(Reading time: 41 - 82 minutes)

இதுவென காட்டிய

இதயத்தின் வலி...

ஆழி கண்ட ஆழம் கூட

ஆழ் மனதினை விட குறைவு என்றே

ஆறாம் அறிவும் நம்பிவிடும்..

மறக்க துடிக்கும் வேதனை

மற்றவர் முன் மறைக்க

மனதோடு மண்டியிட்டு

கண்ணோடு கரிக்கும்

கண்ணீரையும் கட்டுப்படுத்துகையில்

சுற்றி இருக்கும் உலகத்தில்

சுதந்திரம் அற்ற பறவையாய்

நான் மட்டும் தனிமையுடன்..

உடைந்து அழவேண்டிய

உணர்ச்சி கூட உள்ளத்தினுள்ளே

சிறைவைக்கப்படுகையில்

சின்ன ஆறுதலாய் நித்திரைக்கான

நீண்ட காத்திருப்பில் தலையணை

நனைக்கும் கண்ணீர்..

எட்டு வருடங்களுக்கு முன்பு....

ராஜ்ஜும் சுந்தரமும் பால்ய நண்பர்கள் .ஆகையால் இருவரும் ஒரே காலனியில் எதிர் எதிர் வீடுகளில் குடும்பத்தோடு வசித்தனர் .. ராஜுவிற்கு ஒரே மகள் பாரதி.. சுந்தருக்கு இரண்டு மகனும் பாரதியின் வயதையுடைய மகளும்.. பெற்றோர் போலவே பிள்ளைகளும் நெருங்கிய நட்புடன் வலையவந்தனர்..

பாரதி .. பாரதி எனக் குரல் வீட்டினுள் மிக அருகில் கேட்க போர்வையை இன்னும் இழுத்து போர்த்தியவாறு தூங்க முற்பட்டாள் பாரதி.. அடியேய் நீ இன்னும் எந்திருக்கவே இல்லையா...? எழுந்திரு இல்லை தலையில் தண்ணியை கொட்டிடுவேன் .. எனக்கூறியவாறு போர்வையை உருவ காதுகளை இரு கைகளாலும் பொத்தியவாறே எழுந்துட்டேன்......... கொட்டிடாதே... என அலரியபடி பதறியடித்து எழுந்தாள் பாரதி.. எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.