அவன் கேட்டது புரியவில்லையென்றாலும் அதில் இருந்த கனிவை மட்டும் அமேலியாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. வசந்தை நோக்கிக்கொண்டே படுக்கையில் படுத்தாள் அமேலியா.
அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு ஜன்னலருகே சோபாவை நகர்த்தி அதில் அமர்ந்தபடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமேலியாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.
அமேலியா கண்களை மூடி துயில் கொள்ள ஆரம்பித்தாள். அவள் சிந்தனை முழுவதும் வசந்த் நிரம்பியிருந்தான்.
மழையின் சங்கீத ஒலி அவர்களிடம் பரிபாஷை பேசிக்கொண்டிருந்தது.
வசந்தும் சோபாவில் படுத்து தூங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் குளிரில் அவன் உடல் நடுங்கியது. தன் கைகளை உடலில் தேய்த்தபடி அரைத்தூக்கத்தில் அவதிப்பட்டான்.
திடீரென கண் திறந்து பார்த்த அமேலியா வசந்தின் நிலையைக் கண்டு வேதனையடைந்தாள். படுக்கையில் எழுந்து அமர்ந்தவள் என்ன செய்வதென்று யோசித்தாள். தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்துக்கொண்டு.தயக்கத்துடன் வசந்தின் அருகில் சென்று சில நொடிகள் தயங்கியபடி பார்த்தாள். தான் கொண்டு வந்த போர்வையை வசந்தின் மேல் மெதுவாய் போர்த்தினாள்.
திடீரென குளிருக்கு இதமான போர்வையை உணர்ந்த வசந்த் .போர்வையை இழுத்தபோது தன்னையறியாமல் அமேலியாவின் கைகளை பற்றினான். அதை சற்றும் எதிர்பாராத அமேலியா தன் கைகளை விடுவிக்க திமிறினாள். வசந்தின் தூக்கம் கெட்டுவிடுமோ என்ற அச்சமும் அவளிடமிருந்தது. மெதுவாக கீழே அமர்ந்த அமேலியா .வசந்தின் முகத்தை பார்த்தபடி தன் கைகளை அவன் கைகளிலிருந்து விடுவித்தாள்.
பின்னர் படுக்கைக்கு சென்று படுத்த அமேலியா அதன் பின் தூங்கவே இல்லை. அவளின் கண்கள் வசந்தையே பார்த்துக்கொண்டிருந்தன. அதில் ஆயிரம் அர்த்தங்கள். .
வாழ்க்கையில் முதல் முறையாக அழகான ஆழமான அன்பை வசந்திடம் உணர்ந்தாள் அமேலியா .அந்த உணர்வுக்கு பெயர் காதலென்று அவளுக்கு தெரியவில்லை
தொடரும்...
{kunena_discuss:983}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.