(Reading time: 14 - 27 minutes)

விருப்பங்களுக்கேற்ப, வாழ்ந்தாள்!

 அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் குழுமி சிரித்துப் பேசி மகிழ்வார்கள். பேராசிரியரின் மகள் என்பதோடு, மதி நல்ல பேச்சாளி!

 கல்லூரியில் விழா ஒன்றில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 தலைப்பு, " வாழ்வின் நோக்கம், 'அறிவுப் பெருக்கமா, இன்பம் துய்த்தலா?'!

 வித்தியாசமான பொருள் விவாதிக்கப்படுவதால், மாணவ, மாணவிகளைத் தவிர கல்லூரி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

 இதில் கூடுதல் ஆர்வம் என்னவெனில், பேராசிரியர் சிங்கம் நடுவராக இருந்ததுதான்!

 நான்கு பேர் கொண்ட இரு பிரிவுகளாக பேச்சாளர்கள் அணி வகுத்தனர்.

 'அறிவுப் பெருக்கமே' என வாதாடிய அணிக்கு தலைவன், ரகு எனும் ரகுநாதன்!

 'இன்பம் துய்த்தலே' எனும் அணிக்கு மதி எனும் காந்திமதி தலைவி!

 இரு அணிகளிலும் மற்ற மூன்று பேர் வாதாடியபோதே, சூடு பறந்தது! இருசாராருக்கும் கரவொலி ஆதரவு கிடைத்தது.

 இறுதியாக, 'அறிவுப் பெருக்கமே'அணியின் தலைவன் ரகுவின் முறை வந்தபோது, நடுவர் குறுக்கிட்டார்.

 " இரண்டு அணியிலும், மூன்று பேர் பேசியபிறகு, பெருமளவு கருத்துக்கள் பரிமாறிக் கொண்டுவிட்ட நிலையில், இறுதியாக அணியின் தலைவர்கள் சொற்பொழிவு ஆற்ற தேவையில்லை.

 இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகள் எழுப்பட்டும்! முதலில், 'இன்பம் துய்த்தலே' அணித் தலைவி காந்திமதி கேள்வியை தொடுக்கட்டும். அதற்கு 'அறிவுப் பெருக்கே' அணித் தலைவன் ரகுநாதன் பதில் கூறிவிட்டு, அவர் எழுப்புகிற கேள்விக்கு, காந்திமதி பதில் சொல்வார். மூன்று கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்ததும், நான் முடிவுரை கூறுகிறேன், சரியா?"

 கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி உற்சாகத்தை தெரிவித்தனர்.

 காந்திமதி கேள்வி எழுப்பினாள்.

 " மனிதன் அறிவைப் பெருக்குவதின் அடிப்படையான நோக்கமே, இன்பம் துய்ப்பதற்குத் தான் என்பதை மறுக்கமுடியுமா?"

 அவள் கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்பே, கரவொலி விண்ணை தொட்டது.

 " மனிதன் அறிவைப் பெருக்கினால் தான், உண்மையாகவே நிரந்தரமான இன்பம் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.