(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ஏன் அமைதியா இருக்கேன்னு தான யோசிக்குற..

உன் மனைவி இந்த பெரிய மனுஷிக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.ஆனாலும் உன் மருமகன்கள் முகத்தில முழிக்க விருப்பம் இல்ல..ஒரு வேளை அவனுங்க என் கண்ணுல பட்டா அன்னைக்கே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய்ருவேன்னு தான் அமைதியா இருக்கேன்.இனியும் அப்படியே இருக்கணும்னா எனக்கு என் அக்கா இங்க வரணும்னு சொல்லிட்டு நான் போய்ட்டேன்..

மறுநாளே என் அக்கா இங்க வந்தா ஆனா சரண்யாவா இல்ல..அமுதாவா..எனக்கு உண்மைத் தெரிஞ்சுடுச்சுங்கிற பயத்துல நான் வெளில வராம இருந்தாலே நல்லதுனு எங்களுக்குத் தேவையான எல்லா வசதியும் மாடி அறையிலேயே பண்ணிக் கொடுத்தார்.

எங்களுக்குத் தேவையான எந்த ஒரு விஷயமும் என் அக்கா மூலமா அவருக்குப் போகும் கொண்டு வந்து வெளியிலேயே வச்சுட்டு போய்டுவாங்க..இந்த வீட்ல இருக்குறவங்களைப் பொறுத்த வரை நான் ஒரு பைத்தியம்.அதை எனக்கு சாதகமா மாத்திக்கணும்னு முடிவு பண்ணிணேன்.என் அக்கா அதுக்கு முழு உதவியும் பண்றேன்னு சொன்னா..

இருந்தும் அதையும் செய்யுறதுக்கு முன்னாடி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது.அதுக்கான நேரம் தான் என் மாமியாரின் இறப்பு..அவங்க இருக்குற வரை மேலும் அவங்களை கஷ்டப்படுத்த கூடாதுனு நினைச்சு தான் நான் அமைதியா இருந்தேன்.அடுத்த இரண்டு வருஷத்துக்குள்ள நான் மொத்தமா பைத்தியம்னு எல்லாருக்கும் பதிவு பண்ணிட்டே இருந்தேன்.

கத்துறது அங்க இங்கனு ராத்திரியில் நடமாடுறதுனு எல்லாமே..அப்படி ஒரு நாள் நான் கண்டுபிடிச்சது தான் வர்மாவோட அறையில் இருக்குற ரகசிய வழி...இந்த வீட்டோட ஒவ்வொரு துரும்பையும் அலசி ஆராய்ஞ்சேன்..அப்படி தான் அந்த புத்தக அறையில் இருந்த பழைய அரண்மனைப் பத்திய வரைபடம் இருந்தது.

அடுத்தடுத்து எல்லாத்தையும் திட்டம் போட்டோம்.நான் இராத்திரியில் இப்படி நடந்துட்டு இருந்ததால வாசல் கதவோட சாவி மாதிரியே ஒண்ணு செஞ்சு நாங்க வச்சுக்குற மாதிரி ஏற்பாடு பண்ணிக்கிட்டோம்.

எல்லாம் சரியா கணிச்சு வச்ச பிறகு எங்களோட முதல் பலி அந்த வர்மாவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.வெறும் பேர் புகழ் பணத்துக்காக மாந்திரீகம் ஜோசியம்னு மூட நம்பிக்கையை வளர்த்து பெத்த புள்ளையையே பலி கொடுக்கத் துணிஞ்ச அந்த அரக்கனைத் தான் முதல்ல கொல்லணும்னு நினைச்சேன்.

அதன்படி அன்னைக்கு ராத்திரி நான் எப்பவும் போல வீட்டை சுத்தி வர மாதிரி வந்து யாரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.