(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இவங்களை கீழே அனுப்பிட்டு அவங்க ரெண்டு பேரும் பேசின விஷயம்.. அது மட்டும் தான் என்னோட இத்தனை வருஷ வெறிக்கு காரணம்.

வாங்க நம்பூதிரி..”

வர்மா..விஷயம் கேள்விப்பட்டேன்..ஏற்கனவே தெரிஞ்சது தான..தைரியமா இருங்க..”

அவன் இறப்பு எப்போ வேணாலும் நடக்கும்னு தெரிஞ்சுருந்தாலும்அது  இப்போ நடக்கும் போது ஏத்துக்க முடீல..என்ன இருந்தாலும் அவன் என் இரத்தம் இல்லயாஅது மட்டுமில்லாம என் மருமகன்களே இதுக்குக் காரணமா இருப்பாங்கனு தெரிஞ்சு என்னால தாங்கவே முடில..”

ம்ம் அவங்க உன் மகனோட இறப்புக்காக கடவுள் விதைத்த கருவி அவ்வளவு தான்.உங்களை மாதிரியே இந்த வர்மா சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி காப்பாத்த போற உங்க பேரன் மகிழனைப் பெறனும்னா இது நடந்து தான் ஆகணும்னு சொன்னப்போ சரினு ஒத்துகிட்டு தான அந்த பொண்ணோட ராசி நட்சத்திரம்படி மாங்கல்ய பாக்கியம் சரியில்லனு தெரிஞ்சும் அவளை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கினீங்க.!?”

இது தெரிஞ்ச போது என் மனநிலைமை எப்படியிருந்ததுனு இப்போ வரை கணிக்க முடில பித்து பிடிச்ச மாதிரி ஆய்ட்டேன்.அங்கிருந்து கீழே வந்தவ பூஜை ரூம்ல போய் உக்காந்துட்டேன்.அத்தனை கடவுளையும் மனசுகுள்ள திட்டித் தீர்த்தேன்.

நான் யாருக்கு என்ன பாவம் பண்ணிணேன்னு இத்தனை கஷ்டம் வாழ்க்கையில..இவரோட தொழிலைக் கட்டி காப்பாத்த என் வாழ்க்கையை பணயம் வச்சுட்டார்னு நொந்து போக தான் முடிஞ்சுது.

ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாம கதறி அழுதேன்.உன் பாட்டி என்னை அவங்க அறைக்குக் கூட்டிட்டு போய் அன்னைக்கு மொத்தம் என்னைப் பாத்துகிட்டாங்க..என்னை மாதிரியே இந்த வீட்ல நடக்குற எதுவும் புரியாத இன்னொரு ஜீவன் அவங்க..

அவங்களுக்கும் இது எதுவுமே தெரியாதுங்கிறதால வர்மாகிட்ட நான் எதுவுமே இதைப்பத்தி கேட்காம அமைதியாவே இருந்தேன்.கொஞ்சம் கொஞ்சமா உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போய்ட்டே இருந்தது.படுத்த படுக்கையா ஆனாங்க..

நீயும்  காலேஜ் படிக்க போய்ட்ட அப்போ ஒரு நாள் உன் தாத்தாவோட அறைக்கு நான் போனேன்.என் அக்காவை இங்க கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் முடியாதுனு சொன்னார்.

ஏன் உன் புள்ளையை கொலைப் பண்ணிண மாதிரி என்னையும் எதாவது பண்ணலாம்னு இருக்கியானு கேட்டேன்.இதை அந்த வர்மா எதிர்பார்க்கல..எல்லாம் எனக்குத் தெரியும் என் புருஷன் என்னை விட்டுப் போன ஒரே வாரத்துலயே தெரியும் ஆனாலும் இத்தனை வருஷம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.