(Reading time: 37 - 74 minutes)

“டாக்டர் கணேஷ் ராம். உன் பிரிவில் அப்சர்வராக சேர்ந்திருக்கார்” ஹர்ஷா அறிமுகம் செய்து வைக்க பூர்விக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

‘இவனுக்காக நான் அங்க காத்துக்கொண்டிருக்கேன். இவன் என்னடான்னா இங்க வந்து காலாட்டம் போட்டுட்டு இருக்கான் நெட்டை கொக்கு’ மனதிற்குள் அவள் அர்ச்சனை செய்தது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.

“டாக்டர் பூர்வி மோகன். சைகாலஜிஸ்ட் அண்ட் என்னோட ப்ராஜக்ட் ஹெட், ஷி வில் பி யுவர் பாஸ்”  சொல்லிவிட்டு ஹர்ஷா ரவுண்ட்ஸ் செல்கிறேன் என்று கிளம்பினான்.

கணேஷ் ராம் அமைதியான சுபாவம் கொண்டவன் தான், ஆனால் ஏனோ பூர்வியைப் பார்த்ததும் அவனுக்குள் குறும்புத்தனம் புகுந்து கொண்டது.

“கன்னத்தைப் பாரு, பேரைப் போலவே பூரி மாதிரி புஸ்ஸுன்னு இருப்பதை. இந்தக் குள்ளக் கத்திரிக்காய் எனக்கு பாஸா” மனதில் நினைத்தவன்  சம்பிரதாயமாக அவளைப் பார்த்து சிரிக்க பூர்வியோ பதிலுக்கு முறைத்தாள்.

“டாக்டர் ஹெச்எஸ்ஆர் ரவுண்ட்ஸ் போகும் போது அவர் கூட போகணும். இப்படி  திருவிழாவில் தொலைந்து போன மாதிரி முழிச்சிட்டு இருக்கக் கூடாது” பூர்வி சொல்லவும் இப்போது கணேஷ் அவளைப் பார்த்து முறைத்தான்.

மெடிகல் டூர் சென்று வந்த பின் டாக்டர் ஹெச்எஸ்ஆர் என்ற பெயர் இதய சிகிச்சை பிரிவில் சிறப்பாக பேசப்பட ஹர்ஷாவின் கீழ் மேற்படிப்பு செய்யும் ஆசை கணேஷ் ராமிற்கு.

ரிசர்ச் பிரிவில் ப்ராஜக்ட் செய்தால் மேற்படிப்புக்கான இடம் எளிதில் கிடைக்கும், எனவே அங்கே ரிசர்ச் பிரிவில் சேர்ந்திருந்தான். தனது அன்னையின் தோழி டாக்டர் மீனலோசினியின் அறிமுகத்தின் பேரில் நேரடியாக ஹர்ஷாவை சந்தித்தான் கணேஷ் ராம்.

டாக்டர் மீனலோசினியின் பெயரைக் கேட்டதும் அவருக்கு செலுத்தும் மரியாதையாக கணேஷை ஹர்ஷா வரவேற்றாலும் அவன் பூர்வியை சந்திக்காமல்  நேரடியாக தன்னை சந்தித்ததை விரும்பவில்லை. எனவே தான் பூர்வியை முன்னிறுத்தி அவனுக்கு அவள் தான் பாஸ் என்றிருந்தான்.

ன்று ஹர்ஷா அறுவை அரங்கத்தில் இருக்க கணேஷ் அங்கே பூர்வியின் ஆணைப்படி ப்ராஜக்ட் சம்பந்தமான நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

தனது ஹாஸ்பிடல் மொபைலுக்கு ஏதும் போன் கால் வந்தால் சர்ஜரியில் இருப்பதாக கூறுமாறு கணேஷிடம் சொல்லிவிட்டு சர்ஜரி செய்ய சென்றான் ஹர்ஷா.

