“யூ நோ வாட், ஐ விஷ் ஷீ இஸ் மை ஒய்ஃப்...” என முனுமுனுத்தான் கௌரவ்.
கோபத்துடன் கை முஷ்டிகளை மடக்கிய மனோஜ், என்ன செய்திருப்பானோ... என்ன பேசி இருப்பானோ... ஆனால் மஞ்சு அதற்குள் அனைவரிடமும் விடைப் பெற்று அங்கே வந்தாள்...
“போகலாம் மனோஜ்... பை கௌரவ்...” என்ற மஞ்சு மனோஜின் கையை பிடிக்கவும், மனோஜ் மேலே எதுவும் சொல்லாமல் கிளம்பி வந்தான்...
காரில் கிளம்பியப் பிறகும் இருவரும் சில வினாடிகள் பேசிக் கொள்ளவில்லை...
மஞ்சு பக்கம் பார்த்த கௌரவின் பார்வையும், பேச்சும் இப்போதும் மனோஜின் மனதுக்குள் புயல் அடிக்க செய்துக் கொண்டிருந்தது...
“மனோஜ், உங்களுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்கா??” என்று மஞ்சு அவளின் மனதில் இருந்த கேள்வியைக் கேட்கவும் மனோஜிற்கு கடுப்பாக இருந்தது!!
“உனக்கே அதுக்கு பதில் தெரியும் மஞ்சு...” என்றான் தன் மன நிலையை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சித்தப்படி...
“அப்போ ஏன் கௌரவ் கேட்டப்போ எதுவும் சொல்லாம சிரிச்சீங்க??”
“அது எல்லாம் பார்ட்டி எட்டுகட் (etiquette) மஞ்சு... நீ என்ன என்னவோ உலகமே தெரியாத ரிமோட் கிராமத்துல இருந்து வந்தவ மாதிரி கேள்வி கேட்குற?” என மனோஜ் இப்போது எரிந்து விழுபவனாக கேட்கவும்... அவனின் பதில் மஞ்சுவின் மனதில் சுறுக்கென்று தைத்தது...
கணவன் பக்கம் ஒருப் பார்வை பார்த்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்...
மனோஜும் பேச முயற்சிக்கவில்லை...