(Reading time: 13 - 26 minutes)
சிறுகதை - தோழியா! என் காதலியா!
சிறுகதை - தோழியா! என் காதலியா!

“போடா லூசு...” என்றாள் அவள் சிரிப்போடு.

   

அவன் மீண்டும் திகைத்து பார்க்க,

   

“இருந்தாலும் உனக்கு ரொம்ப டூ மச் நினைப்பு தான்... நீ திட்டுறதுக்கு எல்லாம் நான் அழுவேனாக்கும்... காலையிலே வெங்காயம் கட் செய்துட்டு இருந்தேன்... அத்தை நான் செய்றேன்னு கேட்டுட்டு இருந்தாங்க... அப்போ தான் சார் வந்து வழக்கம் போல கத்துனீங்க, சரி தான் இன்னைய கோட்டா முடிச்சாச்சான்னு பார்த்தேன்... வெங்காயத்தினால் கண் கலங்கி இருந்திருக்கும்...”

   

“நிஜமாகவா சொல்ற?” என்றான் அவன் நம்ப இயலாது.

   

“நிஜம் நிஜம் நிஜம்டா விக்கி... கல்யாணம் ஆன புதிசில் எனக்கு அவ்வளவு கோபம் வரும் அப்போ எல்லாம் நீ என்னை ஒரு வார்த்தை கோபமா சொல்லி இருக்கீயா? இப்போ உனக்கு வேலை ஜாஸ்தி எனக்கு புரியுது... இதுக்காக எல்லாம் நான் உன்னை போய் கோவிச்சுப்பேனா செல்லம்...”

   

“தேங்க்ஸ்டா...” என்று மனைவியை அன்போடு அணைத்துக் கொண்டான்.

   

“உன்னோட அஞ்சு நிமிஷம் பேசினாலே எல்லா டென்ஷனும் பறந்து போகுது, இது தெரியாமல் நானும் டென்ஷனாகி உன்னையும் கஷ்டப் படுத்தி, நான் ஒரு சரியான மக்கு...”

   

“அது என்னவோ சரி தான்... இப்போவாவது உங்களுக்கு மக்குன்னு புரிஞ்சதே...”

   

“ஹேய்!”

   

“ஆனால் என் கண் கலங்கியதற்கா இத்தனை செண்டிமெண்ட்?”

   

“ம்ம்ம்... இன்னைக்கு சாப்பிடும் போது பிரென்ட்ஸ் பேசிட்டு இருந்தாங்க...அப்போ நந்தினி உன்னை பத்தி கேட்டுட்டு இருந்தா..”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.