(Reading time: 27 - 54 minutes)

"ல்ல இதோ போறேன்" என்று வேக வேகமாக கீழே இறங்கினாள். நான் வரட்டா?" என்று அவனை பார்த்து கூறினாள்

"குட் லக், நல்லா எழுதணும்"

"தேங்க்ஸ்... தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன் ஃபார் எவரித்திங்"

"யு ஆர் வெல்கம் மை டியர்" என்று தலையை சாய்த்து பார்த்த பார்வையில் ஒரு நொடி அவள் அப்படியே நின்றாள், பிறகு வேகமாக சென்று விட்டாள்

அப்போது அவனுடைய போன் மணி அடித்தது எடுத்து பேசினான். அவன் எதிர்பார்த்தது அமைந்துவிட்டது . அதையும் முடிவு செய்துவிட்டு  வந்துவிட்டான் சாயந்திரம் நாலு மணிக்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு வந்தான்

ரு வாரம், அவளை படிக்கச் சொல்லிவிட்டு, அவனே சமயல்,  மற்ற வேலைகள் என்று எல்லாவற்றையும் செய்தான். அவள் நான் செய்கிறேன் என்று சொன்ன போது,  “என்ன மார்க் கொறைஞ்சுட்டா வேல மேல பழி போடலாம்னா இந்த கதையே வேணாம் ஒழுங்கா போய் படி” என்று சிரித்துக் கொண்டே அவளை விரட்டினான். அவளும், புன்னகையோடு படிக்கச் சென்றாள்.

இன்னும் இரண்டு நாள் வேலை இருந்தது...அன்று இரவு, “சஞ்சனா!” என்று அழைத்தான் சூர்யா

“ம்” என்றாள்

“ எக்ஸாம்ஸ் எப்படி பண்ணிருக்க?”

“நல்லா பண்ணிருக்கேன்”

“குட்! என்ன பத்தி ஒனக்கு என்ன தெரியும்?”

அவள் வாயை திறக்க வில்லை. அவனே பேசினான்

“எனக்கு தெரியும்மா நீ பதில் சொல்ல மாட்டேன்னு…... ஒனக்கு பெரிசா ஒன்னும் தெரியாதுன்னும், தெருஞ்சுக்கறதுல ஒனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னும் நினைக்கறேன், கரக்ட்டா?”

“அதெப்படி இன்ட்ரஸ்ட் இல்லன்னு நீங்களா எப்படி நினைக்கறீங்க, என் லைஃப மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்காதா? என்ன, எனக்கு யாரும் எதுவும் சொல்லல, அது தான் கொஞ்சம் வருத்தம்”

“ ம்.. அப்போ சரி

நான் எங்கேர்ந்து ஆரம்பிக்கறது... உன்ன பொண்ணு பார்க்க வரலைன்னு கோவமா ?"

"கோவமில்ல, வருத்தம்தான், எங்கப்பா அம்மா காலத்துல கூட ஒருத்தருக்கொருத்தர் பார்த்து பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிட்டாங்க, ஆனா எனக்கு கல்யாணம்னு மொட்டையா சொல்லிட்டாங்க அதுவும் எங்க அண்ணிதான், அவங்களுக்கு என் மேல அப்படி என்ன கோவம்னு எனக்கு தெரியல, அப்புறம் எனக்கு வரபோற கணவர் பேர கூட சொல்லல, போட்டோவாது காட்டியிருக்கலாம் அதுவுமில்லை.. எனக்கு என்ன ஞாபகம் வந்ததுன்னா, கசாப்பு கடைக்கு அனுப்பற ஆட்டுக்கு அலங்காரம் பண்ணி அனுப்புவாங்க அத மாதிரி எனக்கு அலங்காரம் பண்ணி அனுப்பிச்சுட்டாங்க"

அவள் கையை பிடித்து "சாரி, சஞ்சு, ரொம்ப ரொம்ப சாரி! என்ன பார்த்தா நீ எங்க என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடுவியோன்னுத்தான் நான் பார்க்க வரல.அது பெரிய தப்புதான் அதுக்காக நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்"  அவன் கண்களில் கண்ணீரை பார்த்த அவள்

"அதெல்லாம் முடிஞ்சுபோன விஷயம் அத எதுக்கு இப்ப பேசி ரெண்டு பேரும் மனசு வருத்தப் பட்டுக்கணும் சொல்லுங்க, ஐ அம் ஆல்ரைட் நவ், நீங்க நல்லவராயிருக்கீங்க பரவாயில்லங்க, வேற மாதிரி ஆளா இருந்தா என் வாழ்க்க எப்படி ஆயிடும் நினைச்சுக்க கூட பார்க்க முடியல?"

"உன்ன மாதிரி நல்லவளுக்கு கடவுள் அப்படிலாம் பண்ண மாட்டார்... சரி நீ சொன்ன மாதிரி இத பத்தி பேசினா மன வருத்தம்தான் மிஞ்சும், ஆனா நா உன்கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன் ... சரி, நான் ஒரு எம்பிஏ, சின்ன வயசுலயே நா அப்பாவோட டிபன் கடைய எடுத்து நடத்தவேண்டியதா போச்சு. பிளஸ் டூ வோட படிப்பை நிறுத்திட்டு நான் பொறுப்ப எடுத்துண்டேன், அப்புறம் கரஸ்ல படிச்சேன்... கொஞ்ச கொஞ்சமா டிபன் கடைய ஒரு பாஸ்ட் புட் ரெஸ்டாரண்ட்டா மாத்தினேன், அப்புறம் பெரிய ஹோட்டலா,ரெஸ்ட்டாரெண்டோட டவுன்ல ஆரம்பிச்சு, அங்கேயே வீடு வாங்கினேன்... ஓரளவு செட்டில் ஆயாச்சு, ஆனா, ரொம்ப நாளா எனக்கு இங்க சென்னைல ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கனும்னு ஆச நானும் இடம் ஒன்னு பார்த்துண்டேத்தான் இருந்தேன், இப்ப நாம இங்க வந்த அன்னிக்கு ஒரு இடம்  போய் பார்த்தப்போ நான் எதிர்பார்த்த மாதிரியே இருக்கு அதான் ஓகே சொல்லிட்டு வந்துட்டேன்"

"ஓ!"

"இந்த "ஓ" க்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியல? ஆனா இந்த ஒரு வாரமா உன் கிட்ட எதுவும் பேசவேணாம்னுதான் இருந்தேன், ஏன்னா உன்னோட எக்ஸ்சாம்ல நீ கான்செண்ட்ரட்  பண்ணனும்னு தான் எத பத்தியும் பேசல, நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்"

"ம்.. புரியுது"

"எல்லாம் நல்ல டைமிங், நாம இங்க வந்து செட்டில் ஆயிடலாம், நீ ஹோட்டல் டெக்னாலஜி பண்ணா நம்ம ஹோட்டல் பிஸினெஸ்ல நீயும் பார்த்துக்கலாம், இல்ல ஒனக்கு வேற ஏதாவது இன்டெரெஸ்ட் இருந்தா அதுல நீ பர்ஸயூ பண்ணிக்கலாம் அது உன் இஷ்டம்"

"எனக்குன்னு எந்த இன்டெரெஸ்ட்டும் இருந்ததில்ல"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.