(Reading time: 14 - 27 minutes)

எதுவும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டு, அமைதியை நாடுவான்.

 துவக்கத்தில் இன்பம் தருகிற எந்தப் பொருளுமே, போகப் போக, துன்பத்தில்தான் முடியும். ஏனெனில் எந்த இன்பமுமே நிரந்தரமில்லை.

 உதாரணமாக, மாம்பழத்தை அது தருகிற இன்பத்துக்காக உண்கிறோம். இரண்டாவது பழத்திலிருந்து அது தருகிற இன்பம் குறைந்து குறைந்து ஒரு நிலையில் சலிப்பு தட்டியோ, வயிற்றுவலியினாலோ, மாம்பழத்தை வேண்டாமென தள்ளுகிறோம் இல்லையா? ஒரு கம்பின் ஒரு முனை இன்பம் என்றால், மறுமுனை துன்பம் என்பதை அறிவுப் பெருக்கத்தால் அறிந்து இன்பம், துன்பம் இரண்டையும் தவிர்த்துவிட்டு மூன்றாவதாக அமைதியை நாடுகிறோம்........."

 இதற்கும் பலத்த கரவொலி எழுந்தது.

 " இப்போது நான் எழுப்புகிற கேள்வி இதுதான்: படைக்கப்பட்ட பிறவிகளில், மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு அளித்திருப்பது எதற்காக? அறிவற்ற இதர ஜீவராசிகள்கூட அறிவு இல்லாமலேயே இன்பம் துய்க்கின்றன, அதனால் மனிதனுக்கு அறிவு தரப்பட்டதின் நோக்கம், இன்பமல்ல, வேறொன்று! என்பதை மறுக்க முடியுமா?"

 நடுவர் சிரித்துக்கொண்டே, "இந்த நல்ல கேள்விக்கு பதில் தர, காந்திமதியை அழைக்கிறேன்" என்றார்.

 " இந்தக் கேள்வியே தவறானது. நமக்குத் தெரிந்த பெரிய ஞானிகளே, மனித வாழ்வின் பயனே பேரின்பமே! என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர, அமைதி என கூறவில்லை என்பதை நண்பரோ, நடுவரோ மறுக்க முடியுமா?"

 அவையோர் ஒருமித்து எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டினர்.

 " இப்போது எனது கேள்வி, எதிரணிக்கு இதுதான்:

 மனிதனைத் தவிர, வேறெந்த படைப்புக்கும் அறிவில்லை என்று எதிரணித் தலைவர் கூறினாரே, அவரை கேட்கிறேன்:

 கூட்டம் கூட்டமாக பறவையினம் ஒன்று சேர்ந்த நிலையிலும், தாய்ப்பறவை அந்தக் கூட்டத்தில் தன் குட்டியை தவறின்றி கண்டுபிடித்து, உணவு ஊட்டுகிறதே, அது அறிவுள்ளதாக இருப்பதால்தானே........

வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளுக்கு தங்களை வளர்ப்பவரை, அவர் கூட்டத்தில் இருந்தாலும், இனம் கண்டு ஓடிவருகிறதே, அதற்கு அறிவில்லையா?

 நமக்குத் தெரியாதவைகூட, நம் உடல் உறுப்புகளுக்கு தெரிந்து இயங்குகின்றனவே, அறிவு இல்லை அதற்கென கூறமுடியுமா? எதிரணி தலைவருக்கு நினைவூட்டுகிறேன், மனிதன் மனம், அறிவு, செயல் எல்லாம் இழந்து கோமாவில் கிடக்கும்போதுகூட, சுவாசிக்கிறானே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.