(Reading time: 32 - 63 minutes)
சிறுகதை - ராணி பசந்த் - அன்னதா சங்கர் ராய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

அவன் தனக்கும் அழைப்பு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அவன் போகப்போவ தில்லையாம். நான் வேடிக்கையாகச் சொன்னேன், "ஒருவகை மாம்பழம் இருக்கு, அதுக்குப்பேர் 'ராணி பசந்த்', அதாவது 'ராணிக்குப் பிடித்தது..' உனக்கு 'ராணி பசந்த்' ஆக இஷ்ட மில்லையாக்கும்!"

  

"நான் மாம்பழமில்லே. எனக்குத் தன்மானம் இருக்கு. பலகாலமா ஆண்பிள்ளைதான் தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு வந்திருக்கான். தேர்ந்தெடுக்கற உரிமை ஆணுக்குத்தான். இங்கே விஷயம் நேர்மாறாயிருக்கு. சூரஜ்பான் என்னைத் தனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்க்கணுமா?" பேசும் போதே மேகர்பானின் இரத்தம் கொதித்தது.

  

"ஏன் சுயம்வர வழக்கம் இல்லியா? அதுவும் ராஜபுத்திரர் களிடம் உண்டே!"

  

"உண்டுதான். ஆனா, சுயம்வரத்திலே பெண்ணால் தேர்ந் தெடுக்கப்படாதவங்க சண்டைபோட்டு வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கிட்டுப் போற வழக்கமும் உண்டே..! தவிர, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? குமரிப்பெண்ணோட சுயம்வரம் எங்கே, நடத்தை கெட்டவளோட காமவேட்டை எங்கே?"

  

இதற்குப் பிறகு நான் மேகர்பானைத் தொந்தரவு செய்ய வில்லை. நான் தனியாகவே விருந்துக்குப் போனேன். சூரஜ்பான் உண்மையிலேயே பிரமாத அழகிதான்! அவளை எப்படி வருணிப்பேன் நான்! நான் உங்க மாதிரி கவியில்லே. இருண்ட இரவில் வாணவேடிக்கை பார்க்கிறோம். வானத்தை ஒளிமய மாக்கிக் கொண்டு பல நிற நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறு கின்றன. இது வெறும் கந்தகம், வெடியுப்பு போன்ற பொருள்களின் விளையாட்டுதான் என்பதை நாம் கணநேரம் மறந்து மெய் மயங்கிப் போகிறோம். அது மாதிரிதான் இருந்தது. அந்தப் பூங்கா விருந்தில் சூரஜ்பானின் வருகை. அங்கிருந்தவர்கள் கிளர்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள். கண்ணாடி கிடைத்தால் அவர்கள் அதில் தங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தங்களை ராணிக்குப் பிடிக்குமா என்று கவலைப்பட்டிருப்பார்கள்.

  

அதன்பிறகு அழைப்புக் கிடைத்தபோதெல்லாம் நான் அவளுடைய விருந்துகளுக்குப் போயிருக்கிறேன். 'ராணி பசந்த்' ஆவதற்காக அல்ல, 'வாண வேடிக்கை' பார்ப்பதற்காக. ஆனால் மேகர்பான் ஒர பிரச்சினையாகி விட்டான். அவனக்கு விருந்துகளில் கலந்துக் கொள்ள இஷ்டமில்லை. ஆனால் போகாமல் ஒதுங்கியிருக்கவும் முடியவில்லை. மாற்றல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.