Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

திண்டுக்கல் டவுன்

அம்மா நான் ஒரு வேலையா ஒட்டன்சத்திரம் போய்ட்டு வரேன்என வீரபாண்டியன் சொல்ல அதற்கு சாவித்ரியோ

ஏன்டா

அங்க ஒருத்தர் புதுசா கடை வாங்கியிருக்காராம், அந்தக் கடைக்குப் பூட்டு செய்யனுமாம் அப்படியே லாக்கர்க்கும் பூட்டு செய்யனுமாம், நல்ல ஆர்டர் கிடைச்சிருக்கு நான் கேட்ட பணத்தை கொடுத்துடுவாங்கம்மா

லாக்கர்னா பீரோதானே

இது பொருள் வைக்கற லாக்கர்மா, அலமாரி மாதிரி அதுக்கு பூட்டு செய்யனுமாம் அதான்

சரி போயிட்டு எப்ப வருவ

இங்கதானே பக்கத்தில இருக்கு நேரத்தோடு வந்துடுவேன் என்னம்மா விசயம்

நாளைக்கு மல்லிகாவை இங்க வர சொல்லலாம்னு இருக்கேன்

ஏன் என்ன விசயம்

சும்மாதான்டா அதான் நீ பரிமளத்தை வேணாம்னு சொல்லிட்டியே, மல்லிகாவோட பேசி பழகு

இதுல பேச என்ன இருக்கு, சின்னப்ப இருந்து அவளை பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்என சொல்லியவன் சட்டென பேச்சை நிறுத்திவிட்டு தன் தாயையே உன்னிப்பாகப் பார்க்க அவரோ குழப்பத்துடன்

ஏண்டா அப்படி பார்க்கறஎன கேட்க அதற்கு அவனோ

நீ நல்லாதானே இருக்க

ஆமாம்

கோபமா இல்லையே

ஏன்டா என்கிட்ட ஏதாவது சொல்லனுமா சொல்லு

அம்மா நான் சொல்றதை கேட்டு கோபப்படக்கூடாது யோசி, அப்புறம் உன் முடிவை சொல்லு, அதுக்குள்ள நான் ஊருக்குப் போயிட்டு வந்துடறேன்

சரிடா விசயம் என்ன

அதுவா அது நம்ம மல்லிகா இருக்காள்ல

ஆமாம்

அவளை நான் சின்னப்ப இருந்து பார்க்கறதால

ம்

அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் என்னிக்கும் நினைச்சதில்லைம்மாஎன தயங்கியபடியே சொல்ல அதற்கு சாவித்ரியோ

உனக்கு அவளை பிடிக்கலையா

அவளை எனக்கு பிடிச்சிருக்கு ஆனா, கல்யாணம் செஞ்சிக்க முடியாது

என சொல்லிவிட்டு தாயை பார்க்க அவரோ கோபமாக முறைக்கவும் அவனோ நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு

அம்மா அவளை நான் என் தங்கச்சியாதான் பார்த்தேன், கல்யாணம் செஞ்சிக்க முடியாது, நானே அவளை தூக்கி வளர்த்தேன், அவளை எப்படி நான் கல்யாணம்என சொல்லி முடிப்பதற்குள் சாவித்ரி நிறுத்து என்பது போல் உள்ளங்கையை அவன் முன் காட்ட அதோடு அவன் அமைதியானான்

இதைப்பத்தி அப்புறமா பேசலாம், நீ ஊருக்கு போய் வாஎன சொல்ல அவனும் அமைதியாக தன் அறைக்குச் சென்று பணமும் புல்லட் சாவியையும் எதற்கும் இருக்கட்டுமென தான் செய்த வலுவான பூட்டுக்கள், சில டிசைன்களையும் பையில் அள்ளி போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற தெருவில் அவனை பிடித்தார் வெங்கடாசலம்

உள்ள நீங்க பேசினதை கேட்டுக்கிட்டுதான் இருந்தேன், அப்ப பரிமளாவையும் நீ உன் தங்கச்சியாதான் பார்க்கறியாஎன கேட்க அவனோ

