இருக்கன் என்று ரிங் அடிக்காத மொபைலை காதில் வைத்து கொண்டு விறு விறு வென நடந்தான் ஜான்.”டின்னர் வித் சாரா” மை வூட் ஒரு சின்ன மிரட்டல் சொன்னதுகே இப்படி பயந்து ஓடுறான் சும்மா பிரான்க் பண்ணதுக்கு சரியான ஜொள்ளு சீ சீ சீ…என்று ஜானை பார்த்து கொண்டே முகத்தை சுளித்தால் சாரா.
தலை முடியை கோதி கொண்டே எங்க இந்த பாடிகார்ட் போனான் ஹாஸ்பிடல் வுல்லா தேடியாச்சு என்று கூறி கொண்டு கொண்டே சாரா திரும்ப ஹாஸ்பிடல் என்ட்ரி டோர் சென்சார் மூலமாக தானாக திறக்க லிப்பர்ட் ப்ரிண்டட் பேண்ட் க்ரீன் கலர் டீ ஷிர்ட் அதன் மேல் ப்ரவுன் கலர் ஓவர் கோட் போட்டு கொண்டு வந்த மன்வீரை கண் இமைக்காமல் பார்த்தால் சாரா. மன்வீரா இது அன் யூனிபார்ம்ல வித்தியாசமா இருக்கான் ஏய்… மன்வீர் எங்க போன உன்ன எவ்ளோ நேரமா தேடுறன் தெரியுமா ? என்ன ஆச்சு மேடம் ஏதாவது பிரச்சனையா என்று அவன் கேட்க ..ஆமா பிரச்சினை தான் எனக்கு தனியா சாப்ட பிடிக்கல அதுமட்டுமில்ல நீ எனக்காக பாவம் மழைல நனைஞ்சு வாங்கிட்டு வந்தூர்க அதான் சரி என் கூட சாப்டா உனக்கு ஒரு சான்ஸ் தரலாம்னு நினைசென் என்றால் சாரா. சாரவின் பேச்சை கேட்ட மன்வீர் அதை பற்றி யோசிக்க ஆரம்பிக்க ஏய்…….என்ன யோசிக்குற எதுக்கு நான் உனக்கு இவ்வளவு எஸ்பிளானஷன் குடுக்கணும்னு தெரியல ஒழுங்கா என் கூட சாப்ட வா அவலதான் இது என் ஆர்டர் என்று சொல்லிவிட்டு உடனே பின் புறமாக திரும்பி யப்பா…எப்படியோ சமாளிச்சாச்சு என்று கூறி கொண்டே ஹாஸ்பிடலின் மாடி பிடியை நோக்கி நடந்தால்.
சென்னை துறைமுகத்தில் கப்பல்கள் பல உள்நாட்டு சரக்குகளை ஏற்றுமதியும் வெளிநாட்டு சரக்குகளை இறக்குமதியும் செய்து கொண்டிருந்தது மாலை பொழுதில் கடலில் மிதந்து வரும் கப்பல்களின் எல். இ. டி லைட்டுகள், வானத்திலிருந்து பார்த்தால் அமைதியாக அலை வீசி கொண்டிருக்கும் மின்மினி பூச்சிகள் கடலில் மிதப்பது போல காட்சியளித்தது அதற்கெல்லாம் தன் ஒளி வீசி வழி காட்டி கொண்டிருந்தது ஹார்பரில் அமைக்கப்பட்டிருந்த லைட் ஹௌஸ். கண்டைநர் டெர்மினல் ஒவ்வொரு கார்கோவையும் மெதுவாகவும் பாதுக்காப்பாகவும் கப்பலில் ஏற்றி கொண்டிருந்தது மறு பக்கம் மொபைல் கிரேன் ஒவ்வொரு கார்கோவயும் பண்டக சாலைக்கு மாற்றி கொண்டிருந்தது .சரக்குகளை சுமந்து கொண்டு சென்றிருக்கும் ஒவ்வொரு கண்டைனரும் கார்கோ ஸ்கேனிங் டெக்னாலஜி மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு சரி பார்த்து கொண்டு செல்லப்பட்டிருந்தன அப்போது “ டப் டப்” பென்று எவரோ நடந்து வரும் காலனியின் சத்தம் கேட்டது அது வேற யாருமில்லை வெள்ளை நிற யூனிபார்ம் அணிந்து கொண்டு கண்டைனர் செக்கிங் இடத்தை நோக்கி