(Reading time: 27 - 54 minutes)

"ன்னோட ஆச என்ன தெரியுமா? நீ பெரிய ஆளா வந்து இந்த ஊரே, இந்த நாடே உன்ன புகழற மாதிரி பெரிய ஆளா வரணும், என்னன்னு தெரியல என் மனசு சொல்லிட்டேயிருக்கு, நீ பெரிய ஆளா வரப்போறேன்னு"

"எனக்கே எந்த ஆம்பிஷனும் இல்லென்றேன், நீங்க என்னவோ நாடே புகழறமாதிரி வரப்போறேன்னு சொல்றீங்க?"

"ஆமாம், கண்டிப்பா இது நடக்கப் போறது பாரேன்"

அவள் ஒரு புன்னகை ஒன்றை வீசினாள்.

அவள் மனதுக்குள்'இவருக்காகவாது ஏதாவது அசீவ் பண்ணனும்" என்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்

அவர்கள் ஆரம்பித்த சென்னை ஹோட்டலை அவள் பெயரிலேயே ஆரம்பித்தான் சூர்யா. அதுவே அவளுக்கு ஒரு ஊக்கமாக இருந்தது அதையே பெரிய லெவெல்ல செயின் ஹோட்டலா இந்தியாவில் முக்கிய நகரங்களில் இருக்கவேண்டும் என்று அவள் மனதில் உறுதி கொண்டாள் அதை செயல் படுத்தவும் ஆரம்பித்தாள். ஹோட்டல் டேகினாலஜியும், எம்பிஏயும் படித்தாள், அவளே முடிவெடுத்து படிப்படியாக சென்னையிலேயே நிறைய இடங்களில் தங்கள் ஹோட்டலை நிறுவினாள். அதை அப்படியே அடுத்து மாநிலங்களிலும் நிறுவினாள்.. இப்படியே பெரிய பிசினெஸ் வேர்ல்ட்டில் பெரிய புள்ளியானாள், அவளுக்கு ஒரு அவார்டும் கிடைத்தது அந்த விழாவிற்கு சஞ்சனாவும், சூர்யாவும் சென்றனர், அப்போது அவர்கள் அவள் பேரை அழைத்தவுடன் அவள் மேடைக்கு சென்றாள், " சஞ்சனா மேடம் உங்கள பத்தி ஏதாவது பேசுங்களேன்"  

"என்ன பத்தி?"

"ப்ளீஸ் மேடம்"

மைக்கை வாங்கி கொண்டு " எல்லோருக்கும் வணக்கம், என்ன பத்தி சுருக்கமா பேசிடறேங்க, இங்க இருக்கறவங்க பேசித்தான் ஆகனுக்குறாங்க, அதனால கொஞ்சம் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்.பெஸ்ட்  உமன் ஆன்ட்டர்ப்ரூனர் ஆப் தி இயர் அவார்ட், என்ன தேர்ந்தெடுத்திருக்காங்க சந்தோஷமாயிருக்கு , ஆனா இந்த அவார்ட் நிஜமாவே என்னோட பிரெண்ட்க்குத்தான் போகனும், என்னோட தோழர்,கைட், வேற யாருமில்லீங்க என் கணவர் சூர்யாதான், அவரோட ட்ரீம்தான் நான் ஏதாவது அச்சீவ் பண்ணனும்னு, வெறும் ட்ரீம் மட்டுமில்ல அதுக்காக என்ன படிக்கவச்சு , எனக்கு பிசினெஸ் சொல்லிக் கொடுத்து கூடவே இருந்து ஊக்குவச்சு, அவருக்கு வரவேண்டிய எல்லா பேரும் புகழும் எனக்கு வறவெச்ச என் கணவர் என் தோழர் ன்னு சொன்னா அது மிகையாகாது, மதிற்பிக்குரிய பெரிய மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த அவார்ட் நான் என் கணவர் கையால் வாங்கணும்னு ஆச படறேன், ப்ளீஸ் அனுமதிப்பீங்களா? "

'எஸ்' என்று தலையாட்டிக் கொண்டே கூறினார்கள்

"தேங்க்ஸ் சார், என்னங்க ப்ளீஸ் ஸ்டேஜுக்கு  வாங்க"

அவன் ஸ்டேஜுக்கு வரும்போது எல்லோருடைய கண்ணும் அவர்கள் இருவரின் மீதுதான், எப்படி சால்ட் அண்ட் பெப்பர், அந்த ஆள் அவ்வளவு கருப்பு, இந்த பொண்ணு இவ்வளவு வெள்ளை' என்று பேசிக் கொண்டிருந்தது அவர்கள் முக பாவனையில் தெரிந்தது 

அவன் வந்தவுடன் அவளின் கையை பிடித்து விஷ் செய்துவிட்டு அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு, அவார்டை அவன், அவள் கையில்  கொடுக்கையில் அவன் காலில் விழுந்து வணங்கினாள். அவன், அவளை தூக்கிவிட்டு அவள் தோளை அனைத்துக் கொண்டு “என்ன பண்ற நீ, இப்பத்தான் தோழன் சொல்லிட்டு?கால்ல விழற?"

"தோழன்னு சொன்னாலும் நீங்க என் கணவர்தான, கால்ல விழுந்தா தப்பேயில்லை" என்று கூறிவிட்டு அவன் கொடுத்த அவார்டை வாங்கிக் கொண்டாள், வாங்கும்போது, அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது, அவன் அதை துடைத்து விட்டான்  

"மேடம் இந்த அவார்டை பற்றி என்ன நினைக்கறீங்க?" அங்கே வந்திருந்த பல தொலைக்காட்சியிலிருந்து  பேட்டி கண்டார்கள்

"இந்த அவார்டை பத்தி நினைக்க .... எங்களோட ஹார்ட ஒர்க்குக்கு எங்க பிசினெஸ் வளர்ச்சி ஒரு அக்னாலெட்ஜ்மென்ட்னா  இந்த  அவார்ட் எங்களுக்கு ஒரு என்கரேஜ்மென்ட் "

"எங்களுக்குன்னு நீங்க சொல்றது, உங்க ஹஸ்பண்டா  இல்ல தோழரையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டனர்

" என் கணவன் என் தோழன் ங்க இதைவிட உங்களுக்கு என்ன சொல்லமுடியும், ஐ அம் ஸோ ப்ளஸ்ட்... இந்த ஜென்மத்துல என் கணவர் ஒரு தோழரா வந்தது இத விட என்ன வேணும் ஒரு பெண்ணுக்கு"

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன், அவன் தனக்காக ரொம்ப நாள் காத்து விட்டான் பாவம் என்று நினைத்துக் கொண்டு, அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவனுக்கு பால் எடுத்துக் கொண்டு போனாள் சஞ்சனா " என்னங்க இந்தாங்க பால் " அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான், அவள் அலங்காரத்தில் அவள் அழகு இன்னும் கூடியிருந்தது...

"என்ன மேடம் பெட்ரூமுக்கு வழக்கத்துக்கு மாறாக அலங்காரத்துடன் வந்திருக்கீங்க?"

"ம்ம்... ' என்று வெட்கப் பட்டுக் கொண்டே தலை குனிந்து கொண்டாள், அவள் முகம் சிவந்தது அதில் அவன் தன்னை இழந்தான், அவளிடம் இத்தனை வருடங்களில் அவன் எல்லை மீறியது கிடையாது, இருவரும் தோழர்களை போலவே பழகி வந்தனர். இன்று, அவளே இந்த நேரத்தில் தன்னை அலங்கரித்து வந்திருப்பதை பார்த்தால்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.