(Reading time: 27 - 54 minutes)

ருவரும் அன்று இரவு கிளம்பி சென்னைக்கு போனார்கள் அவளுக்கு ஆச்சர்யம் தான் இருந்த ஊருக்கே எதற்கு கூட்டி வந்திருக்கிறானென்று அவளுக்கு புரியவில்லை, இரவு பதினோரு மணிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.  அவன் பிரெண்டினுடைய அபார்ட்மெண்டில் தங்கினார்கள், தூங்கி எழுந்து அடுத்தநாள் காலையில், நாம வெளியே போகணும் ரெடியாகு,"என்று சொல்லிவிட்டு வெளியே எழுந்து போய் சமயலறையில் என்ன இருக்கிறதென்று பார்த்தான், ரவை இருந்தது கிடு கிடுவென்று ரவை உப்புமா கிளறினான், இன்ஸ்டன்ட் காப்பி பவுடர் இருந்தது பால் பவுடர் இருந்தது காப்பியும் கலந்தான் அவள் டிரஸ் செய்து வெளியே வரும்போது கம கமவென்று வாசனை வந்தது, யார் சமைக்கிறாங்க என்று வந்து பார்த்தாள், அவன் எல்லாம் ரெடியாக வைத்திருந்தான்    

“ஐயோ!! நீங்க எதுக்கு இதல்லாம் பண்றீங்க? அதுக்குத் தான் நா இருக்கேனே?”

“அப்ப நா சாப்பிடத் தான் லாயக்குன்றியா?” என்று பொய் கோபத்துடன் கேட்டான்

“”நீஙக தள்ளுங்க நான் எடுத்து வக்கறேன்”

“இந்த கதையே வேணாம் மேடம்,நான் ஆரம்பிச்சத முழுசா முடிக்கனும். இப்ப இங்க உக்கார்ந்து, நல்லா சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மேடம்..”

அவள் சாப்பிட்டுவிட்டு, “ ம்.. ஏதோ சாப்டற மாதிரி இருக்கு பரவாயில்ல ….. ம்ம்…. போனா போறதுன்னு ஒரு அஞ்சு மார்க் கொடுக்கலாம்…”

“அடேய் சூர்யா! இதுக்குத் தான் சொல்றது ரொம்ப தல கணம் ஆகாதுன்னு… பாத்தியா எப்படி விழுந்துட்டேன்னு…’

அவன் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்ததை பார்த்து சிரித்தாள்… அவள் சிரிக்கும் அழகை பார்த்து தன்னை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்

தன்னை அவளிடம் இழந்து கொண்டிருந்தான்.

“ பரவாயில்லை நீ, உன் புருஷன்னு அஞ்சு மார்க் கொடுத்துட்ட, இது ரெண்டு கூட தேறாதுன்னு எனக்கு தெரியும்.. தேங்ஸ் எனக்காக பாவம் மார்க்க அள்ளி வீசிட்ட”

“சாரி…. ரொம்ப நல்லா இருக்கு, நெய்யோட உங்க பாசத்தையும் கலந்திருக்கீங்க, நல்லா இல்லாம எப்படி போகும்.”

அவள் திரும்ப சிரித்தாள் அவன் தனக்கும் ஒரு தட்டு எடுத்துக் கொண்டு வந்தான்.

“நல்லா பேசற நீ…..சஞ்சனா,  ரொம்ப டைமாயிடுத்து சீக்கரம் சாப்டு”

சரி என்று தலை ஆடடினாள்,

அவர்கள் கிளம்பி கீழே பார்க்கிங்குக்கு வந்தார்கள், அங்கே, சூர்யாவின் நன்பனுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றனர்

அவர்கள் எங்கே போகிறார்கள் என்று அவளுக்கு தெரியாது. ஆனால், அவன் கூட்டிக் கொண்டு போன இடம் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை திரும்பிப் பார்த்தாள், அவன் நமட்டு சிரிப்புடன் காரை ஓட்டி அந்த பெரிய கேட்டினுள் நுழைந்தான். பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு "என்ன பார்க்கற "என்று அவளை பார்த்து கேட்டான்

“இது எங்க காலேஜ் இங்க….இல்ல நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்?"

"நான் என்ன என் காலேஜுண்ணா சொன்னேன்?எதுக்கா இருக்கும்னு நினைக்கற?"

"தெரியல, எனக்கு டி சி வாங்கவா "

"இல்ல இப்ப உனக்கு  எக்ஸாம்ஸ் இல்லியா ? அத எழுது.. படிச்சிருக்க இல்ல? "

"படிச்சிருக்கேன், ஆனா இப்போ இந்த எக்ஸாம்ஸ் எழுதிட்டு அப்புறம் என்ன பண்ணப்போறேன், திரும்பி நாம ஊருக்குத்தானே போகனும் "

"தட்ஸ் ரைட், ஊருக்குத்தான் போகப்போறோம், நான் இங்க பிசினெஸ் ஒன்னு ரொம்ப நாளாவே ட்ரை பண்ணிட்டிருந்தேன் அது இப்போ கிடைச்சிடுத்து, இன்னிக்கு பைனலைஸ் பண்ணிடுவேன் , இங்கயே நாம வந்துடலாம், அப்போ இதே காலேஜ்ல நீ கன்டின்யூ பண்ணலாம்"

"அப்போ என் படிப்பை கன்டின்யூ பண்ணலாமா? உங்களுக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லியா? அம்மாக்கு,?"

"எனக்கு என்ன ப்ராப்லம் நானா படிக்க போறேன் நீதானா படிக்க போற? அப்புறம் அம்மா, கொஞ்சம் முறைச்சுக்குவாங்க அத சரி பண்ணிக்கலாம் நீ கவலப் படாத"

"நிஜமாத்தான் சொல்றீங்களா?" என்று அவள் துள்ளிக் குதித்தாள், ஒரு சின்ன குழந்தையின் எதிர்பார்ப்பும், துடிப்புமாக அவளை பார்த்த அவன் தலையை சாய்த்துக் கொண்டு அவளுடைய அந்த துடிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தான், அந்த நேரம் அவனை பார்த்த அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது தலையை குனிந்துக் கொண்டாள்.

"என்ன வெக்கம் சஞ்சனா, நான் தான, உன் முகம் சிவக்கச்ச எவ்வளவு அழகு தெரியுமா, என் கைய கட்டி வச்சுருக்கேன், சாரி என்னென்னவோ பேசிண்டிருக்கேன்.. வா உள்ள போலாம்"

"நான் இப்ப போக முடியாதுங்க, என்கிட்ட புக் பாகில்ல "

"கவலையே படாதம்மா, நான் கொண்டு வந்திருக்கேன் பின்னாடி டிக்கில இருக்கு "என்று ரெண்டு கண்ணையும் சிமிட்டிவிட்டு கீழே இறங்கினான் சூர்யா. அவளோ அந்த ஒரு கண் சிமிட்டலிலும், அந்த மிதமான புன்னகையில், தன்னை மறந்துஅப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

அவன் பாகோடு அவள் புறம் வந்து கதவை திறந்தபோதுதான் அவள் தன்னிலை உணர்ந்தாள். "என்ன மேடம் க்ளாஸுக்கு போக மனசில்லையா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.