(Reading time: 41 - 82 minutes)

கண்மணி கூற பாரதியோ எதிர்மறை உணர்ச்சியில்..விஷ்வா என்ற பெயரே அவள் மீது அமிலத்தை அள்ளி வீசுவதாய்..அவ்விடத்தில் இன்னும் நீடிக்க முடியாமலும் உடனே நீங்க முடியாமலும் போராட்டத்துடன் அவள்..அவளை காப்பாற்றுவதாய் அவள் தோழி தொலைபேசியில் அழைக்க கடவுளுக்கு மானசீகமாக நன்றி செலுத்தியபடி அவ்விடம் விட்டு அகன்றாள்...

கண்மணியுடன் இனிமையாய் செல்ல வேண்டிய பொழுதில் இடைத்தடங்களாய் "விஷ்வா" என்ற பெயரே அவருடன் பாரதியை ஒன்றவிடாமல் ..இருந்தும் அவர்கள் மாலை கிளம்பும் வரை மனசஞ்சலத்தை மறைத்தபடியே எதுவுமில்லை என்பதுபோல் இயல்பாய் இருக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டாள்.. மனதுக்கு அமைதி வேண்டுமென்பதை போல அவளுள் ஓர் எண்ணம்...

தன் தோழி மதியை அழைத்து பீச்சுக்கு செல்ல ஆயத்தமானாள்... ம்மா நான் வெளில போறேன் ..தனியா இல்ல மதியோட தான்...அவர் நேரத்துக்கு வா என்று கூற எத்தனிக்கையில் சிக்ஸ் தெர்ட்டிக்கு எல்லாம் வந்துடுவேன்.. அதானே..பைமா எனக் கூறியபடி பாரதி செல்ல கீதாவே அவள் செல்லும் வரை வாசலில் நின்றார்..

பாரதி அமைதியான மனோநிலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு வந்தாள்.பாரதி எப்போதும் போல இரவு உணவின் போது பேசிக்கொண்டே சாப்பிட அவளது பெற்றோரின் பேச்சில் அதிகம் வந்து சென்றதென்மோ விஷ்வாவின் பெயர் தான்.. இவள் வெளியே சென்ற பின் விஷ்வா வந்திருக்கிறான் என்பது புரிந்தது.. அவனைப் பற்றிய பேச்சு அவளுள் அதிர்வலைகளை உருவாக்க பலத்த மௌனம் அவளை ஆட்கொண்டது ..அவளுக்கு உணவு தொண்டையில் சிக்கித்தவிப்பதாய் உணர்ந்தாள்.. இதற்கு மேல் அவ்விடத்தில் இருப்பது அவளுக்கு முடியாது என்றே தோன்றியது..

“பாரதி என்ன ரொம்ம அமைதியாக இருக்க.. சாப்பிடு எனத் தந்தை கூற வேறு வழியின்றி உணவை பிசைந்து கொண்டிருந்தாள்.. அவளை அவதானித்த அவள் தந்தை விஷ்வாவை பற்றி நீ என்னமா நினைக்கிறாய்..எனக்கேட்க தூக்கத்திலிருந்து பாதியில் விழித்தவள் போல புரியாமல் விழிக்க அவளது தாய் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே மனதினுள் இது சரியில்லையே.. எங்கையோ இடிக்குதே என எண்ணியபடி...

“அவனைப் பற்றி நான் என்ன நினைக்க இருக்கு ..நோ கமண்ட்ஸ்” எனக் கூறி உணவை பாதியிலே விட்டு எழுந்தே விட்டாள்.. இருவரும் இவளை விசித்திரமாக பார்க்க தன் அவசர புத்தியை நொந்து கொண்டாள்.. என்னடி இது சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பாதியிலே எந்திருக்க..அப்பா உன் கூட பேசிட்டு இருக்காங்கல்ல புரியுதா? என தாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.