(Reading time: 32 - 63 minutes)
சிறுகதை - ராணி பசந்த் - அன்னதா சங்கர் ராய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

போவதில்லை. நாங்கள் இந்த விஷயத்தில் பழைய கட்டுப்பாடுகளை மதிப்பவர்கள்.

  

மேகர்பானுக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. என் மனைவி பிறந்தகம் போயிருந்தாள். மேகர்பான் படித்த பெண்ணாகத் தேடிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.

  

நாங்கள் இருந்தது பஞ்சாபில் ஒரு கண்டோன்மென்ட் நகரம். அங்கே ஒரு பட்டாளத்துக் காண்டிராக்டர் இருந்தான். பெரிய லட்சாதிபதி.. நாங்கள் அங்கு போய்க் சேர்வதற்குச் சிறிது காலம் முன்புதான் அவன் இறந்து போயிருந்தான். அவனுடைய சொத்தை அவனுடைய இரண்டு மனைவிகளும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மூத்தவள் எப்போதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டிருந்தாள். இளையவளோ கேளிக்கை, விளையாட்டுகளில் பொழுது போக்கினாள். இருவரும் அவரவர் மாளிகைகளில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். தனித்தனி வேலைக்காரர்கள், தனிவண்டிகள். அவர்களுடைய கணவனுக்கு "ராஜா" பட்டம் கிடைத்திருந்ததால் அவர்கள் "பெரிய ராணி", "சின்ன ராணி" என்றழைக்கப் பட்டார்கள்.

  

சின்ன ராணியின் பெயர் சூரஜ்பான். அவள் போன்ற அழகி உலகத்திலேயே இல்லை என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவளது நடத்தை அவ்வளவு சரியில்லையாம். அவள் பர்தா வழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கிளப்புக்குப் போவாள், வெள்ளைத் துரைகளுடன் நடனமாடுவாள், ஊரிலுள்ள அதிகாரிகளை அழைத்து விருந்து வைப்பாள். அவள் ஒரு சேலையை இரண்டாம் முறை அணிந்து யாரும் பார்த்த தில்லை. அவளிடம் குறைந்தது ஐந்தாறு ஜோடி செருப்புகள் இருக்குமாம். அவள் பாலாடையை உடம்பில் தேய்த்துக்கொண்டு பால் தொட்டியில் குளிப்பாளாம். பின்னர் அந்தப் பால் ஊரில் விற்பனைக்கு வருமாம்.

  

யாராவது ஒருவனை, அவன் யாராயிருந்தாலும் சரி, அவளுக்குப் பிடித்துவிட்டால் அவனுடைய எல்லா ஆசை களையும் தீர்த்து விடுவாளாம். அவளுக்குப் பணம் தேவையில்லை, பரிசு தேவையில்லை. அவனை அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனை. ஆனால் அவளுக்கு யாரையும் எளிதில் பிடித்து விடாது. நாங்கள் அந்த ஊருக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு எனக்கு சூரஜ்பானிடமிருந்து அவள் நடத்தும் விருந்து ஒன்றுக்கு அழைப்பு வந்தது. அவளுடைய பூங்காவில் விருந்து. மேகர்பானைக் கேட்டால்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.