(Reading time: 14 - 27 minutes)

சொல்லிவிடுவோம், என்ன சொல்றே?"

 " வெரி குட் யோசனை! எனக்கு இது ஏன் தோணலைன்னு தெரியலே,....ஆங்! ஏன் தெரியுமா? நம்ம சமுதாயத்திலே, எத்தனை வயதானாலும், கணவன்-மனைவி உறவிருந்தால் தவிர, ஒரு பெண் அந்நிய ஆடவனுடன் தங்குவதை ஏற்பதில்லையே, கன்னாபின்னான்னு பேசும்! என் அம்மாவினால் தாங்கிக் கொள்ள முடியாது, ஆகவே, உன் யோசனை நடைமுறையில் சாத்தியமில்லை........"

 " அவ்வளவுதானே? சமுதாயம் ஏற்றுக்கொள்ள, ஒரு வழி செய்வோம்,........"

 " இருவரையும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவோம், என்கிறாயா?"

 " ச்சீ போடா! இருவரும் இன்னும் அறுபது வயதைக்கூட எட்டவில்லை, வேற ஐடியாவே உனக்கு தோன்றவில்லையா? ட்யூப்லைட்டுடா நீ! என்னைப் போல, கற்பூர புத்தியில்லேடா உனக்கு, சரி, ஐந்து நிமிஷம் டயம் தரேன், யோசித்துச் சொல்! அதற்குள் நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்.." என கூறிவிட்டு, மதி நகர்ந்துவிட்டாள்.

 ரகு யோசித்தான்! ஆங்! கண்டுபிடித்துவிட்டேன், வெரிகுட் ஐடியா! என துள்ளிக் குதித்தபோது, மதியும் திரும்பிவிட்டாள்.

 " மதி! கண்டுபிடிச்சுட்டேன், எக்சலண்ட் ஐடியா! நாமிருவரும் நியூயார்க் போய் சேர்ந்ததும், அவர்களிடம் போனில் பேசி, உடனடியாக தேவையான ஏற்பாடுகளைச் செய்து விசா பெற்றுக்கொண்டு இருவரையும் நியூயார்க் வரவழைத்து விடுவோம், நம்முடனேயே அவர்களும் தங்கட்டும், அதுதானே உன் ஐடியாவும்?"

 மதி தன் கையை உயர்த்தி ரகுவை அடிப்பதுபோல சைகை காட்டிவிட்டு, 'மக்கு, மக்கு' என வசை பொழிந்தாள்.

 " ரகு! நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன், பட்டிமன்றத்தில் நீ பேசியதை வைத்து உன்னை முற்போக்கு சிந்தனையாளன்னு தப்பா எடை போட்டுட்டேன், நீ ஒரு பிற்போக்கு அடிவருடி! ச்சே! பெண்களுக்கு புதிய பாதை வகுத்து தருகிற எண்ணமே கிடையாதுடா, ஆண்களுக்கு!"

 " மதி! என்னை அப்புறமா திட்டு! முதல்லே, உன் ஐடியாவை சொல்லு!"

 " நாம் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு, அவர்களே நமக்கு வழிகாட்டி யிருக்கிறார்கள்....."

 "அப்படியா!"

 " மரமண்டை! நம்மை நியூயார்க் சேர்த்து அனுப்ப, அவங்க என்னை செய்தாங்க?"

 " நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைச்சாங்க........"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.