(Reading time: 41 - 82 minutes)

சிரித்தான்..

அடப்பாவி... பாரதிக்கு வாய்த்த அடிமை அது ..நீ தானா.. என கலாய்த்தாள் வினி.

விடு விடு...அப்போ வீக்எண்ட் நம்ம கேங் ஒன்று சேர்ந்து பக்கத்து ஊர் மௌன்டர்ன் ஏறி கலக்குறோம் ஹேய்... மூவரும் கூச்சலிட்டு ஆனந்தத்தினை வெளிப்படுத்தினர்.. இவ்வாறு தான் இவர்களின் நட்பு..பெற்றோருக்கு தெரியாமல் சின்ன திருட்டுத்தனங்கள்,குறும்புகள் செய்வதிலிருந்து டியுஷன் , படிப்பு வரை மூவரும் ஒன்றாகவே சுற்றி வருவர்.. விஷ்வா பிளஸ் டூ என்றாலும் வினி, பாரதியை பொறுத்தவரை விஷ்வாவே உற்ற நண்பன்.. இவர்களின் குறும்புகளுக்கும் திருட்டு தணங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருந்தது..

விஷ்வா இல்லாத தருணங்கள் சற்று சலிப்பாகவே இருவருக்கும் செல்லும்..தாத்தா பாட்டியுடன் இருவாரம் இருந்துவிட்டு வரலாமென விஷ்வா சென்றதினால் பாரதி வினியிடம் நம்ம கேங் லீடர் இல்லாமல் போர்ல..பாரு டியுஷன் விட லேட் ஆனாலும் பார்டி கார்ட் இல்லாமல் வர வேண்டியிருக்கு.. என பல முறை கூறிவிட்டாள்.. ஆமா ரொம்ப போர் தான்.. அண்ணா சீக்கிரமே வந்துடனும்.. ஒரே பல்லவியை கேட்டு காது வலி வந்துடும் எனக்கு.. என வினி அப்பாவி போல கூற அதன் அர்த்தம் புரிய முறைத்தாள் பாரதி..

இவர்களைப் பொறுத்தவரை அவர்களின் நட்பு தூய்மையானது.. பாரதி விஷ்வாவின் தோழமையில் உணர்ந்தது பாதுகாப்பு உணர்வினைத் தான்.. விஷ்வா எங்கு சென்று வரும் போதும் வினிதாவிற்கு எது வாங்கினாலும் மறவாமல் பாரதியின் விருப்பங்கள் அறிந்து எதையாவது வாங்கி வருவான்.. பாரதியின் துடுக்கு பேச்சு எப்போதுமே அவனுக்குப் பிடிக்கும்.. அதனாலேயே அடிக்கடி அவளை சீண்டிக் கொண்டு இருப்பான்..ஆனாலும் அவன் உள்ளத்திலும் அதுவரை எந்த கபடமும் இருக்கவில்லை..

விஷ்வா ஊரிலிருந்து வரும் நாளை ஆவலாக இருவரும் எதிர்பார்த்திருந்தனர். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதனால் பாரதி வழக்கம் போல வினி வீட்டிலே வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்.. விஷ்வா வீட்டினுள் வரவே இருவரும் துள்ளிக்குதித்தனர்..வந்தவனை வாசலிலே வைத்து ஊர்க்கதை பேசியே அவனை ஓர் வழி பண்ணிவிட்டனர் ..இருவரும்..

விஷ்வா வினிக்கு வாங்கி வந்த கொலுசினை கொடுத்தபடியே பாரதியை பார்த்தான்.. அவள் அதில் ஆசைபடுபவளாய் தெரியவில்லை..இருந்தும் தனக்காய் ஏதும் வாங்கி வந்திருப்பான் என்பதை அவள் அறியாமலில்லை.. அவன் அவள் ஆர்வத்தினை கண்டும் அமைதியாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.