(Reading time: 32 - 63 minutes)
சிறுகதை - ராணி பசந்த் - அன்னதா சங்கர் ராய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

அவருடைய குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. அவர் நினைவுப் பாதையில் இருபதாண்டுகள் பின்னோக்கிப்போய் விட்டார். பிறகு ஏதோ நினைவுகளை அசைபோட்டவாறே சொன்னார், "ரொம்பப் பழைய காலக்கதை. நானே மறந்து போயிட்டேன். இப்போ திடீர்னு ஞாபகம் வருது நல்லா ஞாபகம் வருது.. கண்ணுக்கு முன்னால நடக்கற மாதிரி தெளிவாகத் தெரியுது.."

  

அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அதே மனிதர்தானா, அல்லது வேறு யாராவதா..? ஓர் இளைஞன் நாற்காலியில் சாய்ந்தவாறு கனவு காண்கிறானா..?

  

காற்று நன்றாக வீசுகிறது, காற்றைத் தள்ளிக் கொண்டு முன்னேறுகிறது படகு. துணி கிழிபடுவது பொல படகின் இரு பக்கமும் தண்ணீர் கிழிபடுகிறது. பின்னால் தங்கிவிடுகின்றன அலைகள். அந்த அலைகளின்மேல் மேலுங் கீழுமாக ஊசலாடுகிறது பின்னால் வரும் தோணி. கான் பகதூர் கதை சொல்லத் தொடங்கினார்..

  

🌼🌸❀✿🌷

  

மேகர்பான் சிங் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவன். என் முன்னோர்களும் ராஜபுத்திரர்கள் தான். ரத்த பாசம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு மற்ற முஸ்லீம்களை விட ராஜபுத்திரர்களிடம் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் இந்து மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மத விஷயத்தில் நான் ஒரு தீவிர முஸ்லீம். மதத்தைப் பொருத்தவரையில் இந்த முஸ்லீம் சாரங்க், மாலுமி, வேலைக்காரன், சமையற்காரன் எல்லாரும் என் சொந்த மக்கள், மேகர்பான் சிங் ஒரு சிநேகிதன் மட்டுமே.

  

ஆனால் அந்தக் காலத்தில் அவனைப் போன்ற நண்பன் எனக்கு இல்லை. நாங்களிருவரும் தினம் சந்திப்போம். மணிக் கணக்காகப் பேசுவோம், பகற்கனவு காணுவோம். எங்களிருவருக்கும் விளையாட்டில் ஆர்வம் உண்டு. வேட்டையிலும் நாட்டம் உண்டு. அந்தக் காலத்தில் இப்போதிருப்பது போல சினிமா கிடையாது. நாங்கள் வேலை செய்த இடத்தில் எப்போ தாவது ஒரு தடவை ஒரு டூரிங் டாக்கீஸ் வந்து சில நாட்கள் திரைப்படக் காட்சிகள் நடத்தும். அந்த நாட்களில் நாங்கள் சேர்ந்தே சினிமாவுக்குப் போவோம். நாங்கள் மற்ற போலீஸ் அதிகாரிகளைப் போல் பாட்டுக் கேட்கத் தொழில் முறைப் பாடகிகளின் வீடுகளுக்குப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.