(Reading time: 41 - 82 minutes)

இருக்கு...உன் முடிவுக்கு நானும் உடன்படுகிறேன்.ஆனால்...! என நிறுத்தி அவளை பார்க்க அவள் முகம் என்னவோ பெரிய நீர்ச்சுழியிலே சிக்கி மீண்டு சுதந்திர மூச்சிக்காற்றை சுவாசிப்பதைப் போன்று அத்தனை இலகுவாய் அதை உணர்ந்து கொண்ட ராஜ் திருப்தியாய்...

தாங்ஸ்பா..! நானும் உங்களுக்கு கொடுத்த வாக்கிலிருந்து மீற மாட்டேன் என உறுதியாய் கூறிவிட்டு படிகளில் குதித்து ஓடியவள் இன்னும் சிறு குழந்தையாய் அவர் கண்களில்...!

இரண்டு நாட்களில் இந்த விடயம் மறைந்திருந்தாலும் தாயிற்கும் மகளுக்குமிடையில் இருந்த அத்தனை நெருக்கமான கலந்துரையாடலும் சீண்டலும் குறைந்து தான் போனது.. பாரதியால் இதனை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. யாரோ ஒருவனால் தம் உறவில் கீறல் விட்டு விரிசல் விழுவதா...? அவள் தன் தாயிடம் சற்று அதிகமாக பேசிவிட்டோமே என்ற உணர்வே அவளை கலங்கச் செய்தது.

தாயின் அறை வாசலில் நின்று எட்டிப்பார்த்தாள்.. இவ்வாறு நடப்பது இதுவே முதன் முறை.. கீதா இதனை உணர்ந்தாலும் அறியாததை போல் புடவைகளை மடித்து வைப்பதில் கவனமாக இருக்க முயன்றார்..

சிறு தயக்கத்துடனே ம்மா..என்ன பன்ற.. நானும் ஹெல்ப் பன்னட்டா..என அவர் அருகில் கட்டிலில் அமர்ந்தவாறே பேச்சை ஆரம்பித்தாள் பாரதி.. கீதா பதில் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்துவிட்டு தன் பணியை தொடர்ந்தார்.. அவளுக்கு புரிந்தது என்ன புது அக்கறை என்ற கேள்வியே அப்பார்வை..!

ஏம்மா.. நான் உனக்கு பாரமாக போய்விட்டேனா..? என்னை துரத்தி விடுவதிலே குறியாக இருக்க..என பாரதி சொல்ல கீதா ஆத்திரம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பாரதி .. நீ இன்னும் சின்ன குழந்தை கிடையாது..காலாகாலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்கிறது எங்களது பொறுப்பில்லையா ஏன்டி அடம்பிடிக்குற.. எங்க நிலையை கொஞ்சம் புரிந்துகொள்ள ட்ரை பண்ணக்கூடாதா? என தணிவாய் முடித்தார்.

ம்மா உன் மடியில படுத்துக்கவா? என என்றுமில்லாமல் அனுமதி கேட்பவள் இன்று புதிதாய் தெரிந்தாள்.. எதையோ மனசினுள் போட்டு மெல்லமுடியாமலும் சொல்லமுடியாமலும் திணறுகிறாள் என்பது புரிய அத்தாயுள்ளம் இலகித்தான் போனது..என்ன புதுசாக அனுமதி கேட்டுட்டு இருக்க வா என அவர் சொன்னது தான் தாமதம் அவள் தாயின் மடியில் தலை சாய்த்தாள்..!

அம்மா என் மேல இன்னும் ஆதங்கம் தீரல்லயா? ஆதங்கம் எல்லாம் இல்லடி வருத்தம் தான்... வார வரன் எல்லாம் தட்டிவிட்டுட்டே இருக்க அப்புறம் நாம தேடும் போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.