(Reading time: 37 - 74 minutes)

பொதுவாக மருத்துவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கோ, பிரியமானவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதில்லை. அங்கே உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்காமல் மருத்துவனாய் மட்டும் அவர்களால் செயல்பட முடியாது என்பதால்.

ஆனால் அவளுக்கு அப்போது வேறு வழியில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்ற நிலை. அவளால் மட்டுமே அங்கே உயிர் காக்கும் செயற்கை சுவாசத்தை அளித்திட முடியும். 

“திரைக்குப் பின் தான் எங்கள் பணி. பல நேரம் நோயாளிகளுக்கு எங்களை அடையாளம் கூட தெரியாது. ஆனாலும் லைப் சேவிங். உங்கள் சர்ஜரியில் ஏதேனும் சிக்கல் எனில் உதவிக்கு சீனியர் இல்லை நிபுணர் யாரேனும் வரும் வரை நீங்க வெயிட் செய்யலாம். நாங்க அப்படி காத்திருக்க முடியுமா. சுவாசமும் இதயத் துடிப்பும் காத்திருக்குமா என்ன” ஹர்ஷாவிடம் தனது துறையைப் பற்றி சிலாகித்து சொன்னவள், தான் செய்த பணியை மிகவும் நேசித்தவள், பாலகிருஷ்ணனின் மனைவி என்பதை பின் தள்ளி விட்டு டாக்டர் ஹரிணியாக செயல்பட்டாள்.

அவள் செயற்கை சுவாசம் பொருத்திவிட கார்டியாக் சர்ஜனும் வந்துவிட்டிருந்தார்.

“வென்ட்ரிகல் ரப்ச்சர் (இதயச் சுவற்றில் விரிசல்) டாக்டர். வி ஹாவ் டு ஷிப்ட் டு தியேட்டர்” அவர் சொல்லவும் அதற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்தாள்.

ஹரிணியின் கணவர் விபத்தில் அடிபட்டு அவசர அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப் படுகிறார் என்று அறிந்ததும் ஹரிணியின் துறைத் தலைமை மருத்துவர்  உடனடியாக அங்கே வந்து அவளிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவளை பணியில் இருந்து விடுவித்தார்.

அங்கே விபத்தில் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் அட்மிட் ஆன வண்ணம் இருந்தபடியால் அனைவரும் பிஸியாக இருந்தனர்.

“ஹரிணி நீ ஒரு டாக்டர், இந்த சிசுவேஷனை நான் உனக்கு எக்ஸ்ப்லைன் செய்ய தேவை இல்லை. இட்ஸ் மாஸிவ் வென்ட்ரிகல் ரப்ச்சர். உனக்கு தெரியும் அதனுடைய ரிஸ்க்ஸ். ஐ ஆம் வெரி சாரி. பட் இதில நீ சைன் செய்ய வேணும்” என்று ஒரு படிவத்தை நீட்டினார் அவளது சீனியர் மருத்துவர்.

 உயிர் பிழைக்க வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அறுவை அரங்கிலேயே உயிர் பிரிய நேரலாம் என மருத்துவர்கள் கருதினால் அதை நோயாளியின் உறவினருக்கு எடுத்துச் சொல்லி ரிஸ்க் எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள சம்மதம்  பெறுவதுண்டு.  டி.ஓ.டி கன்சன்ட் என்று இதை சொல்வார்கள். இப்படியான  சூழ்நிலைகள் மிக மிக  அரிது. இது வரை ஹரிணி மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில் யாரிடமும் இந்தப் படிவத்தில் கையெழுத்து வாங்கியதில்லை. ஆனால் இன்று முதல் முறை அவளே அதில் கையொப்பம் இடும் நிலை ஏற்பட்டது.

ஆபரேஷன் தியேட்டரின் கதவுகள் மூட அங்கே டாக்டர் லவுஞ்சில் அவளை அமரச் செய்தனர் அவளது ஜூனியர்கள்.

“மேம் சாரி மேம் பேஷண்ட்ஸ் வந்திட்டே இருக்காங்க, நாங்க போகணும்” என்று அவர்கள் சொல்ல சரி என்று தலையாட்டினாள்.

