(Reading time: 27 - 54 minutes)

ந்தப் பக்கம் வந்த அவள் மாமியார் "நல்லா உறுப்பற்றும் குடும்பம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனார்

"பரவாயில்ல, அம்மா சொல்றத தப்பா எடுத்துக்காத, அவங்க அந்த காலத்து மனுஷங்க இல்லியா அப்படித்தான் பேசுவாங்க, நீ உக்காரு"

"இல்ல நான் அப்புறம் சாப்பிடறேன், நீ.... நீங்க சாப்பிடுங்க"

"சும்மா நீன்னே கூப்பிடு பரவாயில்ல"

"பார் இப்பவே மணி பதினொன்ற ஆயிடுத்து, இதுக்கப்புறம் டிபன் சாப்பிட்டு எப்ப சாப்பாடு சாப்பிடுவ? உக்காரு  முதல்ல" என்று மிரட்டும் தொனியில் கூறினான், அவளும் பயந்து உட்கார்ந்தாள்

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர் " இத பார் சஞ்சனா, இந்த மாதிரியெல்லாம் தெனம் பண்ணாத"

அவள் குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள், தான் சொல்வது அவளுக்கு புரியவில்லை என்று புரிந்துகொண்ட அவன் "சாப்பிடற விஷயத்தை சொன்னேன், ஒவ்வொரு வேளையும் ஒழுங்கா டைமுக்கு சாப்பிடணும், இல்லேன்னா ஒருநாள் முழுக்க நான் சாப்பிடமாட்டேன் என்ன புரிஞ்சுதா?"

அவள் விக்கித்து அவனை பார்த்தாள் " என்ன அந்த லுக்கு குடுக்கற? நிஜமாத்தான் சொல்றேன், நீ ஒரு வேளை சாப்பிட லேட்டாணா, நான் ஒருநாள் பூரா சாப்பிட மாட்டேன்"

"ஐயோ" என்று அவனை பார்த்தாள்

"ஐயோல்லாம் சொல்ல வேண்டாம், ஒழுங்கா டைமுக்கு சாப்டா போதும்"

"சரி " என்றாள் தலையை பலமாக ஆட்டிக் கொண்டே 

"ம், அப்பறம்... உனக்கு என்னெல்லாம் சாப்பாட்டுல பிடிக்கும்னு சொல்லு, அம்மாவ விட்டு பண்ணசொல்றேன் "

"எனக்கு.... எதுவானாலும் சாப்பிடுவேன், இதுதான், அதுதான்னெல்லாம் ஒன்னும் கிடையாது"

"சரி, ஒனக்கு எந்த ஊருக்கெல்லாம் போனோம்னு ஆசை சொல்லு"

"எனக்கு எந்த ஆசையும் இல்ல"

"ஏன்?"

"அதபத்தில்லாம் ஆசைபடறதுக்கு யாராவது கூட்டிட்டு போறதுக்கு இருந்தாத்தான் இந்த ஆசையெல்லாம் வரும்"

அவனுக்கு அவளது பதிலை கேட்டு வருத்தமாக இருந்தது, பாவம் அம்மா அப்பா இல்லாத பொண்ணு.. என்று நினைத்துக் கொண்டான்

 "சரி பரவாயில்லை நானே உன்ன கூட்டிட்டு போறேன்" என்று அவன் அவளிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டான். அவளிடமிருந்து பெரும்பாலும் ஓன்று ரெண்டு வார்த்தையாகத்தான் பதில் வந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அவளிடம் பேசினால்தான் அவளை பற்றி புரிந்துக் கொள்ள முடியும் என்று பேச்சு கொடுத்துக் கொண்டே சாப்பிட்டான்

ரு வாரம் எப்படியோ ஓடி விட்டது

வேலையிலிருந்து வந்த சூர்யா, வீட்டில் எல்லா இடத்திலும் தன் அம்மாவை தேடினான், பின் கட்டில் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார “ அம்மா, நானும், சஞ்சனாவும் ஊருக்கு போறோம், வர ஒரு வாரம் ஆகும்”

“ஓ! வெரும் தகவல் சொல்ல வந்தியா? சரி” என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். ஒரு நொடி தன் அம்மாவை பார்த்தான், அவர் தன் வேலையைத் தொடர்ந்தார்.

அவன், அங்கிருந்து தன் ரூமுக்குச் சென்றான். அங்கே தன் மனைவி இல்லை. திரும்பி சமயலறையில் பார்க்க வந்தான். ஆனால் வாசலிலிருந்து பெரிய பேகை சுமந்துக்கொண்டு வந்தாள். ஓடிப் போய் அந்தப் பையை வாங்கிக் கொண்டான்…. அவள் முகத்தில் வியர்வை வழிந்தது, சோர்வாக காணப்பட்டாள், அவனைப் பார்த்ததும், அவள் உணறாமலே கண்களில் கண்ணீர்

அவன் இருதயம் வெடித்துவிடும் போலிருந்தது. “ என்னடா! என்ன இது கோலம், ஒன்ன யார் இதல்லாம் பண்ண சொன்னா? நீ என்னோட …….சரி சொல்லு அம்மா செய்ய சொன்னாங்களா?”

“ஐயோ அதல்லாம் ஒன்னுமில்ல, நம்ம வீட்டு வேலையை நாம செய்யறதுல என்ன பெரிசா வந்துடுத்து, என்ன இந்த வேலைல்லாம் பழகிக்கல, அதான்…”

“செய்ஞ்சாதான பழகும்” என்று சொல்லிக் கொண்டே வந்தார் சூர்யாவின் அம்மா

“ஏம்மா, மணி எங்க? அவன்தான இந்த வேலையெல்லாம் செய்வான்.”

அவன்தான் லீவுல போயிருக்கான, நான்தான் போலாம்னு கிளம்பினேன் அவதான் நானே போறேன்னா நான் செய்யச்சே அவ செய்யக்கூடாதா என்ன?"

"அம்மா இத்தன்னாளா யாரும் போகலியே? வீட்ல மணியோ, நம்பியோத்தான போவாங்க? இப்ப மட்டும் எதுக்கு நீயோ இவளோ போகணும், அதுவுமில்லாம, என்ன கல்யாணம் பண்ணிண்டு வந்தவளை கஷ்டப் படாம வச்சுக்கவேண்டியது என்னோட கடமை, இத என்கிட்டே சொல்லியிருக்கணும் நான் ஆள அனுப்பிச்சிருப்பேன், ஏம்மா... ஏம்மா இப்படி பண்ண, நம்ம வீட்டு பொண்ணாயிருந்தா இப்படி அனுப்பியிருப்பியா?" அவன் கண்களிலும் குளம் கட்டியது.

"ஏன் இத்தனாளா இல்லாம இப்ப உன் பொண்டாட்டி போனவுடனே உனக்கு உரைக்குதோ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.