(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

[நம்ப மாட்டீங்களே!]

அது கண் பார்வையிலிருந்து மறைந்தபின்தான் அவனுக்கு உடல் இயக்கம் பிடிபட்டது. அம்மாடியோ! எப்படி அது தானாக திரும்பி ஓடிவிட்டது?.

கேள்வியுடன் திரும்பினான். அங்கு அதிதி கையில் தீப்பந்தத்துடன்  நின்றாள்.

ஓஹ்… இதுதான் ட்ரிக்கா?

“காடு விலங்குகளுக்கு நெருப்பென்றால் பயம். அதைக் கண்டால் ஓடிவிடும்” என்று விளக்கினாள்.

"அம்மா தாயே…. நல்லவேலை செய்து என்னை காப்பாற்றினாய்…"

“அது திடீர்னு வந்துடுச்சு சார். நான் உங்ககிட்ட சொல்லிகிட்டேதான் ஓடினேன். நீங்க கவனிக்கவே இல்லை”

“நான் அந்த அரிவாளை எப்படி எடுப்பதுன்னு பார்த்துகிட்டு இருந்தேன்… நீ சொன்னது காதில் விழவில்லை”

“காட்டுல ஒவ்வொரு நொடியும் அலர்ட்டாக இருக்கணும்”

“என்னோட பெரிய ட்ராபேக் அதுதான். ஒவ்வொரு விசயத்தையும் ரொம்ப ஆழமாக சிந்திப்பேன். அதனால மத்த விசயங்களை கவனிக்க மாட்டேன்”

“ஒரு ஆராய்ச்சியாளரோட குணாதிசயமே அதுதானே சார். நாங்க எல்லாத்தையும் மேம்போக்கா பார்த்துட்டு போயிடுவோம். நீங்க விலாவாரியாக தெரிஞ்சுக்க நினைப்பீங்க. அப்போதானே புதுசா எதையாவது கண்டுபிடிக்க முடியும்”

ரொம்பவும் தாங்கி பிடிக்கிறாளே…

“ரொம்ப சரி அதிதி. இப்போது சாப்பிட எதையாவது ரெடி பண்ணனும். இருட்டும் முன் பரணுக்கு போயிடணும் இந்த தீப்பந்தம் கையிலேயே இருக்கட்டும்”

அவன் சொல்வதை ஏற்றுக் கொண்ட அதிதியும் அவனுடன் சேர்ந்து  நடந்தாள். கொஞ்ச தொலைவில் ஓடிக் கொண்டிருந்த ஓடையில் நீரை எடுத்துக் கொண்டனர்.

“சார், நாம இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த ஓடை இருக்கு. மிருகங்கள் நீர் குடிக்க இங்குதான் வரும். நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கணும்”

“ஐ அண்டர்ஸ்டான்ட்… வேட்டையாட வசதியாகத்தான் மிருகங்கள் வந்து போகும் பாதையில் இந்த பரணை போட்டிருக்கிறார்கள். வேட்டையாட மட்டும் அல்லாமல் மிருகங்களின் லைஃப் பத்தி லைவ் போட்டோ ஷூட் பண்ணவும் இந்த இடம் சரியாக இருந்திருக்கும்”

“அப்படித்தான் இருக்கும். நமக்காக  போட்ட பரண்போல தெரியவில்லையே” அவள் பேசிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.