(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

இருக்காங்களானு உறுதிப் பண்ணிக்கலாம்னு பார்த்தப்போ இந்த கல்யாணியோட தம்பி வாசல்ல தூங்கிட்டு இருந்தான்.அக்கா அவனைப் பார்த்துக்குறதா சொல்லி வெளியே போக நான் அந்த வர்மாவோட கதவைத் தட்டினேன்.

நாங்க நினைச்சா மாதிரியே சரியா அந்த நேரத்துல கண்முழிச்ச இவனை அக்கா தான் கைல வச்சுருந்த மயக்க மருந்தை அடிச்சு மயங்க வச்சுருந்தா.இங்க கதவைத் திறந்த வர்மாவோ என்னை எதிர்பார்க்காம அதிர்ந்து நின்னுட்டார்.

அவரை உள்ளே தள்ளி கதவைப் பூட்டினப்போ அவன் கண்ல தெரிஞ்ச அந்த மரண பயம் அது அத்தனை நிம்மதியைக் கொடுத்தது எனக்கு..கெஞ்சினான் கதறினான் ஆனா அவனைக் கொல்லணும்ங்கிறதை தாண்டி எனக்கு எந்த நினைப்பும் இல்ல.என் கையில் இருந்த  தலையணையை எடுத்து அவன் முகத்துல வச்சு மூச்சு மூட்டுற அளவக்கு அழுத்தி துடிக்கத் துடிக்க கொலைப் பண்ணிணேன்.

அவனோட அசைவு நின்னுப்போன அப்போ என் அம்மா அப்பா புருஷன்னு அத்தனை பேரும் சந்தோஷப்படுவாங்கனு ஒரு நிம்மதி எனக்குள்ள..அந்த ரகசிய வழி வழியா வெளியே போய் எதுவுமே நடக்காத மாதிரி என் அறைக்குப் போய்ட்டேன்.

அந்த இரவு எத்தனையோ வருஷத்துக்கு அப்பறம் நான் நிம்மதியா தூங்கின இரவு.அந்த வர்மாவைக் கொல்லுறதுக்கு முன்னாடி சொன்னேன் உன்னை அத்தனை நிம்மதியா சாகடிக்க மாட்டேன்.எந்த வர்மா குடும்ப சாம்ராஜ்யத்தை காப்பத்தணும்னு நீ இத்தனை தப்பு பண்ணிணியோ அந்த சாம்ராஜ்யத்தோட அத்தனை ஆண்களையும் அழிப்பேன்..உன் காலத்துக்கு அப்பறம் இந்த வர்மா குடும்பம் ஒண்ணுமே இல்லாம மண்ணோட மண்ணா போறதைப் பார்த்துட்டு தான் என் உயிர் போகும்னு சொன்னேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு ஒருத்தரையா கொல்லணும்னு காத்திருந்தேன்.அப்போ உள்ளே வந்தவள் தான் இந்த ஷியாமா..ஏனோ முதல்ல இவளைப் பார்த்தப்போவே சந்தேகம் வந்தது.ஏதோ ஒரு விதத்துல எனக்கு இடைஞ்சல் கொடுக்கப் போறானு தோணிச்சு..

அப்போ தான் அதுல் வர்மாவைப் படியில் இருந்து தள்ளிவிடுற வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது நான் தான் தள்ளிவிட்டேன்.அந்த நேரம் உள்ளே வந்த முத்து அண்ணா என்னைப் பார்த்துட்டார்.அவர் கொடுத்த சத்ததுல மத்தவங்க வர்றதுக்குள்ள நான் மாடிக்குப் போய்ட்டேன்.

எனக்குத் தெரியும் எப்படியும் அவர் என்னை காட்டிக் கொடுக்க மாட்டார்.அதே மாதிரியான பதில் தான் எல்லாருக்கும் அவர் கொடுத்தார்.யாருக்கும் தெரியாம என்னைப் பார்க்குறதுக்கு வந்தார்.ஏன்ம்மா இப்படி பண்றீங்க இதெல்லாம் தப்பு வேண்டாம்னு கதறி அழுதார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.