(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இல்லாதது அதையும் என்னை முழுசா அனுபவிக்க முடியாம பண்ணி எல்லாத்துக்கும் மேல இத்தனை வருஷமா என்னை வீட்டிலேயே கைதி மாதிரி ஆக்கின இந்த நிலைமை எல்லாத்துக்கும் காரணம் அந்த வர்மாவோட கேவலமான மூடநம்பிக்கை.

நம்ம கடவுள் மேல வைக்குற நம்பிக்கையே ஒரு எல்லையை தாண்டினா அதுபக்தியா இருக்காது அப்படி இருக்கும் போது யாரோ எதோ சொல்றான்னு இந்த சொத்தையும் புகழையும் காப்பாத்த ஒரு உயிரையே அழிக்குறதுனா என்ன மாதிரியான பிறவி அதெல்லாம்.

ஒரு வேளை என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா கூட  உங்க அப்பா உயிரோட இல்லாம போய்ருக்கலாம் ஆனால் அது நடக்கல இப்போ இந்த இடத்துல நான் தான் இருக்கேன்.

ஒண்ணே ஒண்ணு மட்டும் உன்னோட அம்மாவா நான் சொல்றேன் மகிழா எக்காரணம் கொண்டும் பணத்தாசை பிடிச்ச மிருகமா மட்டும் வாழ்க்கையில மாறிடாத..பணத்தைப் பார்த்து எப்பவும் மயங்காத..

மண் பொன் பெண் இந்த மூணுமே மதிக்க வேண்டிய விஷயங்களா இருக்குற அதே நேரம் அனுமதியில்லாத இடத்தில் ஆசை வச்சா நம்மையே அழிச்சுரும் ஒரு விஷயமும் தான்.

அதுக்கு மிகப் பெரிய உதாரணம் உன் தாத்தாவும் இந்த இரண்டு ஜடங்களும் தான்.உன்னால முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது பண்ணு இல்லையா குறைந்தபட்சம் யாருக்கும் எந்த கெட்டதையும் பண்ணாம இருந்தா அதுவே போதும்.

சக உயிரை அழிச்சு தான் வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னு இருந்தாஅப்படி ஒரு முன்னேற்றத்தை எப்பவுமே ஏத்துக்காத.எப்படி வேணும்னாலும் வாழலாம் ,இப்படி தான் வாழணும்னும் வாழலாம்.ஆனா இரண்டுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு பா..

அதே மாதிரி யாரையும் கண்மூடித்தனமா  நம்பாத..உனக்கான முதல் துணை நீ மட்டும் தான்.உன் மனசு சொல்றதை விட சரியான நல்லது கெட்டதை யாரும் உனக்கு சொல்ல முடியாது.எப்பவும் உனக்கான மனுஷங்களைத் தேர்ந்தெடுக்கும் போது ரொம்பவே கவனமா இரு.

எந்த குழந்தையும் பிறக்கும் போது நல்ல உயிர் தான்.ஆனா அது நல்லவனா வளர்றதும் கெட்டவனா மாறுறதும் அப்பா அம்மாவைத் தாண்டி சுற்றத்து மக்களாலேயும் தான் நிர்ணயிக்கப்படுது.ஒரு அம்மாவா உனக்கு சொல்ல வேண்டிய விஷயம் இது தான் டா.

எப்போவாவது இந்த அம்மாவை மன்னிக்கனும்னு தோணினா மன்னிச்சுடு மகிழா..என் இழப்புக்கான ஈடுகளைப் பெறணும்னு உன் வாழ்க்கையை மொத்தமா பணயம் வச்சுட்டேன்.”

ஒன்றுமே கூறாமல் மகிழன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட முத்து தான் கண்ணீர் விட்டு கதறினார்.மற்ற யாருக்கும் எதுவும் பேச வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.