(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

போயிருவோம் சந்தியா..”

இப்போ தானே கா சொன்னேன் நம்ம சுயநலத்துக்காக ஒரு உயிரை அழிக்குறது பெரும் பாவம்..அப்பறம் எனக்கும் அந்த வர்மாக்கும் என்ன வித்தியாசம் சொல்லு..மகிழா..”

ம்மா நான் பெரியம்மாவை நல்லபடியா பார்த்துப்பேன்.நீ வாம்மா ஹாஸ்பிட்டல் போலாம்.ப்ளீஸ் மா..”

அவன் கன்னத்தை வாஞ்சையாய் தடவியவர்,”உனக்கு அப்படியே உன் அப்பா குணம் மகிழா.எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும் நீ..”,என்றவரின் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

சந்தியாவும் முத்துவும் கதறியதைப் பார்க்க அவர்களின் பாசமும் விசுவாமும் மற்றவர்களை வியக்க வைத்தது.மகிழனின் நிலைமை தான் உண்மையில் ஷியாமாவிற்கு பாவமாய் இருந்தது.

பைத்தியமாய் இருந்தாலும் தாய் என்றொருவர் இருந்தார் இப்போது அந்த உறவும் இல்லாமல் போய்விட்டது.அவன் முன்பே கூறியது போல் இருந்தும் இல்லாத நிலைமை இப்போது நிஜமாவே இல்லாமல் போய்விட்டிருந்தது.அவனைப் பற்றி எண்ணிவளுக்கு பெருமூச்சே பதிலாய் எழுந்தது.

இரு தினங்களில் அங்கு இயல்பு நிலை திரும்பியிருக்க மகிழனைப் பார்ப்பதற்கு ஷியாமா வந்திருந்தாள்.

எப்படியிருக்கீங்க மகிழன்?”,என்ற அவளின் கேள்விக்கு வெறும் புன்னகையே பதிலாய் வந்தது அவனிடத்தில்.

வாழ்க்கை ரொம்பவே வித்தியாசனமானது.. இல்ல ஷியாமா!”

ம்ம் உண்மை தான்.இனி தான் நீங்க ரொம்பவே திடமா இருக்கணும்..”

அது ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்ல..இத்தனை வருஷம் போட்ட அதே வேஷத்தை தொடர வேண்டியது தான்.ஆனா ஒரே வித்தியாசம் அப்போ யாரையும் புரிஞ்சுக்காம சுத்தி நடக்குறது தெரியாம இருந்தேன்.இனி அப்படி இருக்கப் போறது இல்ல..அவ்வளவு தான் வித்தியாசம்.”

வாழ்க்கை வித்தியாசமானது தான் அதையும் தாண்டி மனிதமனம் ரொம்பவே வித்தியாசமானது.இருக்கப் போற கொஞ்ச காலத்துக்குள்ள கோபம் வன்மம் ஆசை அகங்காரம் பேர் புகழ்னு எதையெதையோ தேடி ஓடுறோம்.எல்லாத்துக்கும் மேல அன்பு பாசம் நம்பிக்கை இந்த விஷயங்கள் எல்லாம் இருக்குறதை மறந்துறோம்.

பணத்தோட அருமை புரியுற அளவுக்கு வாழ்க்கையோட அருமை புரியுறதே இல்லை.சரி விடுங்க..தைரியமா இருக்கனும்..உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல இருந்தாலும் ஒரு ப்ரெண்டா என் கடமை இது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.