(Reading time: 27 - 54 minutes)

"ரி, நான்தான் ஆள் போட்டிருக்கேனே நீங்கள்லாம் எப்போ வெளியே போய் வாங்க போயிருக்கீங்க? இப்ப மட்டும் அவளை அனுப்பி வாங்க சொல்றீக்கீங்க? அது மட்டுமில்ல ஏன் ஒரு ஆட்டோ கிடைக்கலையா, எதுக்காக தூக்கிட்டு வந்திருக்கா?"

"அத நீ அவ கிட்ட கேக்கணும் என்ன கேக்கற?"

அவளை திரும்பி பார்த்தான்... அவள் தலை குனிந்துக் கொண்டிருந்தாள்,  பாவமாக இருந்தது அவனுக்கு "சரி வா உள்ள போலாம்"

என்று விடு விடுவென்று தன் ரூமுக்கு கோபத்துடன் போனான்

அவள் பயந்துக் கொண்டே அவன் பின்னாடியே போனாள். உள்ளே போனவுடன் "சஞ்சனா, துணிகளை பேக் பண்ணு ஊருக்கு போகணும்"

அவள் பயந்துவிட்டாள்,  என்ன நடந்தது ஏன் என்னை அனுப்பறார் "சாரி நான் என்ன பண்ணிட்டேன், ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுங்கோ, என்ன ஊருக்கு அனுப்பாதீங்க" அவளுக்கு தன் அண்ணியை பார்க்க இஷ்டமில்லை, ஐயோ அங்கே போய் இருக்கணுமா என்று அவள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்

"ஐயோ என்ன நீ, நான் என்ன சொல்றேன் நீ என்னவோ மன்னிப்பெல்லாம் கேக்கற? இல்லம்மா நாம ரெண்டு பேரும் ஒருவாரம் வெளியூர் போகப்போறோம் உனக்கு வேண்டியதெல்லாம் பேக் பண்ணிக்க அதைத்தான் சொன்னேன்"

"சரி... எப்போ போறோம்?"

"இன்னிக்கு நைட், எல்லாம் ரெடி பண்ணிக்கோ"

"சரி...அப்புறம்..."அவன் என்ன என்பதுபோல் பார்த்தான் "உங்களோட ட்ரெஸ்ஸெல்லாம் ?"

"என்னோடத நான் பாத்துக்கறேன், உன்னோடது மட்டும் பேக் பண்ணிக்க"

‘சரி’ என்று தலையாட்டினாள்

அம்மா, உன்னோட கொஞ்சம் பேசணும் வரியா?" என்று அவர்கள் எப்போதும் தனியாக பேசவேண்டிய விஷயத்தை வீட்டின் பின்புறம் ஒரு பெஞ்ச் இருக்கும் அங்கே தான் பேசுவார்கள் யாரும் அப்போது அங்கு வரமாட்டார்கள், அங்கு சென்றான் பின்னாடியே அவன் அம்மா சென்றார்

"அம்மா, உனக்கு எப்படிம்மா மனசு வந்தது, சஞ்சனா உன் பொண்ணா இருந்தா இப்படி அனுப்பியிருப்பியா? நீ ஒரு அம்மாம்மா, நீ தான் எடுத்துக்காட்டா இருக்கணும், உன் மாமியார் நாத்தனார் உன்ன படுத்தினாங்கன்னு, நீயும் அவங்கள மாதிரியே மாமியார்னா படுத்தணும்னு முடிவு பண்ணியா இது வழி வழியா வரணுமாம்மா, நீ படுத்தினேன்னு என் பொண்டாட்டி நாளைக்கு எங்களுக்கு வர மருமகளை இப்படி படுத்தணுமா?.... என்னம்மா இது?

"என்னடா நேத்து வந்த உன் பொண்டாட்டிக்காக என்ன இவ்வ்ளோ பேசற?"

“கரெக்ட் நேத்து வந்த பொண்டாட்டிதான்,ஆனா அவ என்னோட சரி பாதிம்மா, அப்பாக்கு நீ எப்படியோ அப்படி, எனக்காக எல்லா உறவுகளையும் தியாகம் செய்துருக்கா, எனக்காக வாழ்நாள் முழுக்க நிறைய தியாகம் பண்ண போறவள், இதற்கு மேல  எனக்காகவே பிறந்த……..

