(Reading time: 49 - 98 minutes)

“MY DEAR BOYS, THIS IS AN IMPORTANT OFFICIAL CONFIRMATION. EVERYBODY KNOWS THAT, COMING SEPTEMBER-28 IS THE BIRTHDAY OF THE GREAT MARTYR AND THE FREEDOM FIGHTER BHAGATH SINGH. 

நாம் இப்ப நின்னுகிட்டு இருக்கிற இந்த மண், விடுதலைப் போராட்டத் தியாகி-மாவீரன் பகத்சிங்கோட உடல் தகனம் செய்யப்பட்ட ஹுசைனிவாலா மண். இந்த மண்ணில் நின்று நம் தாயகத்தைக் காக்கும் பாக்கியம் நமக்குக் கெடைச்சதுல நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

வர்ற 28-ஆம் தேதி, மாவீரன் பகத்சிங் பிறந்தநாளன்று, மரியாதைக்குரிய நம்முடைய பாரதப் பிரதமர் பிரதீப் சவான் அவர்கள், ஹுசைனிவாலா எல்லையில் அமைந்திருக்கின்ற பகத்சிங் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்த இருக்கிறார். 

SO, எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எனவே, நாம இன்னும் கொஞ்சம் உன்னிப்பாக செயல்பட்டு அதை முறியடிக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம் . LET’S DO IT AND GUARD THE NATION SAFELY.” என்று அவர் பேசி முடித்திருந்தார்.

“YES சார்...!” என்ற கர்ஜனை கூட்டத்தில் இருந்து மிக பலமாக எதிரொலித்திருந்தது. அடுத்த ஐந்தாவது ஆவது நிமிடத்தில் எல்லாரும் அவரவர் பணிகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.

காலை பத்து மணி செய்திகளுக்காக, டிவி திரையைப் பார்த்துக் கொண்டே, காக்கிச் சட்டைக்குள் மாறியிருந்தார் ஹுசைனிவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா. நாற்பது வயதைக் கடந்திருந்தும் தோற்றத்தில் இன்னும் இளமையாகத் தெரிந்தார். சற்று நேரத்தில், டிவி திரையில் இருந்து பஞ்சாப் டுடே செய்தி சேனலின் செய்தி வாசிக்கும் பெண், அழுத்தம் திருத்தமாக பஞ்சாபி மொழியில் பேச ஆரம்பித்திருந்தாள்.

“வணக்கம். இன்றைய முக்கியச் செய்திகள்”

“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா சபை முழு ஆதரவு.”

“செப்டம்பர்-28. விடுதலைப் போராட்டத் தியாகி – மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம், ஹுசைனிவாலா எல்லையில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் பிரதீப் சவான், பகத்சிங்கின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.”

“அதையொட்டி ஹுசைனிவாலா இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப் பட்டுள்ளது.”

“பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வுத் துறை நிறுவனமான NIA (நேஷனல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி)

தெரிவித்துள்ளதையடுத்து, ஹுசைனிவாலா எல்லையோர கிராமங்களில் 24 மணி நேர தீவிர போலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.”

“பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய “SURGICAL - STRIKE”-க்கு ஆதாரம் கேட்ட எதிர்கட்சிகளுக்கு, இந்திய இராணுவ தலைமை தளபதி கடும் கண்டணங்களைத் தெரிவித்துள்ளார்.”

“பாகிஸ்தானால் தன் அப்பா இறக்கவில்லை. போர் தான் அவரைக் கொண்டிருக்கிறது” என்று பதிவு செய்திருந்த டெல்லியைச் சேர்ந்த இராணுவ வீரரின் மகளுக்கு ஆதரவும் எதிர்ப்பு அலையும் வலுத்து வருகின்றது.”

“சமீபகாலமாக சினிமா நடிகர்களின் ஆதிக்கம் அரசியலில் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து. ”

என்று வேக வேகமாக வாசித்து முடித்திருந்தாள்.

டிவியைப் பார்த்துக்கொண்டே ஒரு வழியாக காலை சிற்றுண்டியை முடித்திருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அண்ணார்ந்து குடிக்க முற்பட்ட அடுத்த வினாடி, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் கதறியது.

எடுத்து, ” ஹலோ...” என்றார்...

மறுமுனையில் சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங் லைனில் இருந்தார்.

“ஹலோ சார் .... நான் குர்தாஸ் சிங் பேசுறேன்...”

“சொல்லுங்க குர்தாஸ் என்னாச்சு...? ஏதாச்சும் EMERGENCYயா…?” என்றார் ஆச்சர்யம் கலந்த குரலில்...

“எஸ்… சார்... IT’S AN EMERGENCY....”

“எஸ்… ப்ளீஸ்....சொல்லுங்க...”

“சார்.... இந்தியப் பிரதமர் கலந்து கொள்கிற நிகழ்ச்சியில தாக்குதல் நடத்தப் போறதா ஒரு சர்ச்சைக்குரிய ஆடியோ ஆதாரம் கெடைச்சிருக்கு சார்... ”

“என்ன…??? ” என்றார் ஒரு வித பயம் கலந்த ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் சார்... அதுவும் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கெடைச்சுது.”

சற்று நேரம் யோசித்த விகாஷ் சர்மா,

“இஸ் இட் ...?” நல்லா செக் பண்ணீங்களா…?” . அது சும்மா சாதாரண மிரட்டலா…? இல்ல சீரியஸ் ஆனா மேட்டரா குர்தாஸ்...? ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.