(Reading time: 27 - 53 minutes)

“முதல் முறை உன் அப்பா கிட்ட கூட்டிக் கொண்டு வந்திருக்க. என்னை அறிமுகம் செய்து வைக்க மாட்டாயா” இப்போது அவள் முகத்தில் பூத்த புன்னகையில் அவன் சினம் குளிர்ந்தது.

“முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்” எனக்காக பாடுவியா என்று கேட்டாளே. இதோ பாடினான் இப்போது.

அவளது முல்லைச் சிரிப்பு அல்லியாக மலர்ந்தது.

“அப்பா இவள் ஹனி, ஹரிணி வைதேகி. உங்கள் மகனை சபதம் செய்ய வைத்தவள் இவள் தான். நீங்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கணும்” தந்தைக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான்.

“அப்பா அவன் புதுசா என்ன ஜெயக்கணும். ஹி இஸ் பார்ன் டு வின். உங்கள் கனவை நிறைவேற்றி இருக்கான். இன்னும் நிறைய சாதிக்கணும்ன்னு வாழ்த்துங்கப்பா” அவள் சொல்லவும் என்ன தவம் செய்தேன் உன்னை இங்கு யான் பெறவே என்று வார்த்தைகளால் கூறவில்லை அவன். ஆனால் அதை உணர்ந்து சிலிர்த்தான்.

“நான் என்ன உன்னை ஜெயிக்க வைப்பது, அவளே உன்னை உனது சபதத்தில் வெற்றி பெறச் செய்திடுவாள்” என்று அலைகடலாய் வாழ்த்திச் சென்றார் அவனின் தந்தை.

இதோ ஒரு மாமாங்கம், பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அவனது சபதத்தில் வென்று விட்டான். அவள் வாயாலேயே அவனை பிரின்ஸ் என்று சொல்ல வைத்து விட்டான். சொல்ல வைத்தது அவனல்ல. பிரின்ஸ் என்று சொல்லும் படி அவனை உயர்த்தி நிறுத்தியது அவள். 

“என்ன ப்ளாஷ் பேக் ஓட்டி முடிச்சாச்சா பிரின்ஸ் ஹர்ஷவர்தன்”  நிகழ்காலத்தில் ஹரிணி அவனைப் பார்த்து கேலியாக கேட்டாள்.

“இப்போ தான் டிகிரி வாங்கியிருக்கோம்” அவன் பதிலுக்கு பெரிதாக நகைத்தான்.

“நாளைக்கு பங்க்ஷன்  இருக்கு. கேம்ப் இருக்கு. நியாபகம் இருக்கா. கிளம்பு நேரமாச்சு. வீட்டுக்கு போகணும். அம்மாவை வேற  நாளைக்கு நீ பிக் அப் செய்ய போகணும்” அவனை எழுப்ப எத்தனித்தாள்.

“ஒரு அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்”  என்று அவளை நிறுத்தியவன் மெல்ல பாட ஆரம்பித்தான்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்காக  அவன் பாடிய பாடல்.

“சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிரிதுமுண்டோ”

முடிவிலியை நோக்கி ...

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.