(Reading time: 41 - 82 minutes)

நல்லாதா அமையுமோ தெரியலையே ..உன் வயசு பொண்ணுங்க எல்லாம் குடும்பமும் குழந்தையுமாக இருக்காங்க... நீ என்னடான்னா இப்படி ..என தன் வருத்தத்தினை வெளிப்படுத்தினார் கீதா..

ம்மா.. நான் வேண்டாம்னு சொன்னதுக்கெல்லாம் நியாயமான காரணமிருக்கு தானே... என்று கூறி தாயை பார்க்க கீதாவோ முறைத்தார். நீயே சொல்லுமா அழகாக இருக்குறதுனாலையும் கலராக இருக்குறதுனாலையும் வந்த வரனை வேண்டாம்னு சொன்னது எப்படி தப்பாகும்..வெள்ளை என்பது நிறம் மட்டும் தான் ..அழகு கிடையாது.. அது போல தான் அழகு என்பது தற்காலிகம் ..! எப்போ வேண்டும்னாலும் மாறலாம்.. இப்போ அழகாக இருக்குறதுனால கல்யாணம் பண்ணி நாளபின்ன ஏதாவது ஆக்சிடன்ட்ல அழகு சிதைந்து போய்விட்டால் அந்த திருமண பந்தமும் அத்திவாரம் உறுதி இல்லாத கட்டிடம் போல் சிதைந்து போய்டும்மா.. அன்பாலும் மனப்பொருத்தத்தினாலும் தான் திருமணபந்தம் உருவாகனும்.. நான் சொல்வது கரக்ட்டு தானேமா.. என பாரதி கூற கீதா ஒரு நிமிடம் நிசப்தமாகி பின்னர் உன் வியு சரிதான் என்பது போல தோணுது..என கீதா பதிலளித்தார்.

ம்ம்..அது..என்ற படி பாரதி தொடர்ந்தாள்..அடுத்து அந்த வரதட்சணை எதிர்பார்த்து வந்த வரன்..அதை வேண்டாம்னு நான் தவிர்த்தது எப்படி தப்பாகும். உங்க பொண்ணுக்காக நீங்க வரதட்சணை கொடுக்க தயாராக இருக்கீங்க..வசதி உள்ளவங்க வரதட்சணை கொடுத்து வழிமுறையாக மாற்றிவிட்டிருக்கீங்க..வசதி இல்லாதங்க என்ன பண்ணுவாங்க.. என்று பாரதி கூறிக்கொண்டிருக்க கீதா ஏதோ கூற முனைய மம்மி வைட் நான் இன்னும் முடிக்கலை என கண்சிமிட்ட வேறு வழியின்றி அமைதியானார்.

அதெல்லாம் விட்டுவிடலாம் பட் எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லமா..

திருமணத்திற்கு அப்புறம் கணவன், அவன் குடும்பம்,பிள்ளைகள் எல்லோரையும் கவனித்து அவங்க எல்லோருக்கும் தேவையான அனைத்தையும் மனைவியாக போற பெண் தானே செய்தாக வேண்டும்..முறைப்படி பார்த்தால் கணவன் தான் மனைவிக்கு வரதட்சணை கொடுக்கணும்.. ஏன்னா திருமணத்தினால் ஒரு பெண் இழப்பவை கணக்கில் அடங்காதவை.. ஏன் இப்படி ஒரு வழக்கம் என்றே புரியவில்லைம்மா..

ஒரு கார் வாங்கி இல்லை ஒரு மொபைல் வாங்கி சில காலம் யூஸ் பண்ணிவிட்டு யாருக்கும் கொடுக்க போகிறோம் என்றால் கூட அதற்கொரு விலையுண்டு.. ஆப்ட்ரோல் ஒரு செகண்ட் ஹேண்ட் மொபைல்கு இருக்கின்ற வெல்யு கூட பெண்ணுக்கில்லையா..? அத்தனை வருட காலம் சீராட்டி பாராட்டி வளர்த்த பொண்ணையும் கொடுத்து பணம் , பொருள் ,நகை அப்படி அள்ளிக்கொடுக்க வேண்டிய அவசியமென்ன..? இது எல்லாம் எந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.