நம்ம வீட்டு பொண்ணு வேற வீட்டுக்கு போனா இப்படி அவங்க மாமியார் நாத்தனார் நடந்தா உனக்கு நல்லாயிருக்குமா? அந்த  பொண்ணு ஏன் இந்த குடும்பத்துக்கு வந்தோம்னு நினைக்கும்படி பண்றியே? அம்மா, நீ குடும்ப தலைவிம்மா, இவ்வளவு சீப்பா உன் மாமியார்த்தனத்தை காட்டாதம்மா, அவளையும் உன் பொண்ணா நினைச்சுக்கோ... ஏன் உனக்கு என்னம்மா ப்ராப்லம் உன்ன கவனிக்க மாட்டேன்னா?  நான், உன் பிள்ளைம்மா, எப்படி கவனிக்காம போவேன்? ஒனக்காக என் பொண்டாட்டியையும் உட்டு தர மாட்டேன், பொண்டாட்டிக்காக உன்னையும் உட்டு தர மாட்டேன்….நீ கவலையே படாத.

ஒரு குடும்பத்தோட பேர் புகழ் எல்லாம் அந்த வீட்டு மாமியார், மருமகள் ஒத்துமைல்லதான் இருக்கு, உன் மருமகத்தான் உன் பேரை நிலை நாட்டனும், இது நீ மட்டுமில்லம்மா, இது உலகத்துல இருக்குற ஒவ்வொரு மாமியாரும் தெரிஞ்சுக்க வேண்டியது... உங்க மருமககிட்ட பிரெண்ட்லியா இருக்கணும் ஏன்னா அவங்க உங்கள பின்பற்றப்போறவங்க அதனால நீங்க பிரெண்ட்லியா இருந்து அவங்களுக்கு எல்லாம் கத்து கொடுத்தா, அவங்க மருமககிட்ட உங்களப்பத்தி பெருமையா பேசி உங்கள மாதிரியே நடந்துப்பாங்க.. அது மட்டுமில்ல நம்ம வீட்டு பொண்களும் உன்னையும் உன் மருமகளையும் பார்த்து போற இடத்துல நல்லபடி நடந்து உன் பேரை காப்பாத்துங்க….    இதுக்கு மேல உனக்கு  நான் சொல்லவேண்டியதில்ல….. அப்படியே சென்னைல நான் தேடிட்டிருந்த இடம் கிடைச்சுடுத்து எல்லாம் பேசி முடிச்சுட்டேன், சீக்கிரமே ஆரம்பிச்சுடுவேன், அதனால நானும் சஞ்சனாவும் சென்னைல வீடு பார்த்ததுண்டு போயிடுவோம், நான் மாட்டும் அடிக்கடி இங்க ஹோட்டலை பார்த்துக்க வருவேன், சஞ்சனாவும் அங்க காலேஜ் போகனும், அதனால பொண்டாட்டி பின்னாடியே போயிடுவேன்னு நினைக்காத, அவளும் முக்கியம் நீயும் முக்கியம் இது எல்லாத்துக்கு மேல அவ படிப்பு முக்கியம்மா, நீ எப்படி என்ன பேசினாலும் சரி, தாய்க்கு பின் தாரம், நீ என் தாய் என்ன பெத்தவ, எனக்காக நீ எத வேண்ணா விட்டு கொடுக்கலாம் உனக்காக நான் எத வேண்ணா விட்டு கொடுக்கலாம் அது ஒரு விஷயமே இல்ல, ஆனா அவ யார் பெத்த பொண்ணோ எனக்காகவே வாழ, தன்னோட வீடு ,உறவு, படிப்பு, எல்லாத்தையும் விட்டு இங்க வந்தவ அவ எனக்கு ஒரு படி மேல இருக்கறது தப்பாம்மா... நீயும், உன் கல்யாணமான புதுசுல அப்படி இருக்கணும்னு நினைச்சிருக்க மாட்டியா என்ன? இனி நீயே எப்படி இருக்கணும்னு முடிவுபண்ணிக்க "

“நாங்க கிளம்பறோம்” என்று அம்மாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு தன் மனைவியுடன் கிளம்புவதற்கு தயாரானான் சூர்யா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.