(Reading time: 41 - 82 minutes)

கூறி முடிக்கையில் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் துளிர்த்திருந்தது...

கீதாவிற்கு அவள் சொன்னவற்றை கேட்கும் போதே இதயம் கணமாய் இருப்பதாய் உணர்வு. தன் மகள் விஷ்வாவினால் காயப்பட்டிருக்கிறாள் என்ற உண்மை தான் எங்கேயோ கவனக்குறைவுவாய் இருந்ததினால் ஏற்பட்டுள்ளது என்ற நிதர்சனம் அவரை சுட்டது .. அவள் தலையை தடவிக் கொடுத்தபடியே பேச்சை தொடர்ந்தார்..

பாரதி இது எப்போ நடந்தது.. ஏன் அம்மாவிடம் விஷ்வா மிஸ் பிகவ் பண்ணான் என்று சொல்லவில்லை..அப்போவே அவனை கூப்டு கண்டித்திருக்கலாம் இல்லையா.. என தணிவாய் கேட்டார்..

ம்மா எனக்கு அப்போ என்ன பண்றது..யாரிடம் சொல்வது.. உன்கிட்ட சொன்னால் எப்படி எடுத்துப்ப..என்றெல்லாம் தெரியலைம்மா.. என்னால் எதுவும் ப்பிராப்ளம் வந்துவிடுமோன்னு தான் சொல்லலை.. என்று பாரதி கூறுகையில் கீதா தன்னையே நொந்துக் கொண்டார்..

பாரதி அம்மாவிடம் எந்த தயக்கமும் எப்போதுமே வேண்டாம்.. நீ எடுத்த முடிவு தான் ரொம்ப கரெக்ட்.. உன்னை புரிந்து கொள்ளாமல் நான் தான் முட்டாள் போல நடந்துகிட்டேன்.. என்னை மன்னித்துக்கொள், என் கவனக்குறைவும் இந்த சம்பவத்துக்கு காரணமாகவும் இருக்கலாம். என கீதா வருந்த அம்மா என்ன நீ .. அப்படியெல்லாம் எதுவுமில்லை அப்பாக்கு தெரிய வேண்டாம் ரொம்ப பீல் பண்ணுவார். ஆண்டி, அங்கள், வினோத்,வினி எல்லோரும் ரொம்ப நல்வங்கமா அவங்களுக்கு இது தெரியாது .. விஷ்வாவுடைய பிழைக்கு அவங்களை தண்டிக்க கூடாதில்லம்மா.. என கூறி விட்டு சென்றவள் இன்னும் விசித்திரமாகவே கீதாவிற்கு தெரிந்தாள்..

தாயிடம் பேசிவிட்டு வந்த விடயத்தின் தாக்கம் அவளை வேறு சிந்தனைகளில் செல்லவிடாமல் உள்ளத்தை அரித்ததது . எண்ணிலடங்காத தருணங்கள் எண்ணியிருக்கிறாள்.. அன்று விஷ்வா வீட்டிற்கு சென்றிருக்க கூடாது.. அன்று சென்றதன் விளைவு இன்றும் நெஞ்சை நெருஞ்சு முள்ளாய் தைக்கிறது..அழகாய் கழிந்த பருவமதில் அழியாத வடுவாய் அவளுள் விஷ்வா விஷமாய் மாறி இருக்க வேண்டாம்..

வார்த்தையில்லா மௌனங்களில்

வார்க்கப்படும் வெற்றுப் புன்னகை

உதடுகளில் ஒட்டாமல்

உதிரும் தருணங்களில்

மறைந்து நிற்கும்

மரணத்தின் எல்லை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.