ஹர்ஷாவிடம்  இரண்டு போன்கள் உண்டு. ஒன்று ஹாஸ்பிடல் போன், மற்றொன்று பர்சனல். ஹர்ஷா குறிப்பிட்டது என்னவோ ஹாஸ்பிடல் போனை தான். அவனது பர்சனல் போன் சைலன்ட்டில் தான் இருக்கும். திரை ஒளிர்ந்தாலும் யாரும் எடுக்க மாட்டர்கள். முக்கியமானவர்களுக்கு அவன் ஹாஸ்பிடல் போன் நம்பரும் தெரியும் என்பதால் ஏதேனும் அவசரம் என்றால் அதில் அழைப்பர்.

அப்போது ஹர்ஷாவின் பர்சனல் போன் வைப்ரேஷனில் சத்தமின்றி சிணுங்க திரையில் ஹனி என்ற பெயரைப் பார்த்த கணேஷ் போனை அட்டன்ட் செய்தான்.

“ஹாய் ஹனி, கணேஷ் ராம் ஹியர். பாஸ் இஸ் இன் சர்ஜரி எனி மெசேஜ் ” என புதியக் குரல்  கேட்கவும் ஹரிணி யாரிவன் என்று ஒரு நொடி திகைத்துப் போனாள். ஹர்ஷாவின் பர்சனல் மொபைலை வேறு யாரும் எடுத்துப் பேசியதில்லை. இது வரை அவளது ஹரியைத் தவிர யாருமே ஹனி என்று அவளை அழைத்ததுமில்லை.

“பாலாவே ஹனின்னு என்னைக் கூப்பிட்டது இல்லை. யாரிவன்” என்ற ஆர்வத்தில்  “மிஸ்டர் ராம்” என அவள் சொல்லவும் அவன் டாக்டர் கணேஷ் ராம் என்று திருத்தினான்.

“ஒஹ் ஒகே டாக்டர் ராம், தாங்க்ஸ் பார் தி இன்பர்மேஷன்” என்று அவள் சொல்ல அவளது ராமில் ஈர்க்கப்பட்டவன்  அவள் பெயரைப் போலவே அவள் குரல் இனிமையாக உள்ளது என்றான்.

பின்னர் ஹர்ஷாவிடம்  பேசும் போது யார் அந்த ராம் என்று கேட்டாள் ஹரிணி. ஹர்ஷா அவன் பின்புலம் எல்லாம் சொல்லி என்ன விஷயம் என்று கேட்க அவன் ஹர்ஷாவின் பர்சனல் போனை அட்டன்ட் செய்து  தன்னிடம் பேசியதை  ஹரிணி சொன்னாள்.

மறுநாள் ஹர்ஷாவின் ருத்ர அவதாரத்தைப் பார்த்தான் கணேஷ் ராம்.

“அவர் போனை அட்டன்ட் செய்து தகவல் தானே சொன்னேன், அதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறார்” பூர்வியிடம் புலம்பினான்.

“உன்னை யார் அண்ணாவோட பர்சனல் போனை எடுக்க சொன்னது. அதுவும் அக்காவோட கால் அட்டன்ட் செய்து வச்சிருக்க” பூர்வியும் வசை பாடினாள்.

நாள் முழுவதும் இருவரும் ஒன்றாகவே ப்ராஜக்ட் வேலைகளை செய்வதால்  பூர்வியும் கணேஷும் சகஜமாக உரையாடிக் கொண்டார்கள் என்றாலும்  டாம் அண்ட் ஜெர்ரி போல முறைத்துக் கொண்டே தான் இருந்தனர்.

“ஹனின்னு பேரைப் பார்த்ததும் பாஸோட ஸ்வீட்ஹார்ட்டா தான் இருக்கும்னு  நினச்சேன். அதான் இவ்வளவு கோபம் போல. ஆனாலும் பாஸ் இஸ் லக்கி. அவ்ளோ ஸ்வீட் வாயிஸ் அவளுக்கு” கணேஷ் சொல்லிக் கொண்டே போக எம்பி அவனது தலையில் நறுக்கென ஒரு குட்டு வைத்தாள் பூர்வி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.