(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

கொண்டே எதையோ தேடினாள்.

“இதோ கிடைச்சிடுச்சு” என்று அங்கிருந்த ஒரு பெரிய செடியை பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

“என்ன அது?”

“காட்டு கப்பை கிழங்கு. இதை வேக வைத்து சாப்பிடலாம். இன்னும் தேடணும்” என்றபடி   நடந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் மடி  நிறைய பொருட்களை சேகரித்து விட்டாள்.

“இது போதும். வாங்க போகலாம்”

“இதெல்லாம் என்ன அதிதி?”

“இதில் இருக்கும் இலைகளை வைத்து மூலிகை தேநீர் செய்யலாம். காலையில குடிக்கும்போது உற்சாகமாக இருக்கும். கிழங்கை வேக வைத்தும் சாப்பிடலாம்… சுட்டும் சாப்பிடலாம்.” அவள் பேசிக் கொண்டே  நடந்தாள்.

“ஆனால் உப்பு இல்லாமல் இதையெல்லாம் சாப்பிட முடியுமா?”

“அது ஒரு கூடுதல் சுவைதான். உப்பு இல்லாமல் சாப்பிடும்போது அந்த கிழங்கின் உண்மையான சுவை தெரியும். அப்புறம் இந்த பழங்கள் குட்டி குட்டியா சுளைகளுடன் இருக்கும். ரொம்ப இனிப்பாக இருக்கும். இங்கே கிடைக்கும் மாம்பழத்தை மட்டும் சாப்பிடவே கூடாது. பேய்மாங்காய்னு சொல்லுவோம். ரொம்ப புளிக்கும். நெல்லிக்காய் கிடைக்கும். தேடி பார்க்கனும்"

அவள் சொல்வதை ஆர்வமாக கேட்டுக் கொண்டே வந்தான். அவளே தொடர்ந்தாள்.

“இங்கே கிடைக்கும்  காய், பழம், கிழங்கு அனைத்திலும் அழுத்தமான சுவை இருக்கும். அது ஏன்?”

“எனக்கு புரிஞ்சிட்டது.  இங்கு இருக்கும் இயற்கை வளம் இன்னும் குறையாமல் இருக்கிறது. ஒவ்வொரு தாவரமும் இந்த நிலத்தில் கிடைக்கும் மினரல்ஸை அதீதமாக எடுத்துக் கொள்கின்றன. இவற்றில் சத்து அதிகமாக கிடைக்கிறது. அதோட… காடுகள்தான் நம்முடைய மூதாதையர் வாழ்ந்த நிலம்.. அவர்களும் இதுபோன்ற ஹெல்தியான சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.”

“ ஆமாம், ஊருக்குள்ள நாம விளைவிக்கிற காய்கறிகள் எதுவுமே இவற்றிற்கு ஈடு இல்லை.”

“அப்படி இப்படின்னு பேசி இந்த வெரைட்டி சாப்பாடை சாப்பிட வைச்சுடுவே போலிருக்கு. வா அதையும் டேஸ்ட் செய்து பார்த்துடுவோம்”

அவர்களுடைய பரண் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அதிதியும் தீப்பெட்டி இருந்ததால் துரிதமாக உணவை சமைத்து விட்டாள். வேக வைத்த கிழங்கு… பழங்கள்.. சூடாக மூலிகை தேநீர்… நாட் ஸோ பேட்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.