(Reading time: 14 - 27 minutes)
Mistake

 பிரேமாவுக்கு பெரியப்பாவின் விலாசமும் போன் நம்பரும் தெரியும். அவர் வீட்டில்தான் இருப்பார், பேசிப் பார்ப்போம்! என்று முடிவெடுத்தாள்.

 அவரை, பிரேமா, தன் அம்மாவின் மரணத்தின்போது பார்த்ததுதான், பிறகு தொடர்பேயில்லை! அப்பாவுக்கும் அவருக்கும் இடையே ஏதோ பழைய மனஸ்தாபம்!

 அவரை தன் வீட்டுக்கு வரச்சொல்லமுடியாது, அவர் வயதில் முதியவர்! தான் அவரை அவர் வீட்டில் போய் பார்ப்பதுதான் முறை! 

 அண்ணன் ஆபீஸிலிருந்து வீடு திரும்பியதும், அவனிடம் பேசினாள்.

 " அண்ணா! வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது, சலிப்பாயிருக்கு, என்னை காற்றாட கொஞ்சம் வெளியில் அழைத்துப் போகிறாயா? கண்ணனையும் சண்பகம்மாவையும் குழந்தையை கவனித்துக் கொள்ளச் சொல்கிறேன்......."

 அவன் உடை மாற்றிக்கொண்டு, தயாரானான். அவன் ஸ்கூட்டரிலேயே கிளம்பினர்.

 பெரியப்பாவின் வீட்டருகே, பிரசித்தி பெற்ற கேசவ பெருமாள் கோவில் உள்ளது. 

 " அண்ணா! ரொம்ப வருஷமாச்சு! கேசவ பெருமாள் கோவிலுக்கு போகலாமா?"

 " தாராளமா! ஆனால், நீ உள்ளே போய் பெருமாள் தரிசனம் செய்துவிட்டு வா! நான் வெளியே காத்திருக்கேன்..."

 " கடவுளிடம் உனக்கென்ன கோபம்?"

 " அவர்தானே, நம்ம துயரம் அனைத்துக்கும் காரணம்! அவரை எப்படி என்னாலே பக்தியுடன் பார்க்கமுடியும்?"

 " சரி, நான் போய்ட்டு சீக்கிரம் வருகிறேன்......"

 சொன்னபடியே திரும்பியவள், " அண்ணா! நம்ம பெரியப்பா வீடு, பக்கத்து தெருவிலேதான் இருக்கில்லே, பாவம்! வயசானவர்! அவரை ஒரு மரியாதைக்கு பார்த்துவிட்டு போகலாமா?"

 அதிர்ஷ்டவசமாக, அண்ணன் மறுப்பு சொல்லாமல், அங்கு அழைத்துச் சென்றான். 

 அதிர்ஷ்டவசமாக, அங்கு பெரியப்பா, சித்தப்பா இருவரையுமே சந்திக்க முடிந்தது.

 அண்ணனை, சித்தப்பாவுடன் பேசவைத்துவிட்டு, சாதுர்யமாக பிரேமா பெரியப்பாவை தனியே அழைத்துப்போய், ஜோசியரின் சந்தேகத்தை தெரிவித்தாள்!

 " அதுவா........" என்று இழுத்தார், பெரியப்பா! சொல்வதா, வேண்டாமா எனும் குழப்பம் தெரிந்தது, அவர் முகத்தில்!

 " பெரியப்பா! நான் உண்மையை தெரிந்து ஜோசியரிடம் தெரிவித்தால், அவர் பரிகாரம் சொல்வதாக உறுதி அளித்திருக்கிறார், பெரியப்பா! நம்ம குடும்பம் பழையபடி மகிழ்ச்சியுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.