறுதி. நான் அந்த மோசமான விபத்திலிருந்து மீண்டு வந்ததே அதனால்தான். உங்களுடைய இன்னொரு பக்கத்தை தெரிந்து கொண்டது   நிறைவாக இருக்கிறது “ என்று மதுமதி கூறினாள்.

இரவு குளிக்கும்போது முதுகில் காயம்பட்ட இடத்தில் எரிந்தது. தொடர்ந்து மதுமதி கூறியது நினைவிற்கு வந்தது. சகியே, நீ வாழும் காலத்தில்தான்  நானும் வாழ்கிறேன்…  நீ வாழும் இடத்தில்தான் நானும் வாழ்கிறேன்…  நட்பையும் உறவையும் உயிரென பேணும் உன்னுடன்தான் வாழவும் போகிறேன்… உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் உனக்குத் தருவேன் இது நிச்சயம்… என்று உறுதி செய்து கொண்டான்.

துமதியுடன் பழகிவிட்டதால், சிலசமயங்களில் மாலை நேரத்தில் வாக்கிங் சென்று வந்தான். இப்போதெல்லாம், மதுமதி அவனிடம் ரெமியின் திருமணப்பேச்சை பேசுகிறாள்.

“அது அவளுடைய விருப்பம் மது… நாம் தலையிடக் கூடாது”

“அவளின் விருப்பம் அறிந்துதான் சொல்கிறேன். உங்களுக்கு விருப்பம் எனில் ரெமி மறுப்பு சொல்ல மாட்டாள்.. என் அண்ணனுக்கு என்ன குறை சொல்லுங்கள்?.”

“ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் ஜொள்ளுவிடுவதைத் தவிர வேறு குறை எதுவும் இல்லை.” அவன் உண்மையை உடைத்தான்.

“மனதில் ஒரு உறுதி இல்லாதபோது… அவ்வாறு பார்ப்பது இயல்புதானே. அவர் என்ன உங்களைப்போல் விஸ்வாமித்திர முனிவரா? பிடித்து தள்ளி சபிப்பதற்கு… அப்படிப்பட்ட நீங்களே சமயத்தில் என்னமாக பார்க்கிறீர்கள்”

“யாரைப் பார்த்தேனாம்…?”

“ஒரு ஆரஞ்சு வண்ண லெஹங்கா போட்ட பெண்ணை…” மானம் போச்சு… . அவளும் கவனித்திருக்கிறாள். கோழிமுட்டை சைஸில் கண்ணை உருட்டினால் எவன்தான் பார்க்கமாட்டான்?.

“இல்லை… அன்றைக்கு நான் வேறு கவனத்தில் இருந்தேனா… “ சமாளித்தான். பதில் பேசாமல்  நடந்த அவள் திடீரென தடுமாறினாள். அவளை அவன் விழாமல் பிடிக்க, அவளினை பிடித்தபிடி நொடியில் இறுகி வேறு சேதி சொன்னது. அது இருவருக்குமே புரிந்தது.

“இப்போது ஹார்மோன் செய்யும் செய்யும் வேலையை புரிந்து கொண்டீர்களா….?” அவள் கேள்வியில் சுதாரித்தான். அவளுடைய அருகாமையினால் சட்டென ஒரு வெறுப்புணர்ச்சி கிளம்பிட உடல் பதற,

“இதற்கு மேல்  நெருங்கினால் என் சைக்காலஜி என்ன செய்யும் என்று புரிந்து கொள்வாய். அடி தாங்கமாட்டாய்” என்று அவளை விலக்கி நிறுத்தினான்.

“ஒரு விசயத்தை நிருபிக்க உடனேயே பிராக்டிக்கலாக செய்து காட்டுவாயா?”

“ஹலோ, நான் தாலி கட்டிக் கொண்ட என் கணவனிடம் ஒரு விசயத்தை நிருபிக்க முயற்சித்தேன்..”

“இதற்கு வேறு ஏதும் உள்ளர்த்தம் உள்ளதா… டியர்”

“இல்லை. ஆனால், இதற்கும் புரியவில்லை என்றால், கட்டி வைத்து உதைத்து புரிய வைப்பேன், டார்லிங்.. சாம.. தான… பேத… தண்டம்.. தெரியுமல்லவா…”

“சரியான கேடி. சரி, நான் ஒப்புக் கொள்கிறேன். உன் அண்ணன் அன்று கண் செய்த பாவம் என்று பார்த்துவிட்டான். இனி பார்க்க மாட்டான்தானே?”

“அவரை பற்றி நான் ஒன்றும் உறுதி தர முடியாது. அது ரெமியின் சாமர்த்தியம். நான் ரெமிக்காக பேசுகிறேன். அவ்வளவுதான்”

“அதாவது.. அவள்தான் அவனுக்காக உருகுகிறாள் என்கிறாய். நான் ரெமியிடம் பேசுகிறேன். சரியா…” என்றவன், அவளுக்கும் அவனுக்கும் இடையே முழம் போடுவதுபோல் கையை நீட்டி,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.