அவளை நான் அரசாங்க அதிகாரியா பார்க்கறேன், நிச்சயம் அவள் பெரியாளா வருவாப்பா, என்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்து அவள் லட்சியத்தை நானே கெடுத்ததா இருக்க கூடாது, அவள் லட்சியத்தை சாகடிச்சிட்டு என்னோட லட்சியத்தை நான் செயல்படுத்த முடியாதுப்பா

பக்கம் பக்கமா வசனம் பேசற, என்னவோ சரியில்லைடா நீ, இத்தனை நாளா இந்த மாதிரி நீ பேசினதில்லை இப்ப என்னாச்சி, புதுக்கடை திறந்தபின்னாடி உன் போக்கே சரியில்லை, உண்மையை சொல்லு வீரா வேற யாரையாவது நீ பார்த்து வைச்சிருக்கியாஎன கேட்க

புரியலைப்பா

இந்த வயசில நான் சொல்றதை புரியலைன்னு சொன்னது நீயாதான் இருப்ப

நிஜமாவே புரியலைப்பா

யாரையாவது லவ் கிவ் பண்றியா என்னஎன கேட்டதும் அவன் அதிர்ந்தான்.

அப்படி ஒரு நாளும் யார் மேலும் காதல் பார்வை பார்த்ததில்லை, செல்லும் வழியில் எதிர்பட்ட பெண்கள் மனதை கவரும் படி இருந்தால் சிறிது நேரம் பார்ப்பானே தவிர காதல் இதுவரை அவன் மனதில் உருவாகவில்லை. தனது தந்தை தன்னிடம் இப்படியொரு கேள்வி கேட்டது அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, அவனோ அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் இருக்கவே வெங்கடாச்சலம் பெருமூச்சுவிட்டபடியே அவனை விட்டு வீட்டை நோக்கிச் சென்றார்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாராஜேந்திரன் 2019-05-25 15:59
ayyo pavam ippadiya hero adivangi mappilaiya aaganum ini marriageku appuram neriya problems la mattikuvaro so sad nice epi facepalm
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாராணி 2019-05-24 07:23
அருமையான பதிவு அடுத்து திருமணம் எப்படி நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாmadhumathi9 2019-05-24 06:36
:clap: arumaiyaana epi sasi.veeraa sammadham sollivittadhal thirumanam nadanthuviduma? Veeraavin ammavidam kettu thirumanaththai nadaththuvaargala? :Q: enna nadakkappoguthunnu poruthirunthu paarppom.veeravin nambikkai than thozhilai vetri adaiya seiyyum. :thnkx: & :GL: waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாsasi 2019-05-24 06:49
Quoting madhumathi9:
:clap: arumaiyaana epi sasi.veeraa sammadham sollivittadhal thirumanam nadanthuviduma? Veeraavin ammavidam kettu thirumanaththai nadaththuvaargala? :Q: enna nadakkappoguthunnu poruthirunthu paarppom.veeravin nambikkai than thozhilai vetri adaiya seiyyum. :thnkx: & :GL: waiting to read more.

நன்றி மதுமதி தங்கள் கேள்விக்கான பதில் அடுத்த எபியில் உள்ளது வீராவிற்காக பரிந்து பேசியதற்கு நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாதீபக் 2019-05-23 17:41
Sis today's episode awesome. :clap: . Fully of family package really good to read with emotion and happy part on the super (y) . Eagerly waiting for next update. :GL: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகாsasi 2019-05-24 06:50
Quoting Deepak:
Sis today's episode awesome. :clap: . Fully of family package really good to read with emotion and happy part on the super (y) . Eagerly waiting for next update. :GL: :dance:

நன்றி தீபக் இந்த கதை கணவன் மனைவி இருவருக்குமிடையே நடப்பதால் எமோஷன் அதிகமாகதான் இருக்கும் கூடவே ஹாப்பி ஹாப்பி சீன்களும் வரும் தொடர்ந்து படித்து ஆதரவளியுங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top