(Reading time: 27 - 54 minutes)

'ரி அத்த" என்று காய்களை அலம்பி நறுக்க ஆரம்பித்தாள், காப்பியை குடிக்க மறந்தாள், இப்படியே வேலை ஒன்றின் மேல் ஒன்று செய்துக்க கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. மணி பதினொன்று ஆகியது, ஹாலில் யாரோ வரும் சத்தம் கேட்டது.. அவள் பின்னால் வந்து, "கொஞ்சம் ரூமுக்கு வரியா? ஆமாம் உன்ன யாரு இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது?" என்று கொஞ்சம் கடுமையாக கேட்டான், அவள் பயத்தில் கையில் இருந்த கரண்டியை பட்டென்று கீழே போட்டுவிட்டாள் "சரி ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு அவன் முன்னாடி சென்றான்

அவள் கையை துடைத்துக் கொண்டு ரூமுக்குள் சென்றாள், அங்கே அவன் எதோ டப்பாவை திறந்துக்கொண்டிருந்தான், அவள் வரும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தி அவளை நோக்கி  வந்தான் "இங்க வா, "அவள் அருகில் வந்தவுடன் "இந்தா, இந்த போன வச்சுக்கோ இதுல என்னோட நம்பரை ஸ்டோர் பண்ணியிருக்கேன்" என்று அவளிடம் கொடுத்தான்

அவள் அதை வாங்க தயங்கினாள். "என்ன தயக்கம் சஞ்சு, நீ என்கிட்டே உரிமையோடு எல்லாம் கேட்டு வாங்கிக்கலாம் அதுக்கு உனக்கு மட்டும்தான் அந்த உரிமை சஞ்சு"  இந்தா வாங்கிக்கோ “

"இல்ல, எனக்கு எதுக்கு போன் நான் எங்க போகப்போறேன்?"

"எங்கேயாவது போனாத்தான் போன் வச்சுக்கணுமா என்ன, இந்தா வாங்கிக்கோ"

அவள் தயங்கிக்கொண்டே வாங்கிக்கொண்டாள் "இந்த போன் வெளியே போறச்சேத்தான் யூஸ் பண்ணனும்னு இல்லம்மா, உனக்கு எப்போல்லாம் யார்கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போல்லாம் யார்கிட்டவேணா பேசலாம், ஏதாவது உனக்கு வேணும்னா நீ எனக்குக்கூட போன் பண்ணலாம் சரியா, பிடிச்சிருக்கான்னு சொல்லு?"

அவள் ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் "நான் போன கேட்டேன்"

"ஓ ! பிடிச்சிருக்கு" என்று கூறிவிட்டு தலை குனிந்தாள்

"குட்! ஆமா நீ எதுக்கு வேலையெல்லாம் செய்யற, இன்னிக்குத்தான் முதல் முதலா இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சிருக்க, நீ ஒரு வேலையும் செய்யாத,  எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு "

"இல்ல நம்ம வீட்டு வேலைய நாம பண்றதுல தப்பு என்ன இருக்கு?"

"நீ இந்த வேலையெல்லாம் பண்றதுக்கு ஒன்ன கல்யாணம் பண்ணிண்டு வரல, நீ என்னோட......சரி நீ என்ன படிக்கற, உன் எக்ஸாம்ஸ்லாம் முடிஞ்சிருச்சா?"

"இல்ல, நெக்ஸ்ட் வீக் எனக்கு எக்ஸாம்ஸ் இருக்கு"

"ம்ம்.. சரி,நீ எப்படி படிப்ப?"

"ஏதோ படிப்பேன்"

"சரி, இங்க பார், " என்று ஒரு கதவை திறந்தான், அங்கே நிறைய புடவைகளும் நல்ல சல்வார்களும் இருந்தது

"இதெல்லாம் உனக்குத்தான், அதனால பழைய டிரெஸ்ஸெல்லாம் வீட்ல போட்டுக்கோ,இதெல்லாம் புதுசு இனி வெளியே போச்சே இத போட்டுக்கோ"

"சரி " என்று கூறினாள் ஆனால் அவள் மனது ஏதோ வேதனை செய்தது... இது என்ன இவன் இப்படி என் மேல் அன்பை பொழிகிறானே... இவன் எப்படிப்பட்டவன் தெரியலியே' என்று நினைத்துக் கொண்டாள்

"என்னம்மா யோசிக்கற?"

"ஒன்னும் இல்ல"

"சரி, டிபன் சாப்டியா?" அப்பத்தான் அவளுக்கு ஞாபகம் வந்தது அவள் காப்பி கூட சாப்பிடவில்லை அவளை டிபன் சாப்பிட சொல்லி அவள் மாமியாரும் சொல்லவில்லை

"என்ன சாப்டியா இல்லியா, வா ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம் "

"நீங்க?"

"இல்ல இன்னும் சாப்பிடல, வா போலாம்"

அவள் விடு விடுவென்று வெளியே சென்றாள் அவனுக்கு ஒரு தட்டு எடுத்து கிடு கிடுவென்று டிபனை சூடு செய்து எடுத்து வைத்தாள்.     

அவனோ, அவளுக்கு கோபமென்று நினைத்து வேகமாக பின்னாடியே ஓடி வந்தான்… அவளுடைய அவசரத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் குறுஞ் சிரிப்புடன்  மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தான், 'அவளுக்கு தன் மேல் இவ்வளவு அக்கறையா?' என்று மனதுக்குள் வியந்தான், நினைக்கவே இனிமையாக இருந்தது.

அவள், தட்டை டைனிங் டேபிளில் வைத்து, அவனை நிமிர்ந்து பார்த்தாள்

அவன், அதே குறும்பு சிரிப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்தான்.

தட்டு வைத்திருந்த இடத்தில் உட்கார்ந்தான்,. “உன் தட்டு எங்கம்மா? வா நீயும் உக்காரு" அவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான்

"இல்ல நான்......"

"நீ சாப்பிட்டேன்னு பொய் சொல்லாத, எனக்கு தெரியும் நீ சாப்பிடலேன்னு , வா வந்து உக்காரு"

"இல்ல நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிடறேன்"

'இந்தக் கதையே வேணாம் வா," என்று அவன் ஒரு தட்டை எடுத்து அதில் டிபனை போட்டுக் கொண்டு வந்தான், தட்டை டேபிளில் வைத்து விட்டு, அவளுக்காக சேரை இழுத்து உட்கார சொன்னான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.