(Reading time: 37 - 74 minutes)

ஹர்ஷா அப்படி என்ன பரிசு கொடுத்தான் என்று ஹரிணி செல்லமாக ‘வானர பட்டாளம்’ என அழைக்கும் இளையவர்கள்  விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“பாலா இஸ் எ ஜெம். மை ஹனி வில் பி ஹாப்பி வித் ஹிம்ன்னு ஒரு நிறைவு எனக்குள்ள நிறைஞ்சிருக்கு” என்று ஹர்ஷா சொன்னதை விட சிறந்த கல்யாணப் பரிசு வேறு என்னவாக இருக்க முடியும்.

ர்ஷா மெடிகல் டூரில் பயணித்துக் கொண்டிருக்க, ஹரிணிக்கோ பாலகிருஷ்ணனுடனான திருமண வாழ்க்கை சீராக  நகர்ந்து கொண்டிருந்தது. 

ஒரு முறை மகளைக் காண பாரதி வந்திருந்தார். அன்னையுடன் பேசிக் கொண்டிருந்த ஹரிணியிடம், “விதும்மா ஹர்ஷா லைன்ல இருக்கார். இந்தா” என்று அவளிடம் நீட்ட அவள் போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.

அவள் பின்னோடு செல்லாமல் அங்கே பாரதியின் அருகிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்தான் பாலகிருஷ்ணன்.

“அது ஹர்ஷாவும் விதுவும் காலேஜ்ல இருந்தே சிநேகிதம். படிப்பு சம்பந்தமா தான் பேசிக்குவாங்க எப்போவும்” எங்கே மருமகன் மகளின் நட்பை தவறாக பாவித்து விடுவாரோ என விளக்கம் சொல்ல முற்பட்டார் பாரதி.

“அத்தை, நான் ஏதும் தவறா நினைச்சுப்பேன் என்று நீங்க கவலை பட வேண்டாம். கல்யாணம் ஆகிவிட்டதால ஒரு ஆணோ பெண்ணோ அவங்க முந்தைய நட்புகளுக்கு புது எல்லைக்கோடு போடணும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்ல. அதிலும் ஒரு பொண்ணு தன்னோட ஆண் தோழர்களை விட்டுவிடனும் என்று நினைப்பது அவளை அவமதிப்பது போல. விதுவோட லைப்ல நான் வருவதற்கு முன் இருந்தே ஹர்ஷா இருந்திருக்கார். ஆனால் என்னைத் தான் அவள் கணவனாக ஏற்றுக் கொண்டா. அவள் எனக்கு தந்த அந்த முக்கியதுவத்தை நான் மதிக்கிறேன். அவங்க நட்பு பற்றிய தெளிவு எனக்கு உண்டு” பாலா இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த போது ஹரிணி போன் பேசி முடித்து ஹாலுக்கு வந்துவிட்டிருந்தாள்.

அப்போது தான், அந்த நொடியில் தான்,  எப்படி வரும் எப்படித் தெரியும் என்று ஆவலாக அறிய விரும்பிய ‘காதலை’ உணர்ந்தாள் ஹரிணி.

ராஜா விஷ்ணுவர்தனுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட ஸ்வாதிகா சாரதாவிற்கு உதவியாக ஜெய்ப்பூரில் இருந்தாள். ஹர்ஷாவுடன் திருமணத்திற்கு அவள் சம்மதம் தெரிவிக்க ஹர்ஷா மெடிகல் டூரில் இருந்து வந்ததும் நிச்சயம் செய்து விட தீர்மானித்தனர்.

முன்னதாக ஹரிணியின் திருமணம் நிச்சயக்கபட்டதுமே சாரதா மகனிடம் நேரடியாக கேட்டு விட்டிருந்தார்.

“இதுல கேட்க என்னம்மா இருக்கு. என் மனசில்  ஸ்வாதி தானே எப்போவும் இருக்கா” மகன் இயல்பாக சொல்லவும் சாரதா நிம்மதி அடைந்தார்.

ஆனால் எல்லாவற்றிக்கும் நேரம் காலம் என்று ஒன்று வர வேண்டுமே. பேரனின் திருமணம் குறித்த கவலைகள் நீங்கிவிட மகிழ்ச்சியாக இரவு படுக்கச் சென்ற ராஜா விஷ்ணுவர்த்தன் நீண்ட நித்திரையில் ஆழ்ந்து விட்டிருந்தார்.

வியட்நாமில் இருந்த ஹர்ஷா தகவல் அறிந்ததும் உடனே புறப்பட்டு வந்திருந்தான்.

அந்த நேரம் ஒரு கான்பரன்ஸ்காக ஷில்லாங் சென்றிருந்தாள் ஹரிணி. அவள் அதில் ஒரு ஆய்வை சமர்பிக்கவிருந்தாள். அவளோடு பாலகிருஷ்ணனும் உடன் சென்றிருந்தான்.

ஸ்வாதியால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ராஜா விஷ்ணுவர்த்தன் மறைவுக்குப் பின் ஹர்ஷாவின் மூத்த பெரியப்பா ராஜாவாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஹர்ஷாவை அவனது மெடிகல் டூரை தொடருமாறு ஆலோசனை சொல்லவும் ராணி மற்றும் சாராதாவின் அனுமதி பெற்று அவனும் விடைபெற்றான்.

ஒரு வாரம் சென்ற பின் சென்னை திரும்பிய ஹரிணி தகவல் அறிந்து ஸ்வாதியை தொடர்பு கொண்டாள்.

“விதுக்கா பூபாஸா ( அத்தையின் கணவர்) ஷாஸாவை கிளம்ப சொல்லிட்டார். ராணிஸா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு மவுன்ட் அபு போயிருக்காங்க. அம்மாவும் (சாரதா) கூட போயிருக்காங்க. நானும் எங்க ஹவேலிக்கு வந்துட்டேன்” ஸ்வாதி சொல்ல ஹரிணி போனில் தொடர்பு கொண்டு சாரதாவிடமும் ஹர்ஷாவிடமும் பேசினாள்.

ராஜா மறைந்த நிலையில் ஹர்ஷா ஸ்வாதிகா திருமண பேச்சு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ர்ஷா வெற்றிகரமாக தனது மெடிகல் டூரை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினான். அவன்  சீனியர்  சர்ஜனாக நியமிக்கப்பட்டான். இரண்டு ஆண்டுகள் அவன் அங்கே பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டான்.  பிஹெச்டி பட்டம் பெற்ற பூர்வி அங்கேயே ரிசர்ச் பிரிவில் பணியில் சேர்ந்தாள்.

“டாக்டர் மோகன், ரிசர்ச் பிரிவில்  அப்சர்வராக ஒரு டாக்டர் ஜாயின் செய்திருக்கார். உங்களை சந்திக்க வருவார். நீங்க பார்த்து பேசிட்டு டாக்டர் ஹெச்எஸ்ஆரிடமும் அறிமுகம் செய்து வைங்க” அகாடெமிக் பிரிவின் டைரக்டர் சொல்லிவிட்டு சென்றார்.

பூர்வியும் நெடுநேரம் காத்திருந்துவிட்டு யாரும் வராததால் ஹர்ஷாவை சந்திக்க செல்லலாம் என்று அவனது கேபின் சென்றாள்.

அங்கு ஒரு புதியவனோடு ஹர்ஷா உரையாடிக் கொண்டிருந்தான். பூர்வியைப் பார்த்து வா என்று சைகை செய்தான் ஹர்ஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.