(Reading time: 14 - 27 minutes)

 காலப்போக்கில், ரகுவும் மதியும் பெற்றோரின் ஆசியுடன், படிப்பில் சிறந்து விளங்கியதோடு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் யூனிவர்சிடியிலிருந்து மேற்படிப்பை தொடர உதவித் தொகையுடன் அழைப்பும் பெற்றனர்.

 அவர்களை அமெரிக்கா அனுப்புமுன், இருவருக்கும் திருமணம் செய்துவிட, மதியின் தந்தை நினைத்தபோது, அதை ரகுவின் தாயும் ஆமோதித்தாள்.

 திருமணம் முடிந்து, இதோ இருவரும், நியூயார்க் பயணிக்கிறார்கள், பிசினஸ் க்ளாஸில்!

 இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்த ரகு உள்ளத்தில் பொங்கிவந்த மகிழ்வில், மதியின் கரத்தை அழுத்தினான்.

 திடுக்கிட்டு மதி விழித்துக் கொண்டாள்.

 " என்ன ரகு! எதற்கு எழுப்பினே?"

 " உன்னை எழுப்பலை, கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தேன், நீ என்மீது வைத்துள்ள அன்பு மனதில் நடமாடியபோது, என்னை அறியாமலேயே, உன் கையை பிடித்துவிட்டேன், நீ தூங்கு, மதி!"

 மதி சிரித்துவிட்டு, கண்களை மூடி உறக்கத்தை நாடினாள். நாம் நினைக்கிறபோதெல்லாம், அது வருமா, என்ன!

 " ரகு! என்னிடம் சொல்ல நினைக்கிறதை ஐபேடிலே எழுதச் சொன்னேனே, எழுதியாச்சா? கொண்டா, பார்ப்போம்!"

 " சாரி, மதி! நான் எனக்குள்ளேயே இன்ப சாகரத்தில் நீந்திக் கொண்டிருந்தேன், எழுத தோன்றவில்லை, நம் வாழ்வு முழுவதும் இனி நாம் பேசிக்கொண்டே இருக்கப் போகிறோமே............"

 " ரகு! எனக்கு அப்பாவை விட்டுப் பிரிந்து வர மனசேயில்லை, இதயமே நொறுங்கிவிடும் போலிருந்தது........ பாவம்! எனக்காகவே தன் வாழ்வின் சுகதுக்கங்களை மறந்தவரை, தன்னந் தனியாக விட்டு வருகிறோமே, இது சரியா? என மனம் ஈட்டி எடுத்து குத்துகிறது....."

 " உனக்காவது பரவாயில்லை, அப்பா ஒரு ஆண்மகன்! என் அம்மாவை நினைத்துப் பார்! பெண்! இந்த நெறிகெட்ட சமுதாயத்திலே, தன்னந் தனியே அவள் எப்படி வாழப் போகிறாளோ என நெஞ்சு நடுங்குகிறது........."

 திடுமென மதி நிமிர்ந்து அமர்ந்தாள்.

 " ரகு! ஒரு நல்ல ஐடியா! உடனடியா போன் பண்ணி உங்கம்மாவை எங்க வீட்டுக்குப் போய் அங்கே என் அப்பாவுக்கு துணையா, நாம் இந்தியா திரும்பி வருகிறவரையில், தங்கியிருக்கச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.