அது வரை டாக்டர் ஹரிணியாக தன்னைப் பிடித்துக் கொண்டு வைத்திருந்தவள் உடைந்தாள். கண்ணீர் பெருக கைகள் நடுங்க மொபைலில் தேடினாள் ஹரியை.

ன்று லோகல் ஹாலிடே என்பதால் ஹர்ஷா பணிபுரிந்த மருத்துவமனையில் பலர் விடுப்பில் இருந்தனர். காலில் உள்ள இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்ட பேஷண்ட் ஒருவரை ஆபேரஷன் தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

ஜூனியர் சர்ஜன் அனைவரும் விடுப்பில் இருந்ததால் சிறிய ஆபேரஷன் என்ற போதும் எமர்ஜன்சி என்பதால்  ஹர்ஷா தானே அறுவை சிகிச்சையை செய்யத் தொடங்கினான்.

ஏற்கனவே ஹர்ஷாவின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்த கணேஷ் அவனிடம் நற்பெயர் வாங்க எண்ணி விடுமுறை என்ற போதும் ஹர்ஷாவுடன் அறுவை அரங்கம் வந்திருந்தான்.

ஹர்ஷா முக்கிய கட்டத்தை முடித்து விட்டிருந்த நிலையில் அவனது பர்சனல் போன் வைப்ரேஷனில் சிணுங்க ஹனி என்று ஒளிர்ந்தது.

பூர்வி அவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஹர்ஷாவின் கோபத்தை அறிந்தும், ஏனோ  ‘ராம்’ என்றழைத்த அந்தக் குரலின் இனிமையைக் கேட்கும் ஆவல் அவனுள் மிகவே, போனை எடுத்து ஹலோ சொன்னான் கணேஷ் ராம்.

“ராம்..ராம் தானே” அன்று இனிமையாக ஒலித்த குரல் இன்று வலியில் துடித்தது.

“ஹரி ...ஹரி எங்கே ராம்...ஹரி...கிட்ட சீக்கிரம் போனை குடு ராம் ப்ளீஸ்....” அவளது கதறலில் ஆடிப்போனான்.

சர்ஜரி முடிந்திருந்தாலும் டிரஸ்ஸிங் செய்ய வேண்டியிருந்ததால் ஸ்க்ரப் உடையிலே  இருந்த ஹர்ஷாவின் செவிகளில் ஓடி வந்து போனை பொருத்தினான் கணேஷ் ராம். இவன் என்ன செய்கிறான் என்று எரிச்சலாய் ஹர்ஷா திரும்ப அங்கிருந்த மற்றவர் கணேஷின் செய்கை கண்டு திகைத்தனர்.

“ஹரி ஹரி” என்று செவிகளில் ஒலிக்க அதிர்ந்து கணேஷை திரும்பிப் பார்த்த ஹர்ஷா  அவசரமாக கையுறையை அவிழ்த்து போனை கிட்டத்தட்ட பிடுங்கியே விட்டிருந்தான்.

கணேஷ் ராமின் கண்ணசைவில் ஏதோ அவரச போன் கால் என்று உணர்ந்து கொண்ட ஸ்டாப் நர்ஸ் டிரஸ்ஸிங் செய்யும் பொறுப்பை தனதாக்கிக் கொள்ள, ஹர்ஷா அதற்குள் அறுவை அரங்கின் வெளியே வந்து “ஹனி ஹனிம்மா, என்னடா, என்னாச்சு” என்று பதறினான்.

“ஹரி..... ஹரி இங்க சீக்கிரம் வா ஹரி....பாலா... ஆக்சிடன்ட்.... பாலாவை காப்பாத்து ஹரி. உன்னால மட்டும் தான் அவரைக் காப்பாத்த முடியும்... ஹரி.....டி.ஓ.டி வாங்கிருக்காங்க  ஹரி .... எனக்கு... அவர்.....நீ இங்க  சீக்கிரம் வா ஹரி”  நிலைகுலைந்து சாய்ந்து கொண்டிருக்கும் கோபுரமாய்  பரிதவிப்புடன் ரட்சிக்க வா என்று அவனை அழைத்த அவளின்  கதறலில்  செய்வதறியாது உறைந்து போய் நின்றிருந்தான் ஹனியின் ஹரி.

முடிவிலியை நோக்கி ...

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.