(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அங்கு நிலவிய மௌனத்தை ஷியாமாவே கலைத்தாள்,”சோ எல்லா கேள்விகளுக்குமான விடை கிடைச்சுருச்சுனு நம்புறேன்.மகிழன் நீங்க ஓகேனு சொன்னா அடுத்த ப்ரொசீஜரை ஸ்டார்ட் பண்ணலாம்.

என் ஹெட்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன்னா போலீஸ் வர சொல்றதுக்கு வசதியா இருக்கும்.”

அதுக்கு பதில் சொல்ல வேண்டியது அவன் இல்ல நான்..என் வாழ்க்கையில் என்ன நடக்கணும்னு முடிவு எடுக்குற உரிமை எனக்கு மட்டுமே சொந்தமானது.அது பைத்தியமா இருக்குறதுக்கும் பொருந்தும் பிணமா இருக்குறதுக்கும் பொருந்தும்”,என்றவர் தன் கையிலிருந்த சிறு கத்தியைக் கொண்டு தன் கையில் ஆழமாய் அறுத்திருந்தார்.

நொடிப் பொழுதில் நடந்துவிட்ட விஷயத்தை யாரும் எதிர்பார்க்காமல் சிலையென நிற்க மகிழன் ஓடிச் சென்று அவரை மடியில் ஏந்திக் கொள்ள ஷியாமா முதலுதவி செய்வதற்காக ஓடினாள்.அப்போதும் அந்த வலியிலும் கம்பீரமாய் அவளை அழைத்தார் சந்தியா.

ஏய் ஷியாமா அங்கேயே நில்லு..என்னை காப்பாத்தனும்னு நினைச்ச கொஞ்சமும் யோசிக்காம என் மகன்னு கூட பார்க்காம இவனை கொன்னுடுவேன்.”

அவரின் திடம் அறிந்தவளோ அப்படியே நின்றிருந்தாள்.இங்கு மகிழனுக்கோ கண்கள் கலங்கியிருந்தன.

ம்மா..ஹாஸ்பிட்டல் போலாம் மா..அப்பறம் எதுவா இருந்தாலும் பேசிப்போம்.”

மகிழா என்னை காப்பாத்தி கைதியா மாத்தி உன் பெயரைக் கெடுத்துக்க போறியா?எந்த வர்மா குடும்பத்தை அழிக்க நினைச்சேனோ இப்போ என் பிள்ளைக்கு நான் பண்ற கடைசி உதவியா அந்த வர்மா குடும்பத்தோட பெயரைக் காப்பத்தணும்னு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன்.

கொலைகாரியோட மகனா நீ இந்த உலகத்தை எதிர்கொள்ள வேணாம் டா..பைத்தியமா இருந்து பைத்தியமாவே செத்துபோனவங்கிற பேரே எனக்கு இருந்துட்டு போகட்டும்.

உன் தம்பி தங்கைனு எல்லாரையும் நல்லபடியா பார்த்துக்கோ அதைவிட முக்கியமா உனக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ மகிழா..நூறு வருஷம் உன் குடும்பத்தோட நல்லபடியா நீ வாழணும்.எனக்காக நீ எதாவது பண்ணணும்னு நினைச்சனா என் அக்கா உன் பெரியம்மாவை நல்லபடியா பார்த்துக்கோ..”

சந்தியா ஏன் டீ இப்படி பண்ற..இதுக்காகவா இத்தனை கஷ்டம் பட்டோம்..”

போதும் கா..என்னால நீ பட்டதெல்லாம் போதும்..இனியாவது நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழு.உன் புள்ள இந்த மகிழன் உன்னை பார்த்துப்பான்.”

கஷ்டமோ நஷ்டமோ நாம சேர்ந்தே தான் அனுபவிச்சோம்..சாகும் போதும் அப்படியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.