(Reading time: 41 - 82 minutes)

வயசிலிருந்தே பழக்கம்.. நல்லா படிச்சிருக்கான் ..கௌரவமான வேலையில் இருக்கான்.. விஷ்வாவும் நம்ம ஊருக்கே ட்டிரான்ஸ்சர் ஆக போறான்..ஸ்மார்ட்டாகவும் இருக்கான்.. இன்னும் என்னடி குறைச்சல் அவனுக்கு என கீதா விஷ்வாக்கு புகழ்மாலை பாட பாரதிக்கு உச்ச கட்ட எரிச்சல் மண்டியிட்டது..

அவனுக்கு என்ன குறைவு .. கொழுப்பு கூட ரொம்ப ஜாஸ்தியாய் தான் இருக்கு என முனுமுனுத்தபடி ம்மா ...போதும் நிறுத்துகிறாயா? எனக்கு பிடிக்கலை..எத்தனை நியாயம் சொன்னாலும் என் முடிவு இது தான்.. இதை என் பிடிவாதம்னு சொன்னாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.. அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் பாரதி படியேற முற்பட்டாள்..

கீதாவுக்கு கோபமும் கவலையும் ஒன்று சேர கண்கள் கலங்கிவிட அவர் மௌனமாகிவிட்டார்.. பாரதிக்கும் தன் தாயை பார்க்க வேதனையாய் தான் இருந்தது..

பாரதி எனக்கும் சுந்தர்க்குமிடையில் எந்த மனஸ்தாபமும் வந்ததில்லை இதுவரை ..இதனால் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன்..யோசித்து சொல் என தன்மையாய் அவளது தந்தை கூற..

அப்பா..! உங்க நட்பு எப்போதும் போல தொடர வேண்டும் .. அதனால் தான் வேண்டாம்னு சொல்றேன்..இன்னும் வன் இயர் டைம் கொடுங்க..வர்க் பண்ணணும்னு ஆசைப்படுகிறேன்.. அப்புறம் விஷ்வா தவிர வேற யாரை சொன்னாலும் நான் முடியாது என்று சொல்லவே மாட்டேன்.. ப்பிராமிஸ்பா ..மனசுக்கு ஒத்து வராமல் எந்த காரியம் பண்ணாலும் அது சக்சஸ் ஆகாது..இது லைப்பா... இதுக்கு மேலேயும் நான் ஒத்துகொண்டே ஆகனும்னா உங்க இஷ்டம்பா.. என தெளிவாக அவளது தந்தையை பார்த்துக் கூறினாலும் அவளது கண்களில் தந்தை புரிந்து கொள்ள வேண்டுமென்ற மான்றாட்டமே தெரிந்தது.

அவளது தந்தை அவள் விழிகள் பேசிய கெஞ்சலில் சற்று கலங்கித்தான் போய்விட்டார்..பாரதி எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும் ரகம் அல்ல. எது வேண்டாமோ எதில் தனக்கு உடன்பாடு இல்லையோ அதை தெளிவாக மறுத்துவிடுவாள்...அவள் இவ் குணம் பெற்றோர் அறிந்ததாயினும் பாரதி விஷ்வா விடயத்தைப் போல் இத்தனை அவசரமாக யோசிப்பதற்கு கூட விரும்பாத அளவில் மறுத்ததில்லை..அதுவே ராஜ்க்கு உறுத்தலாய் இருக்க இதை தவிர்ப்பதே சிறப்பாக அமையும் என தீர்மானித்தாலும் விஷ்வாவின் தந்தையிடம் இதை எவ்வாறு கூறுவதென்று சிறு சஞ்சலம் எழத்தான் செய்தது. தன் பதிலை எதிர்பார்த்திருக்கும் மகளிடம்

"பாரதி... நீ ஏன்னு சொல்லாவிட்டாலும் ஏதோ ஒரு காரணம் உன் முடிவுக்கு பின்புலமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.