(Reading time: 14 - 27 minutes)

" மதி! நான் மற்றவங்களைப் போல, நடிப்புக் காதலன் இல்லே, தூய்மையான காதலன்! உன் சந்தோஷத்துக்காக, என் சந்தோஷத்தைக் கூட விட்டுக் கொடுக்கத் தயார்! நான் பேசறது பிடிக்கலேன்னா, இந்த நிமிஷமே பேசறதை நிறுத்திடறேன்......."

" கோவிச்சுக்காதேடா! பேசு, எவ்வளவு வேணுன்னாலும், ஆனால், பிதற்றாதே! உதாரணமா, இப்ப சுகமா சொகுசா பயணம் செய்கிறோம், அதை என்ஜாய் பண்ணாம, இந்த விமானம் எப்படி நடுவானத்திலே கீழே விழாம காற்றை கிழிச்சிண்டு பல மைல் வேகத்திலே பறக்குதுன்னு யோசிக்கலாமா?"

" மதியின் மதிக்கு மதிப்பு தந்து நிம்மதியா உன் பேச்சை கேட்கிறேன், நீ பேசு!"

" எனக்கு தூக்கம் வருதுடா...."

" எனக்கு வரலியே......."

" அப்ப ஒண்ணு பண்ணு! இந்த ஐபேடிலே, உனக்கு மனசிலே தோன்றுவதை, எழுது! நான் தூங்கி எழுந்ததும், படித்து ரசிக்கிறேன், சரியா?"

மதி என்னும் காந்திமதி, தன் கண்களை மூடி தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து உறங்கிய அழகை ரசித்தவாறே, ரகு கடந்த காலத்துக்கு மனதளவில் பயணம் செய்தான்.

 அவளை தன் வாழ்வில் முதன் முறையாக சந்தித்தபோது, எவ்வளவு அழகாக, இருந்தாளோ, அதே அழகுடன் இன்றும் இருப்பதன் ரகசியம் என்ன என்று சிந்தனையை ஓட்டினான், ரகு என்கிற ரகுநாதன்!

 மதி, அதிகம் சிந்திக்க மாட்டாள்! கடந்ததை நினைத்து வருந்தமாட்டாள்! எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருப்போம் என கனவு காணமாட்டாள்!

 அந்தந்த நிமிடத்தில் தான் எதிர்கொள்கிற நிகழ்வுகளில் பூரணமாக பங்கு கொள்வாள்!

 இந்த மனப் பக்குவம் அவளுக்கு பல காலமாக பழக்கப்பட்ட ஒன்று!

 அதற்கு, பெருமளவு, அவளுடைய வளர்ப்பும் காரணம்!

 இத்தனைக்கும், அவளை வளர்த்து ஆளாக்கியது, தாயல்ல; தந்தை!

 பாவம்! மதி, சிறு வயதிலேயே தாயை இழந்தவள்! பெற்றோரின் ஒரே மகள் என்பதுடன், ஒரே வாரிசு!

 பேராசிரியர் சிங்காரத்தின் ஒரே மகள்! தாயில்லா குழந்தை என்று பேராசிரியர் சிங்கம் (ஆம், அவரை மாணவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) அவளை எந்தக் கட்டுப்பாடுமின்றி வளர்த்தார்.

 மதியும் அதற்காக ஒழுக்கக்கேடான பழக்கங்களில் வீழ்ந்துவிடாமல், நல்ல முறையில் தன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.