கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள், சரியாக ஐந்து நிமிடம் ஆனதும், மற்ற ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்த கணவனின் அருகே சென்றாள்...
“பைவ் மினிட்ஸ் ஆச்சு மனோஜ்... கிளம்பலாமா???”
“என்ன விஷயம் pbs? ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க? உன்னை நான் இப்படி பார்த்ததே இல்லையே...” என உண்மையான அக்கறையுடன் கேட்டான் மனோஜ்.
“அப்படி எதுவும் இல்லை மனோஜ்... நாம டைம் ஸ்பென்ட் செய்யலாம்னு நினைச்சேன்...”
“இதை முதலேயே சொல்லி இருக்கலாமே??” என சொல்லிக் கொண்டே எழுந்துக் கொண்டான் மனோஜ்.
மனோஜ் எழுந்துக் கொள்வதை கவனித்த கௌரவ்,
“மனோஜ், என்ன அதுக்குள்ளே எழுந்துட்டீங்க... உட்காருங்க... ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுப் போங்க...” என்றான்.
மனோஜ் பதிலாக சிரித்தான்...
மனோஜ் மறுத்துப் பேசுவான் என்று காத்திருந்த மஞ்சுவிற்கு அவனின் சிரிப்பு எரிச்சலைக் கொடுத்தது... அதனால்
“மனோஜ்க்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்லை கௌரவ்...” என்று மஞ்சுவே சொல்ல, கௌரவ் கிண்டலுடன் சிரித்தான்.
“கம் ஆன் மஞ்சு...” என்று அவன் அதே கிண்டலாக சொல்லவும், மஞ்சு மனோஜ் பக்கம் சூடான பார்வை ஒன்றை வீசினாள்...