நான் பதில் எதுவுமே பேசலை.அதுக்குப் பிறகு தான் இந்த ஷியாமா எல்லார்கிட்டேயும் நடந்ததைப் பத்தி விசாரிச்சது தெரிய வந்தது.இங்க நடக்குறதுல அவள் தலையிடக் கூடாதுனு எழுதி மொட்டை கடிதமா போட்டேன்.ஒரு வேளை அவ மகிழனோட சிநேகிதியா இருந்தா கண்டிப்பா அதைப் பார்த்து பயந்து மகிழன்கிட்ட சொல்லி அவனும் இங்க அதை வச்சு ஒரு பிரச்சனை பண்ணிருப்பான்.
ஆனா அப்படி எதுவுமே நடக்கல..அதனால தான் அவள் கண்ணு முன்னாடியே இதோ இவன் தலையைப் பதம்பார்த்தேன்.தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டா இதான் உனக்கும் நடக்கும்னு அவளுக்குப் புரிய வைக்கணும்னு நினைச்சேன்..ஆனா போலீஸ் இல்லையா அதுகுள்ள எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டா..
இந்த விஷயம் நடந்த அப்பறம் முத்து அண்ணா என்னைப் பார்த்து பேசினார்.ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க சொல்லுங்கனு கெஞ்சினார்.சொன்னேன் இந்த வீட்டு பெரிய மனுஷன் என் புருஷனைக் கொன்னவங்களை இந்த வீட்டிலேயே வச்சு பாதுகாத்துட்டு இருந்தார்.என்னையும் பைத்தியமா அலைய வச்சுருக்கார் என்னை வேற என்ன செய்ய சொல்றீங்கனு கேட்டேன்.
அவர் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசல..ஒண்ணே ஒண்ணு தான் கேட்டார்.அடுத்து என்ன பண்ண போறீங்கனு சொல்லுங்க மா நான் உங்களுக்கு உதவி பண்றேன்.
அப்படி நடத்தினதுதான் இந்த விபத்து..அந்த கடைசி நொடில என் புருஷன் எத்தனை பதறியிருப்பார் பயந்துருப்பார்..குடும்பம் குழந்தை பத்தி எல்லாம் எவ்ளோ கனவு கண்டுருப்பார்னு எல்லாமே இவனுங்களுக்கும் தெரியணும்னு நினைச்சேன்.
ஆனா இறப்பையும் விட கொடுமையை இவங்க அனுபவிக்கணும்ங்கிறது தான் விதி.இவங்க செத்துருந்தா கூட இத்தனை நிம்மதி எனக்குக் கிடைச்சுருக்காது..ஆனா இப்போ இந்த உலகத்துலேயே சந்தோஷமானவ நான் தான்.”,என்றவர் அப்படி ஒரு சத்தமாய் சிரித்திருந்தார்.
“ம்மா..ஏன் மா..என்னைப் பத்தி நீ யோசிக்கமயே போய்ட்ட..அப்பாவும் இழந்து உன் அன்பும் இல்லாம அநாதை மாதிரி இருந்த என்னை பத்தி யோசிச்சுருக்கலாமே மா..”
“மகிழா..இந்த ஒரு பாவத்துக்கு மட்டும் கண்டிப்பா எனக்கு மன்னிப்பு கிடைக்காது டா அது எனக்கே தெரியும்.காரணமே இல்லாம உன்னைத் தவிக்க விட்டுடேன்.ஆனா உண்மையை சொல்லணும்னா உன் தாத்தாவோட பாதுகாப்புல நீ இருந்தப்போது உன்னையும் இந்த வர்மா குடும்ப வாரிசா தான் டா பார்க்க தோணுது..
என் அப்பா அம்மாகிட்ட இருந்து என்னைப் பிரிச்சு எங்க குடும்பத்தையே அழிச்சதது மட்டுமில்லாம உன் அப்பா என்மேலயும் நான் அவர் மேலயும் வச்சுருந்த அன்பு கள்ளம் கபடம்