(Reading time: 25 - 49 minutes)

அவளுடைய கசங்கிய முகத்தை காண சகியாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி முன்னேறினான் ஜெய்.

இம்சை என்று அவன் சொல்லுமளவிற்கு இவள் செய்த தவறு என்னவென்று மூளை யோசித்து கொண்டிருந்தாலும் கால்கள் தங்களின் செயலை நிறுத்தவில்லை.

சரயூவின் கசங்கிய முகமும், பல யுகங்களாய் தோன்றிய அவளுடை சில நொடி மௌனத்தையும் பொறுக்காமல் அவளிடமாக திரும்பினான்.

யோசனையில் ஆழ்ந்திருந்தவளின் கவனம் நடையில் இல்லாமல் போனது.  கால் இடறி இவள் தள்ளாடவும், ஜெய் அவளிடமாக திரும்பவும் சரியாக இருந்தது.

பலமான அடியேதும் விழுமோ? என்று பதறியவளாய் கண்களை மூடி, பற்களால் கீழ் தட்டை அழுத்தியவாறு நிலம் நோக்கி சரிந்து கொண்டிருந்த சரயூவின் கைகள் பிடிமானத்திற்காகக் காற்றில் அலைந்தன.    

சட்டென பாய்ந்து அவளை இடையோடு வளைத்து தாங்கியிருந்தான் ஜெய்.  தன்னிச்சையாக அவளின் இடது கை, இவன் சட்டை காலரையும் வலது கை தோளையும் பிடித்திருந்தன.

தான் விழுந்து விடவில்லை என்று புரிந்த நொடி, சிறைப் பிடித்திருந்த கீழ் தட்டை விடுவித்து, உதடுகளை குவித்து, மனதிலிருந்த பதற்றத்தை காற்றாக வெளியேற்றினாள்.

இடையில் பதிந்திருந்த இவன் கை உணர்ந்த அவளின் மென்மை, இத்தனை நேரமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகளுக்கு தீமூட்டியிருக்க... அவளிடமிருந்து வந்து, இவன் முகத்தை வருடி உயிரை தீண்டிய ஈரக்காற்றும் சேர்ந்து, அவனுக்குள் ஒரு காதல் சூறாவளியை உருவாக்கியிருந்தது.

மெல்ல கண் திறந்து இவனை பார்த்தவளின் இதழ்கள் விரிய, “தாங்க் யூ சஞ்சு! ஒரு நிமிஷம், விழுந்துட்டனே நினைச்சிட்ட” ஜெயின் நிலையறியாது அவள் சிரிக்க...     

காதல் சூறாவளியோ அவனுடைய கட்டுபாட்டை தூக்கி வீசியிருந்தது.  அவளின் சிவந்த இதழ்களை சூறையாடும் நோக்கம் மட்டுமே இவனிடத்தில்...

இவன் பார்வையில் தெரிந்த மாற்றமும், இடையிலிருந்த கையின் அழுத்தம் கூடியதையும் புரிந்தவள் சட்டென அவனுடைய கையை விலக்கினாள்.  மனதில் புதியதொரு இனம்புரியா பதற்றம் எழுந்ததுகொள்ள, அதை மறைத்தவளாக

“விடு சஞ்சய்! அதுதான் நான் விழலையே”

இவன் பார்வை, அசையும் அவள் இதழ்களில் மட்டும் மையம் கொண்டது.

இருதய துடிப்பு வேகமெடுக்க அவனிடமிருந்து விலக முடியாமல் திமிறினாள் சரயூ.

மயக்கத்தில் இருந்தவனோ அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான்.

“என்னடா பண்ற? என்னை விடு சஞ்சய்!” அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

அன்று மாலையிலிருந்து விரகாவஸ்தையில் வெந்து கொண்டிருந்தவன், இப்போது அதை தணித்து கொள்ளும் வித்தையை அறிந்திருந்தான்.  காதலோடு ஆசை சூறாவளியும் சேர்ந்து கொள்ள மொத்தமாக தன் சுயத்தை இழந்திருந்தவனிடம் இவளின் பேச்சோ செயலோ சேரவில்லை.

சிவந்திருந்த அவளின் மெல்லிதழ்களை அவன் வசமாக்கினான்.  ஐந்து வருட காதலை அவளுக்கு தெரியபடுத்திவிடும் வேகம் அவனிடத்தில்.

ஜெய் தன்னுடைய நண்பன்! கண்ணியம் தவறாத ஆண்மகன்! தன் தந்தையோடு ஒப்பிடுமளவிற்கு உயர்ந்து நிற்க காரணமான அவனுடைய குணநலன்கள், அன்பான பேச்சு, இவளுக்கு எப்போதுமே பாதுகாப்பு உணர்வை மட்டும் கொடுத்த அவன் அருகாமை என இவள் மனதிலிருந்த சஞ்சுவிற்கும் இந்த நிமிடம் இவள் காணும் சஞ்சயிற்கும் மலையளவு வித்தியாசமிருந்தது, பெரும் அதிர்ச்சியை தந்தது.  பாதுகாப்பை கொடுத்த அவன் அருகாமை இப்போது அருவருத்தது.  தோழியிடம் எல்லை மீறுகிறவனையா கண்ணியவான் என்று நினைத்திருந்தாள்? இவனையா தந்தையோடு ஒப்பிட்டாள்? நினைக்கவே கசந்து வழிந்தது மனதில்.

இவையனைத்துக்கும் மேலாக எதிலோ தோற்று போன வலி நெஞ்சோரத்தில் முட்டிக்கொண்டு கண்ணீராகக் கிளம்பியது.

சில்லென்று இவன் கன்னம் தொட்ட அவள் கண்ணீரில் சுயத்துக்கு வந்தவனால் நடந்தை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திகைத்து போனான். இவனிடமிருந்து விடுபட போராடி கொண்டிருந்தவளுக்கு அவன் தளர்ந்த பிடி உதவியது.  சட்டென அவனை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் சரயூ.

 

Episode 19

Episode 21

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.