(Reading time: 29 - 58 minutes)

அருகில் இருந்த இளைஞர்  அவரை எழுப்ப முயற்சிக்க பேச்சு மூச்சு இல்லாமல் போகவே அவரை சம தளத்திற்கு இழுத்து வந்து தட்டி எழுப்ப முயற்சி செய்து விமானப் பணியாளர்களை அழைத்திருந்தார்.

அது கார்டியாக் அரெஸ்ட் Cardiac arrest (இதயத் துடிப்பு நின்று விடும் நிலை) என்று உணர்ந்த அந்த  இளைஞர் உடனேயே சிபிஆர் CPR  எனப்படும் உயிர் மீட்கும் முறையை செய்ய தொடங்கி விட்டிருந்தார்.

விமானத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட பயணிகளை அமைதியாக இருக்க சொல்லிய பணியாளர்கள் முதலுதவி பெட்டி மற்றும் AED  (ஷாக் கொடுக்க பயன்படும் இயந்திரம்) என்ற இயந்திரத்தையும் எடுத்து வந்தனர்.

விமானி பெர்லின் ஏர்போர்ட்டை இன்னும் சிறிது நேரத்தில் அடைந்து விடுவோம் என்று அறிவித்தார். விமான நிலையத்தில் இங்குள்ள எமர்ஜென்சியை தெரிவித்தார்.

“ப்ளீஸ் கால் எ டாக்டர். விமானத்தில் யாரேனும் பயணம் செய்கிறார்களா” அந்த இளைஞர் சொல்லவும் தான் இவர் டாக்டர் என்று நினைத்தோமே என்று திகைத்த விமானப் பணியாளர்கள் யாரேனும் டாக்டர்கள் இருக்கிறார்களா என்று அறிவிப்பு செய்தனர்.

அதே சமயம் தலைமை பணியாளர் லிஸ்ட் பார்க்க அங்கு டாக்டர் ஹர்ஷவர்தன் பெயர் இருக்கவே முதல் வகுப்பு சென்று அவரை எழுப்ப பணித்தார்.

ஹர்ஷா அங்கே வந்து சேர முதலுதவி செய்த இளைஞர் மிக நேர்த்தியாக சிபிஆர் செய்வதை கண்டான். அதற்குரிய சிறப்பு பயிற்சியை அந்த இளைஞர் பெற்றிப்பதை அறிந்தவன் பின் பொறுப்பை தனதாக்கிக் கொண்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் அந்தப் பயணி உயிர் பிழைத்திருந்தார். விமானப்பணியாளர்கள் பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அந்நேரம் விமானமும் தரையிறங்க எமர்ஜன்சி மருத்துவக் குழு உடனே வந்து பொறுபேற்றுக் கொண்டு அந்த பேஷண்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்ய “டாக்டர் ஹர்ஷவர்தன் சிங் ராத்தோர்” என்று ஹர்ஷா அந்த இளைஞனிடம்  தன்னை அறிமுகம் செய்து கொண்டு தக்க சமயத்தில் செயல்பட்டு சிபிஆர் செய்ததைப்  பாராட்டினான். சில நொடி தாமதமும் உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் குறைத்திடும் என்பதை அறிந்தவன் பாராட்டு முழுவதும் இவரையே சாரும் என்றான்.

“உங்க பேர் ரொம்ப நீளமா இருக்கு டாக்டர். உங்களை அழைப்பதற்கே தனியா வைட்டமின் எடுத்துக்க வேண்டும் போல” என சிரித்தவன் அவனது பெயரை சொல்லி, “இதுவும் கொஞ்சம் நீளம் தான். சுருக்கமா ஆர்சின்னு எல்லாரும் கூப்பிடுவாங்க” என்றான்.

சற்று நேரம் முன் மிகத் தீவிரமாக முனைப்புடன் செயல்பட்டவானா இவன் என்று நினைக்கும் வண்ணம் ஹாஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தான்.

“என்னையும் ஹெச்எஸ்ஆர் என்று தான் கூப்பிடுவாங்க” ஹர்ஷா சொல்ல சார்ட் நேம் கூட இவ்வளவு நீளமா என்று அதற்கும் சிரித்தான் ஆர்சி.

லிப்சிக் நகரில் கான்பரன்ஸ் தொடங்க  அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக முடித்து உலகின் தலைசிறந்த மூத்த மருத்துவர்களின்   பாராட்டினையும் சக மருத்துவர்களின் வாழ்த்தினையும்  பெற்றான் ஹர்ஷா.

அன்று காலை ஸ்கேல்பல் பிடித்த போது ஹரிணி தான் அவன் கண் முன் நின்றாள். வாழ்வில் மிகவும் முக்கியமான தருணத்தில் இருவரும். ஆனால் வெவ்வேறு இடங்களில். வெவ்வேறு சூழல்களில்.

கான்பரன்ஸ் முடிந்து லஞ்ச் ஆரம்பம் ஆனது. ஹர்ஷா மணியைப் பார்த்தான். மணி இரண்டு  எனக் காட்டியது. இந்தியாவில் மாலை ஐந்தரை மணி ஆகி இருக்குமே. உடனே தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தான்.

அவன் போன் ஆன் செய்து மெசேஜ் பார்க்க மாலை ஆறு மணிக்கு கால் செய்வதாக தகவல் இருந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.  லஞ்ச்  முடித்துக் கொள்ளலாம் எனக் கீழே உணவு விடுதிக்கு வந்தவன் தூரத்தில் முழு சூட்டில் சிலருடன் கைகுலுக்கு உரையாடிக் கொண்டிருந்த ஆர்சியை பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.

அந்நேரம் ஆர்சியும் இவனைப் பார்த்து கையசைத்து உடனிருந்தோர் அனைவரையும் ஹர்ஷாவிடம் அழைத்து வந்து ஜெர்மன் மொழியில் ஏதோ சொல்ல அவர்கள் ஹர்ஷாவின் கையை பற்றிக் குலுக்கினர்.

“விமானத்தில் நடந்ததைச் சொன்னேன்” என்று ஹர்ஷாவிடம் ஆங்கிலத்தில் மொழி பெய்ரத்தவன் அவர்களை அனுப்பி விட்டு ஹர்ஷாவிடம் லஞ்சுக்கு தானும் ஜாயின் செய்து கொள்ளலாமா என்று கேட்டான்.

ஹர்ஷாவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அவன் ஜெர்மன் வருவது இதுவே முதல் முறை.  ஆர்சியுடன் உணவை ஆர்டர் கொடுத்து விட்டு ஹர்ஷா சுருக்கமாக தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

“யூ ஆர் எ ரியல் பிரின்ஸ். வாவ். எனக்கு உலகத்தில் ராஜகுமார நண்பர்கள் இல்லாமல் இருந்தனர். அந்தக் குறை தீர்ந்தது” என்ற  ஆர்சி பேசினான். பேசினான்.. பேசிக் கொண்டே இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.