என்று யோசித்தான்...
குடிப் பழக்கம் இருக்கிறதா என்று அவள் கேட்டதற்கே கிராமத்து பொண்ணா என்று கேட்டு விட்டு... உன்னை ஒருவன் அழகாக இருக்கிறாய் என்று சொன்னான், அவன் சரி இல்லை என்றால், மஞ்சு என்ன சொல்வாள்??
யோசித்தவன்,
“உன் ப்ராஜக்ட் எப்படி போகுது மஞ்சு?” என்று அவனாகவே பேச்சை ஆரம்பித்தான்.
மானால் ஏற்பட்ட சடன் ப்ரேக்கினால் ஓரளவிற்கு தெளிவாகி இருந்த மஞ்சு,
“நல்லா போகுது மனோஜ்... புதுசா நோ இஷ்யூஸ்... டூ டேஸ் பேக் கூட பெரிய அப்ரிஷியேஷன் கிடைச்சது... சேலஞ்சிங் ஜாப்... ஆனால் ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது...” என்றாள் இயல்பாக.
“எனக்கு இப்போ ப்ரோமோஷன் வந்திருக்கே பேசாம நீயும் என் ப்ராஜக்டுக்கே வரீயா? நான் உனக்கு ரெகமன்ட் செய்றேன்?”
மஞ்சு உடனே பதில் சொல்லாமல் யோசித்தாள்...
“உனக்கு பிடிக்கலைனா வேண்டாம் pbs...”
“பிடிக்குது, இல்லைன்னு இல்லை மனோஜ்... நீங்க ரெகமென்ட் செய்யாமல் நான் அந்த ப்ராஜக்டுக்கு வந்தாலே உங்க இன்ஃப்லூயன்ஸ்ல வந்த மாதிரி தான் இருக்கும்... இதுல நீங்க ரெகமென்ட் செய்தா???”
“அதெல்லாம் பார்த்தா எதுவுமே நடக்காது மஞ்சு...”
“ப்ச்...”