(Reading time: 27 - 53 minutes)

“அம்மாவை ஷாப்பிங் கோயில்ன்னு என்னால கூட்டிட்டு போக முடியுமான்னு தெரியல ஹனி, பகலில் பாவம் அவங்களுக்கு போர் அடிச்சிரும்” ஹர்ஷா சொல்லவும், தான் இதில் என்ன செய்ய முடியும் என்பது போல அவனைப் பார்த்தாள் ஹரிணி.

“நான் எப்படி ஹெல்ப் செய்ய முடியும் ஹரி, நானும் ப்ரீயா இல்லையே”

“உன்னோட பேமிலியையும் ஒரு வாரம் முன்னாடியே வரச் சொல்லிடேன். அவங்களும் நம்ம வீட்லேயே ஸ்டே செய்துக்கலாம்” ஹர்ஷா சொல்லவும் ஹரிணி மறுப்பாய் தலையசைத்தாள்.

“அதெல்லாம் சரி வராது ஹரி, அம்மாக்கு ஒரு வாரம் எல்லாம் ஸ்கூல் லீவ் சொல்ல முடியாது. அப்பா எப்படியும் பங்க்ஷனுக்கு வர முடியாது. சிஸ்டர்ஸ் மட்டும் தான், அவங்க சுகி கூட தங்கிட்டு பங்க்ஷன் அட்டன்ட் செய்துட்டு கிளம்பிடுவாங்க” ஹரிணி தெளிவாக கூறினாள்.

“நீ டாக்டர் பட்டம் பெறுவதை உன் அப்பா பார்க்க வேண்டாமா ஹனி”

“அவர் வரணும்னு எனக்கும் ஆசை தான். ஆனால் நான்கு பாஸ் தான் குடுப்பாங்க. அம்மாவும் தங்கைகளும் மட்டும் தான் வர முடியும். ரெண்டாவது அப்பாவை தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யணும். சுகி ஹாஸ்டலில் லேடீஸ் தான் தங்கிக்கலாம், என் ரூமில் ரஞ்சனி பேரன்ட்ஸ் இருந்தா சிரமம்” ஹரிணி சொல்ல அவளை இடையிலேயே நிறுத்தினான் ஹர்ஷா.

“இந்த ஒரே ஒரு முறை மட்டும் நான் சொல்வதை கொஞ்சம் கேள் ஹனி ப்ளீஸ். என் சார்பா மூணு பேர் தான் பங்க்ஷன் அட்டன்ட் செய்ய போறாங்க. ஒரு பாஸ் ப்ரீயா தான் இருக்கு. அப்பாவை கூட்டிக் கொண்டு வா. என் ரூம் ப்ரீயா தான் இருக்க போகுது. அப்பா இங்கேயே ஸ்டே செய்துகட்டும். அப்புறம் ப்ரீத்தி வரூதினி எக்ஸாம் எல்லாம் முடிச்சு ப்ரீயா தானே இருக்காங்க. அவங்களை மட்டுமாவது வரச் சொல்லு. அண்ணா யுனிவர்சிட்டி பக்கம் தானே. நீங்க சிஸ்டர்ஸ் எல்லாம் ஒன்னா இருக்கலாம்” ஹர்ஷா பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

ஹரிணி மறுக்காமல் அவனது யோசனையை ஏற்றுக் கொண்டாள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் அவன் ராஜகுமாரன் என்று தனது தங்கைகளிடம் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தாள்.

தனது அன்னையிம் கலந்து ஆலோசித்து விட்டு அவர் சம்மதத்துடன் ப்ரீத்தி வரூதினி இருவரையும் சுகீர்த்தியின் அறையில் தங்க வைத்தாள்.

“மூணு பேரும் ஒழுங்கா ஒத்துமையா இருக்கணும். ஹர்ஷா அம்மா முன்னாடி சின்னக் குழந்தைகள் போல அடிச்சிட்டு இருக்க கூடாது” என அறிவுரைகள் எல்லாம் கூறி தான் சாரதாவிடம் அழைத்துச் சென்றாள்.

இவர்களைப் பார்த்ததுமே சாரதா வாரி அணைத்துக் கொண்டார். தங்கைகள் மூவருக்குமே அவரை மிகவும் பிடித்துப் போனது.

ஹர்ஷாவும் ஹரிணியும் தங்கள் வேலைகளை கவனிக்க சாரதாவின் பொழுது இளையவர்களுடன் இனிமையாக கழிந்தது.

அன்று மாலை அனைவருக்கும் பட்டமளிப்பு விழாவில் அணிந்து கொள்ள புதிய ஆடைகள் வாங்க செல்லப்போவதாக ஹர்ஷாவிடம் கூறினாள் ஹரிணி.

“அப்போ எல்லோரையும் தி. நகர் வரச் சொல்லவா” ஹர்ஷா கேட்க வேண்டவே வேண்டாம் என்று மறுத்தாள்.

“வேண்டாம் ஹரி, எங்க வீட்டு வானரங்கள் கடையை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விடுவாங்க.  எனக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது, ஷாப்பிங் முடிச்சிடுவேன்” என்றாள்.

அது சரியில்லை என அவர்கள் அனைவரையும் திநகர் வரச் சொல்லி அவர்களுக்கு விருப்பமான உடைகளை அவர்களே தேர்வு செய்யுமாறு சொல்லவும் ஹர்ஷாவை ஹரிணியின் தங்கைகள் மூவருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

“ரொம்ப தாங்க்ஸ் அண்ணா, நீங்க ரொம்ப நல்ல அண்ணா” என்று தங்கைகள் மூவரும் அவனையே சுற்றிக் கொண்டிருந்தனர்.

ஹர்ஷா அவர்கள் மூவருக்கும் மிகவும் பொருத்தமான உடைகளை தேர்வு செய்து கொடுக்க அவனது தேர்வு கண்டு மூவருமே மிகவும் மகிழ்ந்து போயினர்.

“ஹரி இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி, வேண்டாம். வேற பார்க்கலாம்” ஹரிணி மெல்ல அவனது காதைக் கடித்தாள்.

“நீ உனக்கு என்ன தேவையோ அதை போய் பாரு, இந்தப் பக்கம் வராதே” ஹர்ஷா அவளை துரத்தி அடித்தான்.

“இருக்கட்டும் ஹரிணி, அம்மா வாங்கிக் கொடுப்பதாய் வைத்துக் கொள்” என்று சாரதா கூறவும் மறுக்க முடியாமல் சரி என்று தலையாட்டினாள்.

“பங்க்ஷனுக்கு அவங்களுக்கு நான் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை மா” என்று அவளும் அனைவருக்குமாய் உடைகளை தேர்வு செய்தாள்.

“உனக்கு பங்க்ஷனுக்கு சாரி பார்க்கலையா” சாரதா கேட்க தன்னிடம் ஏற்கனவே இருப்பதாக கூறினாள் ஹரிணி.

தனது தந்தைக்கு உடைகள் தேர்ந்தெடுக்கும் போது ஹர்ஷாவிற்கும் ஒரு ஷர்ட் தேர்வு செய்து அதை பேக் செய்யச் சொன்னாள்.

கை நிறைய பைகளோடு வீட்டிற்கு வந்து சேர இரவு ஆகிவிட்டது.

ஹரிணி ஹர்ஷாவிடம் அவனுக்கு வாங்கி வைத்திருந்த பையை நீட்டினாள். அவனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.